Friday 1 October 2021

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால்
என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர்
போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும் நல்ல தொடர்பு உள்ளது. இது வேறொன்றுமில்லை. சிவபெருமானால் ஆசீர்வதிக்கப்பட்ட அரிய முத்தாகக்கருதப்படும் ருத்ராக்ஷத்தை விளைவிக்கும் மரவகைகள்தாம் அந்த இலியோ கார்பஸ் கானிடிராஸ்.
அற்புத சக்திகளைக் கொண்டுள்ள ருத்ராக்ஷத்தை தரும் ருத்ராக்ஷ மரங்கள் இமயமலைப் பகுதி, நேபாளம், இந்தோனேஷியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே உள்ளனவாம். அரிய வகைத் தாவரமான
இவற்றிலிருந்து ருத்ராக்ஷத்தைச் சேகரிப்பதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது. 45 ரூபாயிலிருந்து 90,000 ரூபாய் வரை மதிப்புள்ள விதவிதமான ருத்ராக்ஷ மாலைகள் விற்பனையில் இருக்
கின்றன. ருத்ராக்ஷ மாலைகளில் பல சிறப்புகள் உள்ளன. இந்த ருத்ராக்ஷ மாலைகள் ஆன்மிக பலத்தைத் தருவதோடு பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும்
சக்தியைப் பெற்றவை. பொதுவாக ஒவ்வொரு ருத்ராக்க்ஷக் கொட்டைக்கும்
ஒவ்வொரு வகை குணம் உண்டு. இதை வகை பிரிப்பது கொட்டைகளில் உள்ள கோடுகளின் எண்ணிக்கையை
அடிப்படையாகக் கொண்டு தான். ஒரு கோடு இருந்தால் அதை ஒரு முகம் என்பர். இப்படி முகங்கள் அதிகமாக
அதிகமாக அந்தக் கொட்டைகளும் கிடைப்பது அரிதாகின்றன. உலகிலேயே மிக அரிதான ருத்ராக்க்ஷ கொட்டை
தான் இருபத்தொரு முகம் கொண்டது. 45 ரூபாயில் ஆரம்பித்து இலட்சம் வரை ருத்ராக்க்ஷத்தின் விலை இருக்கிறது. அவற்றில் இருபத்தொரு முகம் கொண்டது
கிடைப்பதற்கரியதாகும். அதனால் அதன் விலைதான் அதிகம். அதாவது இரண்டரை இலட்ச ரூபாய் வரை போகிறது.
ருத்ராக்க்ஷப் பழங்களைப் பக்குவப்படுத்திக் கிடைக்கப் பெறும் ருத்ராக்க்ஷக் கொட்டைகள் 250 ஆண்டுவரை நிலைத்திருக்குமாம்.
இப்போது பலரும் ருத்ராக்ஷத்தின் மதிப்பு மற்றும் மகிமை தெரிந்து வாங்க முனைவதால் போலிகளும்
சந்தையில் குவிந்துவிட்டன என்பது மறுக்க முடியாத உண்மை. போலி ருத்ராக்க்ஷ கொட்டைகள் பாக்கு மற்றும் மரத்தக்கையால் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இந்தப் போலிகளால் நமக்கு நிஜ ருத்ராக்ஷத்தின் பலன் கிடைக்காது. அது சரி, போலிகளை எப்படிக் கண்டு பிடிப்பது?
போலிகளைக் கண்டுபிடிக்க
ருத்ராக்க்ஷ கொட்டைகளில் இப்போது ஏகப்பட்ட போலிகள் வர ஆரம்பித்து விட்டன. உண்மையா?

போலியா? என்பதைக் கண்டு பிடிக்க இதோ சில வழிகள் - நீங்கள் ருத்ராக்ஷ மாலையை வாங்குகிறீர்கள் ! அதில்
உள்ள கொட்டைகள் உண்மையானதா? போலியானதா? என்று தெரிய, அதைத் தண்ணீரில் போடுங்கள்.
கொட்டைகள் அவ்வளவும் தண்ணீரில் மூழ்க வேண்டும். மிதந்தால், அது வெறும் கட்டையால் செய்யப்பட்டது அல்லது பூச்சிகளால் அரிக்கப்பட்டது என்பது அர்த்தம். ருத்ராக்க்ஷ கொட்டையில் உள்ள முகம் என்று அழைக்கப்படும் வரிகள் எல்லாம் ஒரே சீராக இருக்காது.
போலிகளில் எல்லா வரிகளும் சீராக இருக்கும். இரு தாமிர உலோகத்துக்கு இடையே வைத்தால், ருத்ராக்க்ஷ கொட்டை சட்டென திசை மாறும். தொட்டால்
நகரும். இது உண்மையான ருத்ராக்க்ஷ கொட்டை. தொடர்ந்து பயன்படுத்தினால் பளபளப்பாகும் ருத்ராக்க்ஷ கொட்டைகள் உண்மையான கொட்டைகள். போலியாக இருந்தால் காலப்போக்கில் சொரசொரப்பாகி விடும்.
கொட்டையின் மேற்பகுதி, வழுவழுப்பாக இருந்தால் போலி. ஆரம்பத்தில் சொரசொரப்பாகத்தான் இருக்க
வேண்டும். அதுதான் உண்மையானது.

ஸ்ரீ மஹா யோகினி பீடம், மன்னார்குடி.

#ஆன்மீகம் #பக்தி #ஆன்மீக_சிந்தனை

Tuesday 28 September 2021

மங்கல வாழ்வு தரும் குங்கும பிரசாதம் !

நவராத்திரி ஸ்பெஷல் !

மங்கல வாழ்வு தரும்  குங்கும பிரசாதம் !

பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் தங்கள் நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் அம்பாளின் குங்கும பிரசாதத்தை அணிந்துகொண்டால், எந்த ஆபத்தும் அணுகாது.

 குறிப்பாக திருமணமான பெண்கள் தங்கள் நெற்றியிலும், வகிட்டிலும் குங்குமம் இட்டுக் கொண்டால்,பிரம்மராட்சஸ் போன்ற ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.     

சிவபெருமானுக்கு விபூதி ஐஸ்வர்யமாகத் திகழ்வதுபோல், அம்பிகைக்கு குங்குமம் ஐஸ்வர்யமாக திகழ்கிறது. 

அம்பிகைக்குக் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு, அர்ச்சனை குங்குமத்தைப் பிரசாதமாகப் பெற்று அணிந்துகொண்டால், வீட்டில் அனைத்து மங்கலமும் ஏற்படுவதுடன் ஐஸ்வர்யங்களுக்கும் குறைவே இருக்காது.

நெற்றியில் குங்குமம் வைக்கும் முறை !

பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.

 குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. 

மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. 

கோவிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் இடுவதால், குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம். 

* வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

* பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

* தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

* திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் இடுவது சிறப்பு.

* ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் இடுவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

குங்குமம் தரிக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்...👇

*"மங்களங்களுக்கெல்லாம் மங்களம் அளிப்பதாயும் இங்கு நோய் விஷங்கள் தீமை எல்லாமும் ஒழிப்பதாயும்
 சங்கரி லலிதா தேவி தாயுருவாயும் உள்ள 
குங்குமம் தரிப்பவர்க்கு குறையற நன்மையாமே"* 

*குங்குமம் லக்ஷ்மி கடாக்ஷம் மிக்கது*

குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பது
குங்குமமாவது குடியினைக் காப்பது
குங்குமமாவது குணமதளிப்பது
குங்குமமாவது கொல்வினை தீர்ப்பது.

விதி வினை வெல்வது விமலையின் குங்குமம்
நிதிதனை ஈவது நிமலையின் குங்குமம்
பதிதனைக் காப்பது பதிவிரதை குங்குமம்
கதிதனையாள்வதும் குங்குமமாமே

தஞ்சமென்றோரை தடுத்தாண்டு கொள்வதும்
பஞ்ச மாபாதகம் பரிந்துமே தீர்ப்பதும்
அஞ்சின பேர்க்கு அபயமளீப்பதும்
கஞ்சி காமாக்ஷி குங்குமமாமே

நற்பத மீவது நாரணி குங்குமம்
பொற்பினை ஈவது பூரணி குங்குமம்
சிற்பரமாவது சிவகாமி குங்குமம்
கற்பினைக் காப்பதும் குங்குமமாமே

செஞ்சுடர் போல்வது சீரான குங்குமம்
கொஞ்சு மழகைக் கொடுப்பது குங்குமம்
அஞ்சு புலங்களடக்கி யருள்வதும்
கஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே

நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறிவீவதும்
பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
தாயினை அர்ச்சித்த குங்குமமாமே

சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
சித்தி தருவதும் குங்குமமாமே

நெஞ்சிற் கவலைகள் நீக்கியருள்வதும்
செஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும்
வஞ்ச பகைவரை வாட்டி யருள்வதும்
கஞ்சி காமாக்ஷி குங்குமமாமே

சிவசிவ என்று திருநீறணிந்த பின்
சிவகாமியேயென் சிந்தித்தணிவதும்
தவமான மேலோருந்தரித்துக் களீப்பதும்
பவவினை தீர்ப்பதும் குங்குமமாமே

எவையெவை கருதிடில் அவையவையீவதும்
நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேர்க்கு
குவிநிதி யீவதும் குங்குமமாமே

அஷ்டலக்ஷ்மி அருளதளிப்பதும்
இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
கஷ்டம் தவிர்ப்பதும் காத்தெனை யாள்வதும்
சிஷ்டராய் செய்வதும் குங்குமமாமே

குஷ்டம் முதலான மாரோகம் தீர்ப்பதும்
நஷ்டம் வாராதொரு நலனைக் கொடுப்பதும்
எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை
கிட்டவே செய்வதும் குங்குமமாமே

பட்ட காலிலே படுமென கஷ்டங்கள்
விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
பட்டான பார்வதி பாதம் பணீந்தே
இட்டார் இடர் தவிர் குங்குமமாமே

சித்தம்தனை சுத்தி செய்வதற் கெளியதோர்
எத்துந் தெரியாத ஏமாந்த மாந்தரே
நித்தம் தொழுதென்னை குங்குமந்தன்னை
நித்தம் தரித்துமே வீடடைவீரே

மிஞ்சும் அழகுடன் குங்குமம் தன்னை
செஞ்சுடராகுமோர் கஞ்சி காமாக்ஷியின்
கஞ்ச மலர் முகந்தன்னில் திகழ்வதும்
பஞ்ச நிதி தரும் குங்குமாமே.

மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக இருக்க உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள்..

நவராத்திரி விழா நல்வாழ்த்துகள் !!!

Monday 27 September 2021

பிள்ளையாருக்கு ஏன் தோப்புக்கரணம் போட வேண்டும் ?

பிள்ளையாருக்கு ஏன் தோப்புக்கரணம் போட வேண்டும் ?


பிள்ளையார் மிகவும் எளிமையான கடவுள். மஞ்சள்பொடி, பசுஞ்சாணம் எதைப் பிடித்து வைத்தாலும் பிள்ளையார் ஆவாஹணம் ஆகிவிடுவார். அவருடைய வழிபாடும் மிக எளிமையானது. சின்னச் சின்ன வழிபாடுகளிலேயே மகிழ்ந்து, நாம் கேட்கும் வரங்களை உடனுக்குடன் கொடுத்துவிடுவார்.
தோப்புக்கரணம்

நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் போடுவதும் பிள்ளையாரை வழிபடும்போது பக்தர்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய நியதிகள் ஆகும். இப்படி விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதன் பின்னணியில் இருக்கும் தத்துவம் பற்றி விளக்குகிறார் வேத விற்பன்னர் சுந்தரேசஷர்மா.

”விநாயகருக்கு முன்பாக இரண்டு கைகளையும் நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வார்கள். இரண்டு காது மடல்களையும் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவார்கள். இதன் பின்னணியில் சுவாரஸ்யமான ஒரு புராணக் கதை சொல்லப்பட்டு இருக்கிறது.

முன்பொரு சமயம், கஜமுகாசுரன் என்ற அரக்கன் சிவபெருமானை நோக்கி கடும்தவம் புரிந்தான். அவனது தவ வலிமையைக்கண்டு சக்திமிக்க பல வரங்களை அவர் வழங்கினார். இத்தனை வரங்களைப் பெற்றதும் கஜமுகாசுரன் தனது சேஷ்டைகளைத் தொடங்கிவிட்டான். பலவிதத்திலும் மக்களுக்கும், தேவர்களுக்கும் கணக்கிலடங்காத துன்பங்களைக் கொடுத்தான்.  ஒவ்வொரு நாளும், தேவர்களை சின்னக் குழந்தைகளைப் போல பாவித்து, அவர்களை காலை, மதியம், மாலை, இரவு எனப் பாராமல் தொடர்ந்து 1,008 தோப்புக்கரணங்கள் போடச்சொன்னான்.
தனால்  தேவர்கள் உலக இயக்கத்துக்கு தங்களது கடமைகளை ஆற்றமுடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். இதை சிவபெருமானிடம் சொல்லி வருந்தினர். உலகையெல்லாம் காத்து ரட்சிக்கும் இறைவன் கஜமுகாசுரனை அழிப்பதற்கு விநாயகரை அனுப்பி வைத்தார்.

விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் நடைபெற்ற பெரும் போரில் அவனது படை முற்றிலும் அழிந்தது. ஆனால், அவனை மட்டும் அழிக்க முடியவில்லை. எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது எனும் வரத்தை வாங்கி இருந்ததால், அவனை விநாயகரால் அழிக்க முடியவில்லை. உடனே, விநாயகர் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து சிவ மந்திரத்தைச் சொல்லி வீசவே கஜமுகாசுரனின்  அசுர உருவம் அழிந்து பெருச்சாளி வடிவமாகி விநாயகரைப் பணிந்து நின்றான்.
விநாயகரும், அவனை மன்னித்து தனது வாகனமாக்கிக் கொண்டார். நிலைமை கட்டுக்குள் வந்து சகஜமானதும், தேவர்கள் விநாயகப் பெருமானை வணங்கி மும்முறை நெற்றிப் பொட்டில் கொட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டனர்.

இதைப் போலவே இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.
ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் கையுமாக வந்து கொண்டிருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகப் பெருமான் அக்கமண்டல நீரை தட்டி விட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடிவந்தது. காகம் தட்டியதும் விரிந்து பரந்து ஓடியதால் காவிரி என்ற பெயர் அந்நதிக்கு உண்டானது.

கமண்டலத்தை தட்டி விட்ட காகத்தை அகத்தியர் திரும்பிப் பார்த்தார்.அதைக்காணவில்லை. காகம் நின்ற இடத்தில்  ஒரு சிறுவன் நின்றிருந்தான். செய்வதையும் செய்துவிட்டு முனிவரைப் பார்த்துச் சிரித்தான். கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன்தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்றெண்ணி, அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால், அச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றான். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார்.

இவ்விதமாகத்தான் விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் ஒரு அம்சமானது.

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவதன் மூலமும், நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்வதன் மூலமும் நம் உடலில் இருந்து குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்படுகிறது. நமது நாடி நரம்புகள் சுறுசுறுப்படைந்து, உடலும் மனமும் உற்சாகம் கொள்கின்றது. இந்த நிகழ்வு வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது

தோப்புக்கரணம் போடும்போது வலது காதுமடலின் கீழ்ப்பகுதியை இடது கையாலும், இடது காது மடலின் கீழ்ப்பகுதியை வலதுகையாலும்  அழுத்திப்பிடிக்க வேண்டும். இடதுகை உள்ளேயும் வலதுகை வெளியேயும் இருக்குமாறு தோப்புக்கரணம் போட வேண்டும்.

நமது வலது பக்க மூளை இடது பக்கத்திலும் இடது பக்க மூளை வலது பக்கத்திலும் இருப்பதால் கைகளை நாம் பிடிக்கும்போது சரியான அளவில் அவை தூண்டப்படுகின்றன.

காதுமடல்களை ஒட்டிச் செல்லும் நரம்புகளை நாம் பிடித்து இழுப்பதால் நமது ஞாபகசக்தி அதிகரிப்பதாக இன்றைய அறிவியல் உலகம் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள் இதை அந்தக் காலத்திலேயே கண்டறிந்து வைத்திருக்கின்றனர்.

தோப்புக்கரணம்  போடுவதால் மூளையின் செயல்பாடு அதிகரித்து புதுவித சக்தியும் உற்சாகமும் ஏற்படுகின்றது. படிப்பு, எழுத்து, கணிதம் போன்றவற்றில் கவனம் அதிகமாகும்.

இறைவழிபாட்டுடன், சிறந்த உடற்பயிற்சியாகவும் இருப்பதுடன் ஆத்ம சங்கல்பத்தை, லட்சியத்தில் வைராக்கியத்தை ஏற்படுத்துகின்றது.

Thursday 13 December 2018

உலகிலேயே அதிக சக்திவாய்ந்த ஆறு சிவ மந்திரங்கள்

இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவர் சிவபெருமான். 
அவர் இரக்கத்தின் சின்னமாக விளங்குகிறார். படைத்தல் காத்தல் அழித்தல் என்பதில் அழித்தல் தொழிலை ஏற்று இருப்பவர், சிவபெருமான்.
ஆனால் இவரை எளிதில் மகிழ்விக்க முடியும். பயத்தைப் போக்க சிவ மந்திரங்களை படிக்கலாம். சிவ மந்திரத்தை உச்சரிப்பதால் நோய்களில் இருந்து விடுபட முடியும். பயம் மற்றும் கவலைகள் பறந்து விடும்.
சிவ மந்திரங்கள்
இந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் காரிய சித்தியும் வாய்க்கும். ஒரு மனிதரின் ஆழ் மனது வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் சக்தி சிவ மந்திரத்திற்கு உண்டு. உடல், மனம் ஆன்மா என்று சகலத்தையும் சுத்தம் செய்யும் தன்மை இந்த மந்திரங்களுக்கு உண்டு. மனித வாழிவில் அன்றாடம் கடந்து வரும், மன அழுத்தம், சோர்வு, தோல்வி, புறக்கணிப்பு, மற்றும் இதர எதிர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றைப் போக்க இந்த மத்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு தனி நபர், உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்வாக விரக்தியாக ஆற்றல் இழந்து இருக்கும்போது சிவ மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். பிறந்த ஜாதகத்தி;ல் உள்ள எதிர்மறை ஆற்றலைப் போக்கும் சக்தி சிவ மந்திர ஜெபத்திற்கு உண்டு. சிவபெருமானுக்கு பல மந்திரங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு தனி நன்மைகள் உண்டு. அவற்றைப் பற்றி இந்த பதவில் காணலாம்
பஞ்சாக்ஷர சிவ ந்திரம்:
ஓம் நமசிவாய
சிவபெருமானை போற்றிவதில் இந்த மந்திரம் அனைவராலும் அறியப் பட்டது. 'நான் சிவபெருமை வழிபடுகிறேன்' என்பது இதன் பொருளாகும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.
ருத்ர மந்திரம் :
ஓம் நமோ பகவதே ருத்ரே
இது ருத்ர மந்திரமாகும். இறைவன் சிவபெருமானின் ஆசிகளைப் பெற இந்த மத்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது ஒரு விருப்பத்தின் நிறைவேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
சிவ காயத்ரி மந்திரம் :
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்
இந்து மதத்தில், காயத்திரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். சிவகாயத்திரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மன அமைதிக்காகவும் இறைவன் அருளைப் பெறவும் தினமும் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.
சிவா தியான மந்திரம்:
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ
நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.
  
மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
அழிக்கும் கடவுளாக சிவபெருமான் இருப்பதால் மனிதனின் இறப்பு குறித்த பயத்தைப் போக்கவும் அவரே உரியவர். ஆகவே மகா மிருத்யுஞ்சய் மந்திரம் இந்த பலனை நமக்கு அளிக்கும்.
  
ஏகதசா ருத்ர மந்திரம்
இது 11 மந்திரங்கள் அடங்கிய ஒரு ஜெபம் ஆகும். இறைவன் சிவ பெருமானை வெவ்வேறு வடிவங்களில் வழிபட இந்த மத்திரங்கள் பயன்படுகிறது. வருடத்தில் உள்ள மாதங்களைக் குறிக்கும் ஒரு மந்திரமாக இது விளங்குகிறது. நீங்கள் பிறந்த மாதத்திற்கான மந்திரத்தை நீங்கள் உச்சரிப்பதால் நல்ல பலனை பெறுவீர்கள். ஆனால் எல்லா 11 மந்திரங்களையும் சேர்த்தும் சொல்லலாம். சிவராத்திரி அன்று மகா ருத்ர யக்னம் நடைபெறும்போது இந்த பதினோரு மந்திரங்களையும் உச்சரிப்பது மிகுந்த பலனைத் தரும்.
கபாலி:
ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்
பிங்களா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சர்வ மங்கலாய பின்கலாய ஓம் நமஹா


சௌந்தர்ய லகரி Soundarya Lahari

(சௌந்தர்ய லகரி) என்னும் நூல் வீரை கவிராச பண்டிதர்  இயற்றிய நூல்களில் ஒன்று.
ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் அம்பிகையைப் புகழ்ந்து வடமொழியில் ஒரு நூல் எழுதினார். அது 100 சுலோகங்களைக் கொண்டது. முதல் 40 சுலோகங்கள் அம்பிகையின் அருளைப் புகழ்கின்றன. இது ஆனந்த லகரி (ஆனந்த வெள்ளம்). அடுத்த 60 சுலோகங்கள் அம்பிகையின் அழகைப் புகழ்கின்றன. அது சௌந்தரிய லகரி (அழகு வெள்ளம்).
இதனை மொழிபெயர்த்து வீரை கவிராச பண்டிதர் தமிழில் எழுதினார்.
வடமொழி நூலிலுள்ள பகுப்பைப் போலவே 40, 60 என்னும் பகுப்பு தமிழ்நூலிலும் உள்ளது.


 (1)
शिवः शक्त्यायुक्तो यदि भवति शक्तः प्रभवितुं
न् चेदेवं देवो न खलु कुशलः स्पन्दितुमपि ।
अतस्त्वामाराध्यां हरिहरविरिञ्चादिभिरपि
प्रणन्तुं स्तोतुं वा कथमकृतपुण्यः प्रभवति ॥१॥

 Shivah shakthya yukto yadi bhavati shaktah prabhavitum
Na chedevam devo na khalu kusalah spanditumapi;
Atas tvam aradhyam Hari-Hara-Virinchadibhir api
Pranantum stotum vaa katham akrta-punyah prabhavati 

 சகல உலகங்களையும் படைக்கும் ஈசன், சக்தியாகிய 
உன்னுடன் இணைந்தால்தான்  இந்த  உலகத்தை 
படைக்க முடியும்.சக்தி இல்லாமல் சிவனால் 
செயல்படமுடியாது .  மும்மூர்த்திகளான சிவன், 
விஷ்ணு,பிரம்மா ஆகியோர் ,துதிக்கின்ற உன்னை 
முன் ஜென்ம புண்ணியம்  இல்லாவிட்டால் துதிக்கவும், 
வணங்கவும்  முடியுமோ ?
     
(2)  
 तनीयांसं पासुं तव चरणपङ्केरुहभवं
विरिञ्चिः सञ्चिन्वन् विरचयति लोकानविकलम् ।
वहत्येनं शौरिः कथमपि सहस्रेण शिरसां
हरः संक्षुद्यैनं भजति भसितोद्धूलन विधिम्  ॥२॥ 

Taniyamsam pamsum tava carana-pankeruha-bhavam
Virincih sanchinvan virachayati lokan avikalam;
Vahaty evam Shaurih katham api sahasrena shirasaam
Harah samksudy'ainam bhajati bhajati bhasito'ddhalama-vidhim.

    உன்னுடைய  பாத  தூளியைச் சேர்த்து , பிரம்மா , இந்த  
உலகைப்  படைக்கிறார் .  ஆயிரம்  தலை  உடைய   
ஆதிசேஷனான  திருமால் , அந்த பாத தூளியான சகல   
 உலகத்தையும்   தாங்குகிறார் .  சிவனானவர் இந்த
பாததூளியை விபூதியாக உடல் முழுவதும்  
பூசிக்கொள்கிறார்.       

(3)
अविद्यानामन्तस्तिमिरमिहिरद्वीपनगरी
जडानां चैतन्यस्तबकमकरन्दस्रुतिझरी ।
दरिद्राणां चिन्तामणिगुणनिका जन्मजलधौ
निमग्नानां दंष्ट्रा मुररिपुवराहस्य भवति ॥३॥
   
Avidyanam antas-timira-mihira-dweeppa-nagari
Jadanam chaitanya-stabaka-makaranda-sruti jhari
Daridranam cinta-mani-gunanika janma-jaladhau
Nimadhanam damshtra mura-ripu-varahasya bhavati.  

 அம்மா ! உன்னுடைய பாத தூளி யானது,  இருளை 
அகற்றும்  சூரியன்  போல் ,அறியாமை   என்னும் இருள்
 அகற்றி , ஞானனத்தை நல்கும் . ஏழைக்கு துயர் 
துடைக்கும் சிந்தாமணி போன்றது. பிரளய  காலத்தில்,  
திருமால் வராக  அவதாரம் எடுத்து , எப்படி இந்த   உலகை 
 கப்பாற்றி னாரோ,   அதுபோல்   பிறவிக்கடலைக்  கடக்க
 அபயம் தரக்கூடியது . 

(4)
   त्वदन्यः पाणिभ्यामभयवरदो दैवतगणः
त्वमेका नैवासि प्रकिटितवराभीत्यभिनया  ।
भयात्त्रातुं दातुं फलमपि च वाञ्झासमधिकं
शरण्ये लोकानां तव हि चरणावेव निपुणौ ॥४॥

Tvad anyah paanibhyam abhaya-varado daivataganah
Tvam eka n'aivasi prakatita-var'abhityabhinaya;
Bhayat tratum datum phalam api cha vancha samadhikam
Saranye lokanam tava hi charanaveva nipunav. 

 தாயே ! மற்ற தேவர்களும்,தெய்வங்களும், அபயவர  
பிரதானத்தை ,தங்கள்  அபிநய முத்திரைகளால்  காட்ட, 
நீ மட்டும் அபிநயம் காட்டுவதில்லை. ஏனென்றால் ,  இந்த
  அபயவர பிரதானத்தை விட அதிகமாக , வேண்டிய  
வரங்களைக்  கொடுப்பதற்கு உன் பாத தாமரை  போதுமே .

(5)
हरिस्त्वामाराध्य प्रणतजनसौभाग्यजननीं
पुरा नारी भूत्वा पुररिपुमपि क्षोभमनयत्
स्मरोऽपि त्वां नत्वा रतिनयनलेह्येनवपुषा
मुनीनामप्यन्तः प्रभवति हि मोहाय महताम् ॥५॥

Haris tvam aradhya pranata-jana-saubhagya-jananim
Pura nari bhutva Pura-ripum api ksobham anayat;
Smaro'pi tvam natva rati-nayana-lehyena vapusha
Muninam apyantah prabhavati hi mohaya mahatam.

 சகல  நமைகளைத் தரும்  தேவீ ! மகாவிஷ்ணு, உன்னை
 வணங்கி , அழகான பெண் உருவம்  கொண்டு ,சிவனை 
மோகம் கொள்ளச் செய்கிறார். மன்மதன் உன் பாத 
கமலத்தை வணங்கி, மூஉலக அழகனாகி,  முற்றும் 
துறந்த முனிவர்களின் மனதில், மோகத்தை 
உண்டுபண்ணுகிறான். 

(6)
धनुः पौष्पं मौर्वी मधुकरमयी पञ्चविशिखाः
वसन्तः सामन्तो मलयमरुदायोधनरथः ।
तथाप्येकः सर्वं हिमगिरिसुते कामपि कृपा-
मपाङ्गात्ते लब्ध्वा जगदिदमनङ्गो विजयते ॥६॥

Dhanun paushpam maurvi madhu-kara-mayi pancha visikha
Vasantaha samanto Malaya-marud ayodhana-rathah;
Tatha'py ekah sarvam Himagiri-suthe kam api kripaam
Apangat te labdhva jagadidam Anango vijayate

 மன்மதனுடைய வில் மலர்களால் ஆனது.  நாண்  
வண்டுகளின் வரிசை. பாணங்கள் மலர்களே.  
அமைச்சன் இளவேனிற்காலம் .    தேரோ தென்றல் காற்று . 
  இவைகளோடு கூடிய   உருவமற்ற   மன்மதன் உன் 
அருளினால் இந்த  உலகத்தையே   ஜெயிக்கின்றான் .

(7)
   
क्वणत्काञ्चीदामा करिकलभकुंभस्तननता
परिक्षीणामध्ये परिणतशरच्चन्द्रवदना ।
धनुर्बाणान् पाशं सृणिमपि दधाना करतलैः
पुरस्तादास्तां नः पुरमथितुराहोपुरुषिका ॥७॥

Kvanat-kanchi-dama kari-kalabha-kumbha-stana-nata
Pariksheena madhye parinata-sarachandra-vadana;
Dhanur banan pasam srinim api dadhana karatalaii
Purastad astam noh Pura-mathitur aho-purushika.

  முழுநிலவு   போன்று  மலர்ந்த  முகத்துடனும் , இடையிலே
  ஒட்டியாண  சலங்கை ஓசையுடனும்,  யானையின் 
கும்பத்தைப் போன்று ஸ்தனபாரத்துடனும் , கைகளில் 
கரும்புவில், மலர்பானம் , பாசக்கயிறு, ஈ ட்டிகரங்களுடன்  
 அலங்காரமாகத் தோன்றும் அன்னையே ! எங்களுக்கு 
காட்சி தருவாயாக  ! 

(8)
सुधासिन्धोर्मध्ये सुरविटपिवाटीपरिवृते
मणिद्वीपे नीपोपवनवति चिन्तामणिगृहे ।
शिवाकारे मञ्चे परमशिवपर्यंकनिलयां
भजन्ति त्वां धन्याः कतिचन चिदानन्दलहरीम् ॥८॥ 

Sudha-sindhor madhye sura-vitapi-vati parivrte
Mani-dweepe nipo'pavana-vathi chintamani-grhe;
Shivaakare manche Parama-Shiva-paryanka-nilayam
Bhajanti tvam dhanyah katichana chid-ananda-laharim.

 அமிர்தகடலின் மத்தியில் , கடம்பவன காடுகளால் 
சூழப்பட்டு , சிந்தாமணி என்னும் ஒருவகை ரத்தினத்தால்
 நிர்மாணிக்கப்பட்ட  மணித்வீபம்  என்னும்  
அரண்மனையில் அந்தப்புரத்தில் பரமசிவனுடைய 
மடியில்,  ஆனந்த  சல்லாபத்துடன்  சயனித்திருக்கும் 
அன்னையே ! உன்னை வணங்குபவர்களே  
உயர்ந்தவர்கள் .    

(9)
महीं मूलाधारे कमपि मणिपूरे हुतवहं
स्थितं स्वाधिष्ठाने हृदि मरुतमाकाशमुपरि ।
मनोऽपि भ्रूमध्ये सकलमपि भित्त्वा कुलपथं
सहस्रारे पद्मे सह रहसि पत्या विहरसे ॥९॥ 

Mahim muladhare kamapi manipure huthavaham
Sthitham svadhistane hridi marutamakasam upari;
Mano'pi bhruu-madhye sakalamapi bhittva kula-patham
Sahasrare padme saha rahasi patyaa viharase.

  மூலாதார  ( பூமி  ),  ஸ்வாதிஷ்டான ( அக்னி ), மணிபூரக 
(நீர் ) , அனாகத ( வாயு  ),  விசுத்தி  (ஆகாயம்) என்ற பஞ்ச
 பூதத்தையும் , ப்ருத்வி மனோமாயா , சுத்தவித்யா , 
மகேஸ்வர, சதாசிவ தத்வம் என்னும் நால்வகை  
தத்வங்களையும்  தாண்டி  சந்திர மண்டலத்தில் ஆயிரம் 
இதழ்களைக் கொண்ட  தாமரையில் சதாசிவனுடன் கூடி 
அன்னை  மகிழ்கின்றாள் .  

(10)
सुधाधारासारैश्चरणयुगलान्तर्विगलितैः  
प्रपञ्चं सिञ्चन्ती पुनरपि रसाम्नायमहसः ।
अवाप्य स्वां भूमिं भुजगनिभमध्युष्टवलयं
स्वमात्मानं कृत्वा स्वपिषि कुलकुण्डे कुहरिणि ॥१०॥

Sudha-dhara-sarais carana-yugalanta vigalitaih
Prapancham sinchanti punarapi ras'amnaya-mahasah;
Avapya svam bhumim bhujaga-nibham adhyusta-valayam
Svam atmanam krtva svapishi kulakunde kuharini

  சந்திர   மண்டலத்திலிருக்கும்    அன்னையின் 
திருவடிகளிலிருந்து பெருகும் அமிர்த வெள்ளமானது , 
இந்த உலகமாகிய  உடலின்   நாடிகளை நனைக்கிறது .  
பிறகு சந்திர மண்டலத்திலிருந்து ஒரு சர்பமாகத்  
தன்னைச் சுற்றிக்கொண்டு , தன்னுடைய ஆதாரமான 
மூலாதார சக்கரத்தில் கண்ணுக்குத் தெரியாமல் 
அன்னை  யோகநித்திரை  செய்கிறாள். 

(11)
चतुर्भिः श्रीकण्ठैः शिवयुवतिभिः पञ्चभिरपि
प्रभिन्नाभिश्शंभोर्नवभिरपि मूलप्रकृतिभिः ।
चतुश्चत्वारिंशद्वसुदलकलाश्रत्रिवलय-
त्रिलेखाभिस्सार्धं तव शरणकोणाः परिणताः ॥११॥

Chaturbhih shri-kantaih shiva-yuvatibhih panchabhir api
Prabhinnabhih sambhor navabhir api mula-prakrthibhih;
Chatus-chatvarimsad vasu-dala-kalasra-trivalaya-
Tri-rekhabhih sardham tava sarana-konah parinatah

 சிவச் சக்கரங்கள் 4 , சக்திச் சக்கரங்கள் 5 , இந்த மூலச் 
சக்கரங்களான 9  சக்கரங்களோடு,  அஷ்டதள ( 8 ) , 
சோடசதள( 16), த்ரிவலய ( 3 சுற்று ), த்ரீ ரேகைகளோடு     
( 3கோடுகள் ) கூடிய உன் இருப்பிடம் ,           நாற்பத்தி  
நான்கு     கோணங்கள்      கொண்ட   உன் ஸ்ரீ சக்கரமாக 
விளங்குகிறது.   

(12)
त्वदीयं सौन्दर्यं तुहिनगिरिकन्ये तुलयितुं
कवीन्द्राः कल्पन्ते कथमपि विरिञ्चिप्रभृतयः
यदालोकौत्सुक्यादमरललना यान्ति मनसा
तपोभिर्दुष्प्रापामपि गिरिशसायुज्यपदवीम्  ॥१२॥

Tvadiyam saundaryam Tuhina-giri-kanye tulayitum
Kavindrah kalpante katham api Virinchi-prabhrutayah;
Yadaloka'utsukyad amara-lalana yanti manasa
Tapobhir dus-prapam api girisa-sayujya-padavim.

 தேவீ ! உன் மேனியின்  அழகினைப் பார்த்து , ரம்பை , 
ஊர்வசி போன்ற தேவலோக மங்கையரும் கூட, 
ஆசைப்படுகிறார்கள் . படைக்கும் கடவுள்   
பிரம்மாவினால்  கூட உன்னுடைய பேரழகை   
வருணிக்க முடியவில்லை . அந்த பேரழகை  
பரமசிவனால் மட்டுமே அனுபவிக்க முடியும் .
 எனவே பரம  தபஸ் விகளால்  கூட அடைய முடியாத
 அந்த  சிவசாயுஜ்ய  பதவியை , தேவலோகப் பெண்கள்  
மனதால் அடைய விரும்புகிறார்கள்   .

(13)
नरं  वर्षीयांसं नयनविरसं नर्मसु जडं
तवापांगालोके पतितमनुधावन्ति शतशः
गलद्वेणीबन्धाः कुचकलशविस्रस्तसिचया
हठात्त्रुट्यत्काञ्च्यो विगलितदुकूला युवतयः ॥१३॥

Naram varshiyamsam nayana virasam narmasu jadam,
Thava panga loke pathitha manudhavanthi sathasa
Gala dweni bhandha kuch kalasa visthrutha sichaya
Hatath thrudyath kanchyho vigalidha dhukoola yuva thaya.

 தாயே ! ஒருவன் எவ்வளவு வயதானவனாக இருந்தாலும் ,
 அழகில்லாமல் உடல் பலம்  அற்றவனாக இருந்தாலும் ,
 காமரச சல்லாபம் தெரியாதவனாக இருந்தாலும் , உன் 
பார்வை அவன் மீது பட்டால், இளவயது மங்கையரும் கூட ,
கூந்தல் அவிழ , மேலாடை நழுவ , இடையினில் 
ஒட்டியாணம் தெறிக்க, தன்னை மறந்து அவன் மீது   
மோஹம் கொண்டு , அவனை மன்மதன்  என்று எண்ணி 
அவனைத் தொடர்வார்கள் . 

(14)
क्षितौ षट्पञ्चाशद् द्विसमधिकपञ्चाशदुदके
हुताशे द्वाषष्टिश्चतुरधिकपञ्चाशदनिले ।
दिवि द्विषट्त्रिंशन्मनसि च चतुःषष्टिरिति ये
मयूखास्तेषामप्युपरि तव पादांबुजयुगम् ॥१४॥

Ksitau sat-panchasad dvi-samadhika-panchasadudake
Hutase dva-sastis chatur-adhika-panchasad anile;
Divi dvih-shatrimsan manasi cha chatuh-sashtir iti ye
Mayukhastesham athyupari tava padambuja yugam.

 தாயே !  உன்னுடைய பாத  கமலம்  ஆதார  
சக்கரங்களான  மூலாதாரத்தில் 56 ( பூமி ), 
மணிபூரகத்தில் 52 ( நீர் ) ,  சுவாதிஷ்டானத்தில் 62 (அக்னி ), 
அனாகதத்தில் 54 (வாயு), விசுத்தியில் 72 (ஆகாயம் ), 
ஆஜ்ஞா சக்கரத்தில்  64  ஆகிய  இந்த கிரணக்களுக்கு
 மேலே ஆயிரம் தள தாமரையில் ஒளிர்கின்றது .  

(15)
  शरज्ज्योत्स्नाशुद्धां शशियुतजटाजूटमकुटां
वरत्रासत्राणस्फटिकघुटिकापुस्तककराम् ।
सकृन्नत्वा नत्वा कथमिव सतां सन्निदधते 
मधुक्षीरद्राक्षामधुरिमधुरीणा फणितयः  ॥१५॥

Saraj-jyotsna-shuddham sasi-yuta-jata-juta-makutam
Vara-traasa-traana-sphatika-ghutika-pustaka karaam;
Sakrn na thva nathva katham iva sathaam sannidadhate
Madhu-kshira-drakhsa-madhurima-dhurinah phanitayah. 

 இலையுதிர்  காலச் சந்திரனைப் போன்று 
வெண்மையான உடல் அழகினைக் கொண்டவளும் ,  
சந்திரனை மகுடமாகத் தரித்தவளும் ,  அபய வரப்  
பிரதான முத்திரைகளுடன் ,கையில் புத்தகம் , 
ஸ்படிகமாலை இவைகளை  உடையவளுமான 
உன்னை ஒரு முறையாவது வணங்குகின்ற பக்தனுக்கு ,  
தேன் , பால் , திராட்ஷை இவைகளையும் விட ,மிக
இனிமையான வாக்கு பலம் கிடைக்கும் என்பது நிச்சயமே .

(16)
कवीन्द्राणां चेतःकमलवनबालातपरुचिं
भजन्ते ये सन्तः कतिचिदरुणामेव भवतीम् ।
विरिञ्चिप्रेयस्यास्तरुणतर शृंगारलहरी-
गभीराभिर्वाग्भिर्विदधति सतां रञ्जनममी ॥१६॥

Kavindranam chetah-kamala-vana-baal'atapa-ruchim
Bhajante ye santah katichid arunameva bhavatim;
Virinchi-preyasyas tarunatara sringara-lahari-
Gabhirabhi vagbhir vidadhati satam ranjanamami.
  
 கவிகளின் மனமாகிய தாமரை மலரை மலரச்  செய்கின்ற , இளஞ்  சூரியனைப்  போல் செந்நிற மேனி அழகை உடையவளே ! உன்னை வணங்குபவர்களுக்கு , காலத்தைக் கடந்த ஒரு பக்திப் பரவச நிலை ஏற்பட்டு (விழிப்புணர்வு) , அதன்  மூலம் சரஸ்வதியின் அருள்  பெற்று ,  தெய்வீகக் கவிகள் படைக்கும் திறமை பெற்று  , அதனால்  மற்றவர்களையும் மகிழ்விக்கின்றனர்.
(17)
सवित्रीभिर्वाचां शशिमणिशिलाभंगरुचिभिः
वशिन्याद्याभिस्त्वां सह जननि सञ्चिन्तयति यः।
स कर्ता काव्यानां भवति महतां  भंगिरुचिभि-
र्वचोभिर्वाग्देवी वदनकमलामोदमधुरैः  ॥१७॥
Savitribhir vacham Chasi-mani-sila-bhanga-rucibhir
Vasiny'adyabhis tvam saha janani samchintayati yah;
Sa karta kavyanam bhavati mahatam bhangi-rucibhih
Vacobhi vagdevi-vadana-kamal'amoda madhuraii..


 சந்திரகாந்தக் கற்கள்  போல் ,வெண்மையான வசினி முதலாய  வாக்தேவதைகளால்   சூழப்பட்டவளே ! உன்னை  முழு மனதுடன் தியானம் செய்பவனுக்கு , மஹா கவிகளின் வாக்குகள் போல் , சரஸ்வதி தேவியின் இனிமையான  வாக்விலாசத்தை உடையவனாய் , மஹா காவியங்கள் படைக்கும் திறமை உடையவனாய் ஆகின்றான் . 
(18)
तनुच्छायाभिस्ते तरुणतरणिश्रीसरणिभि-
र्दिवं सर्वामुर्वीमरुणिमनिमग्नां स्मरति यः।
भवन्त्यस्य त्रस्यद्वनहरिणशालीननयनाः
सहोर्वश्या वश्याः कति कति न गीर्वाणगणिकाः ॥१८॥
Thanuschayabhi sthe tharuna-tharuni -srisarinibhi
Divam sarva-murvi-marunimani magnam smaranthi ya
Bhavanthasya thrasya-dhwana-harina shaleena nayana
Sahervasya vasya kathikathi na geervana Ganika

 உதய சூரியன் போல், உன் மேனியிலிருந்து வருகின்ற அழகான சிவந்த  கிரணங்களினால்,  இந்த பூமி, ஆகாயம்  முழுவதும் சிவப்பு  நிறத்தில் மூழ்கி இருப்பதாக (அருணா தேவீ ரூபம்)   தியானம் செய்யும் பக்தர்களிடம் , மருண்ட மான் விழிகளைக் கொண்ட, ரம்பை ஊர்வசி  போன்ற தேவலோக பெண்களும் வசப்படுகிறார்கள் . அப்படியிருக்க சாதாரண  பெண்களைப்பற்றிச் சொல்லவும்  வேண்டுமோ ?
(19)
मुखं बिन्दुं कृत्वा कुचयुगमधस्तस्य तदधो
हरार्धं ध्यायेद्यो हरमहिषि ते मन्मथकलाम्
स सद्यः संक्षोभं नयति वनिता इत्यति लघु
त्रिलोकीमप्याशु भ्रमयति रवीन्दुस्तनयुगाम्  ॥१९॥
Mukham bindun kruthva kucha yuga mada sthasya thadha dho
Harardha dhyayedhyo haramamahishi the manmathakalam
Sa sadhya samkshebham nayathi vanitha inyathiladhu
Thrilokimapyasu bramayathi ravindu sthana yugam.

 சிவனின் துணைவியே ! காமகலா ரூபிணி ! உன் முகத்தை   பிந்துஸ் ஸ்தானமாகவும், அதன் கீழ் உன் இரு  ஸ்தனங்களையும், அதன்  கீழ் சக்தி வடிவத்தையும் , தியானித்து , அதில் மன்மதக்  கலையை எவன் துதிக்கிறானோ , அவன் எல்லா பெண்களின் மனத்திலும் காம விகாரத்தை  ஏற்படுத்துகிறான் . சூர்ய சந்திரர்களை  ஸ்தனங் களாகக் கொண்ட  மூஉலகப் பெண்களையும்  தன்   வசப்படுத்துகிறான் . 
(20)
किरन्तीमङ्गेभ्यः किरणनिकुरुंबामृतरसं
हृदि त्वामाधत्ते हिमकरशिलामूर्तिमिव यः।
स सर्पाणां दर्पं शमयति शकुन्ताधिप इव
ज्वरप्लुष्टान् दृष्ट्या सुखयति सुधाधारसिरया ॥२०॥
Kirantim angebhyah kirana-nikurumba'mrta-rasam
Hrdi tvam adhatte hima-kara-sila murthimiva yah;
Sa sarpanam darpam samayati sakuntadhipa iva
Jvara-plustan drshtya sukhayati sudhadhara-siraya.

 அன்னையே ! சந்திர காந்தக் கற்களினால் செய்யப்பட்டதுபோல் அழகிய உருவம் கொண்டவளே ! உன்னை வணங்கும் அடியார்க்கு , உன் அங்கங்களிலிருந்து பெருகும்  அமிர்த   மழையினை வாரி வழங்குபவளே  ! அதனால் உன் அருள்   பெற்றவன் ஆடும் பாம்பிற்கு சாடும் கருடனைப்   போலவும் , ஜுரத்தினால் பாதிக்கப்  பட்டவர்களுக்கு, உன்னால் கிடைக்கப் பெற்ற அமிர்த  பார்வையினாலேயே , நிவர்த்தியைத் தருபவனாகவும் இருந்து, அவர்களின் நோயை  குணப்படுத்துகிறான் .  
(21)
तटिल्लेखातन्वीं तपनशशिवैश्वानरमयीं
निषणां षण्णामप्युपरि कमलानां तवकलाम्
महापद्माटव्यां मृदितमलमायेन मनसा
महान्तः पश्यन्तो दधति परमाह्लादलहरीम् ॥२१॥
Tatil-lekha-thanvim thapana-sasi-vaisvanara-mayim
Nishannam shannam apy upari kamalanam tava kalaam;
Maha-padma tavyam mrdita-mala-mayena manasa
Mahantah pasyanto dadhati parama'hlada-laharim.

 தாயே ! ஆனந்தவல்லி ! ஆறு  ஆதார சக்கரங்களுக்கும்  மேலே , தாமரைக்காடு  போன்ற ஆயிரம் தளத் தாமரையில், மின்னல் கொடி போன்று, சூர்யா சந்திர  அக்னிவடிவம் கொண்டவளே ! உன்னுடைய 'சாதா '   என்ற கலையை காமம், மாயை , அறியாமை விட்ட ,  ஞானிகளும் தியானித்து ஆனந்தநிலை பெறுகிறார்கள். 

(22)
भवानि! त्वं दासे मयि वितर दृष्टिं सकरुणां
 इति स्तोतुं वाञ्छन् कथयति भवनि ! त्वमिति यः।
 तदैव त्वं तस्मै दिशसि निजसायुज्यपदवीम्
 मुकुन्दब्रह्मेन्द्रस्फुटमकुटनीराजितपदाम्  ॥२२॥
Bhavani tvam daase mayi vitara drishtim sakarunam
Iti sthotum vanchan kadhayati Bhavani tvam iti yah;
Tadaiva tvam tasmai disasi nija-sayujya-padavim
Mukunda-brahmendra-sphuta-makuta-nirajita-padam.

 தாயே ! உன்னுடைய பக்தன் உன்னைப் பார்த்து , தாயே !    பவானி ! உன்னுடைய கடைக்கண் பார்வை இந்த அடியவன் மீது படட்டும் என்று நினைத்து , 'பவானி நீ ' என்று சொல்ல  ஆரம்பித்த உடனேயே , மும்மூர்த்திகளால் வணங்கப்பட்ட உனக்கு , அவன் மீது மிகுந்த கருணை ஏற்பட்டு, அவனுக்கு உன் சாயுஜ்ய பதவியைத் தருகின்றாய் .  ( மோக்ஷத்தைத்   தருகிறாய் ) 
(23)
त्वया हृत्वा वामं वपुरपरितृप्तेन मनसा
शरीरार्धं शम्भोरपरमपि शङ्के हृतमभूत्।
यदेतत्त्वद्रूपं सकलमरुणाभं त्रिनयनं
कुचाभ्यामानम्रं कुटिलशशिचूडालमकुटम् ॥२३॥ 
Tvaya hrithva vamam vapur aparitripthena manasa
Sarir'ardham sambhor aparam api sankhe hritham abhut;
Yad ethat tvadrupam sakalam arunabham trinayanam
Kuchabhyam anamram kutila-sadi-chuudala-makutam.

 அம்மா ! சிவந்த சந்திரக்கலையுடன் கூடிய மணிமுடி , மூன்று கண்கள் , பருத்த இரு ஸ்தனங் களோடு, நீ  சற்று   முன்புறம்  சாய்ந்து  இருப்பதைப் பார்த்தால், நீ, ஆதி சிவனுடைய இடப்பாகத்தை அபஹரித்தது  போதாமல் , ஆசை தணியாமல், அவருடைய முழு பாகத்தையும் அபஹரித்து விட்டது  போல்  தோன்றுகிறது .  
(24)
जगत्सूते धाता हरिरवति रुद्रः क्षपयते
तिरस्कुर्वन्नेतत् स्वमपि वपुरीशस्तिरयति ।
सदापूर्वः सर्वं तदिदमनुगृह्णाति च शिवः
तवाज्ञामालंब्य क्षणचलितयोर्भ्रूलतिकयोः ॥२४॥

Jagat suthe dhata harir avati rudrah kshapayate
Tiraskurvan etat svam api vapurisastirayati;
Sada-purvah sarvam tad idamanugrhnati cha Shiva-
Stavajnam aalambya kshana-chalitayor bhru-latikayoh.

 தாயே ! படைக்கும் கடவுளான பிரம்மா , காக்கும் கடவுளான விஷ்ணு , அழிக்கும் கடவுளான ருத்ரன்  ஆகிய மூவரையும்  ஈசனானவர் தன்னுள் மறையும்படி  செய்து தானும் மறைகிறார்  (கண்ணுக்குத் தெரியாமல் ).  பின் உன் கொடி போன்ற புருவத்தின் அசைப்பால், நீ  காட்டிய  உத்தரவை மதித்து, சதாசிவன்  இன்நால்வருக்கும்  அனுக்கிரகம் செய்து  , மீண்டும் உலகத்தை உற்பத்திச் செய்வதற்காக அவர்களைப் படைக்கிறார் .
(25)
त्रयाणां देवानां त्रिगुणजनितानां तव शिवे
भवेत् पूजा पूजा तव चरणयोर्या विरचिता ।
तथा हि त्वत्पादोद्वहनमणिपीठस्यनिलये
स्थिता ह्येते शश्वन्मुकुलितकरोत्तंसमकुटाः ॥२५॥

Trayanam devanam thri-guna-janitanam tava Sive
Bhavet puja puja tava charanayor ya virachita;
Tatha hi tvat-pado'dvahana-mani-pithasya nikate
Sthita hy'ete sasvan mukulita-karottamsa-makuta

 அன்னையே !  தேவீ ! மும்மூர்த்திகளான பிரம்மா ,விஷ்ணு, ருத்ரன்  (முக்குணங்களை உடையவர்கள் ) ஆகியோர், தன் மணிமுடிகளின் மீது , கூப்பிய கரங்களுடன் உன்னை வணங்கியபடி நிற்பதால் , உன்   சரணங்களுக்குச் செய்யும் பூஜையானது, அவர்களையும்  பூஜிப்பது  போல் ஆகின்றது
(26)
विरिञ्चिः पञ्चत्वं व्रजति हरिराप्नोति विरतिं
विनाशं कीनाशो भजति धनदो याति निधनम् ।
वितन्त्री माहेन्द्रीविततिरपि सम्मीलित दृशा
महासंहारेऽस्मिन् विहरति सति त्वत्पतिरसौ ॥२६॥

Virincih panchatvam vrajati harir apnoti virathim
Vinasam kinaso bhajati dhanado yati nighanam;
Vitandri mahendri vithathir api sammeelita-drsa
Maha-samhare smin viharati sati tvat-patirasau.

  தாயே ! மஹா பிரளய காலத்தில்  பஞ்சபூதங்களும் , பிரம்மா ,விஷ்ணு , யமன் , குபேரன் முதலியோரும் , தேவேந்திரன் உள்ளிட்ட மற்ற தேவர் கூட்டமும் அழிய , நீ மட்டும் அழியாமல் சதாசிவனின்  சம்ஹார ருத்ர தாண்டவத்தைப் பார்த்து மகிழ்வது , உன் கற்பின் சக்தியால் அன்றோ ? (கடைசியில் சிவனும் சக்தியும் மட்டுமே இருப்பது மீண்டும் உலகத்தை உண்டாக்க ). 
(27)
 जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविरचना
गतिः प्रादक्षिण्यक्रमणमशनाद्याहुति विधिः ।
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पणदृशा
सपर्या पर्यायस्तव भवतु यन्मे विलसितम् ॥२७॥

Japo jalpah shilpam sakalam api mudra-virachana
Gatih pradaksinya-kramanam asanady'ahuti-vidhih;
Pranamah samvesah sukham akilam atmarpana-drsa
Saparya-paryayas tava bhavatu yan me vilasitam.

 தாயே !  நான் பேசுவது எல்லாம் உன்  மந்திர  ஜபமாகவும் , என் உடல் அசைவு உன்னுடைய  பூஜாரூபமான முத்திரைகளாகவும் , நான் நடப்பது உன்னை வலம் வருவதாகவும் ,நான் சாப்பிடுவது  உன்னைக்குறித்துச்  செய்யும் ஹோமத்தின் ஆகுதியாகவும்  , படுப்பது உன்னை வணங்குவதாகவும் , நான் செய்யும் மற்ற  செயல்கள் யாவும்   உனக்குச் செய்யும் பூஜையாக இருக்கட்டும்.
(28)
सुधामप्यास्वाद्य प्रतिभयजरामृत्युहरिणीं
विपद्यन्ते विश्वे विधिशतमखाद्या दिविषदः ।
करालं यत्क्ष्वेलं कबलितवदः कालकलना
न शंभोस्तन्मूलं तव जननि ताटङ्कमहिमा ॥२८॥

Sudham apy asvadya pratibhaya-jaraa-mrtyu-harinim
Vipadyante visve Vidhi-Satamakhadya divishadah;
Karalam yat ksvelam kabalitavatah kaala-kalana
Na Sambhos tan-mulam tava janani tadanka-mahima.

 தாயே ! மஹா பிரளய காலத்தில் பிரம்மா , இந்திரன்  முதலான  தேவர்கள் , முதுமை , மரணம் நீக்கும் அமிர்தம் அருந்திய பிறகும் அழிந்து போகின்றனர் . ஆனால் ஆலகால  விஷத்தை அருந்திய உன் துணைவன் சதாசிவன் மட்டும் காலன் வசப்படவில்லை . கற்புக்கரசியே ! இதற்குக் காரணம் உன் தாடங்க (காதணி ) மகிமை தானே ! 
(29)
किरीटं वैरिञ्चं परिहर कैटभभिदः
कठोरे कोटीरे स्खलसि जहि जंभारि मकुटम् ।
प्रणम्रेष्वेतेषु प्रसभमभियातस्य भवनम्
भवस्याभ्युत्थाने तव परिजनोक्तिर्विजयते ॥२९॥

Kiritam vairincham parihara purah kaitabha bhidah
Katore kotire skalasi jahi jambhari-makutam;
Pranamreshwateshu prasabha mupayatasya bhavanam
Bhavasy'abhyutthane tava parijanoktir vijayate.

  உன்னைக் காண்பதற்கு , சிவன் உன் இருப்பிடம் தேடி வரும்போது , நீ வேகமாக பரபரப்புடன்  எழுந்து வருவதைக் கண்ட உன் சக  தோழிகள் , ஹரி , ஹரன் , இந்திரன் முதலான பிரம்மாதி தேவர்கள் உன்னை  நமஸ்க்கரிப்பதால் அவர்களுடைய மணி மகுடங்கள் உன் காலில் இடறப்போகின்றதே , அவைகளை  ஓதிக்கிவிடு  என்று உனக்கு  நினைவு கூர்வது  உன் பெருமையை எடுத்துக் காட்டுகிறது . 
  
(30)
  स्वदेहोद्भूताभिर्घृणिभिरणिमाद्याभिरभितो
निषेव्ये नित्ये त्वामहमिति सदा भावयति यः ।
किमाश्चर्यं तस्य त्रिणयनसमृद्धिं तृणयतो
महासंवर्ताग्निर्विरचयति नीराजनविधिम् ॥३०॥

Sva-deh'odbhutabhir ghrnibhir animadyabhir abhito
Nishevye nitye tvamahamiti sada bhavayati yah;
Kim-ascharyam tasya tri-nayana-samrddhim trinayato
Maha-samvartagnir virchayati nirajana-vidhim.

  ஆதி  அந்தமில்லாத தாயே ! உன்னுடைய சரணங்களிலிருந்து  வெளிவரும்  கிரணங்களாகிய அணிமா , மஹிமா போன்ற ( 8 )  சக்திகளால்  சூழப்பட்டவளே ! உன்னை  எவன்  எப்பொழுதும் மனதில் தியானம் செய்கிறானோ , அவனுக்கு சிவ சாயுஜ்ய பதவி கூட ஒரு வறண்ட புல்  போல் தோன்றும் . மகா பிரளய கால அக்னி அவனுக்கு மங்கள ஹாரத்தி செய்திடும் என்பதில் என்ன ஆச்சர்யம் ?  
(31)
*चतुःषष्ट्या तन्त्रैः सकलमतिसन्धाय भुवनं
स्थितः तत्तत्सिद्धिप्रसवपरतन्त्रैः पशुपतिः।
पुनस्त्वन्निर्बन्धादखिलपुरुषार्थैकघटना-
स्वतन्त्रं ते तन्त्रं क्षितितलमवातीतरदिदम् ॥३१॥

Cautuh-shashtya tantraih sakalam atisamdhaya bhuvanam
Sthitas tat-tat-siddhi-prasava-para-tantraih pasupatih;
Punas tvan-nirbandhad akhila-purusarth'aika ghatana-
Svatantram te tantram khsiti-talam avatitaradidam.

  நாம் விரும்புகின்ற  அந்தந்த   சித்திகளைப்  பெறுவதற்கு 64 சாத்திரங்களை   அளித்து சிவனும் மௌனமாக இருந்தார்  . அதனை உலகம்  தவறாக பயன்படுத்தி ,   துராசாரத்தில் ஈடுபடுவதைப் பார்த்து  சிவன் மெளனமாக இருந்தார் . திரும்பவும் உன்னுடைய கட்டாயத்தால் சகல புருஷார்த்தங்களையும்  ஒருங்கே கொடுக்கக்கூடிய   பஞ்சதசாக்ஷரி   என்ற மந்திரத்தை உலகுக்கு  அளித்தாயே !  

(32)
*शिवः शक्तिः कामः क्षितिरथ रविः शीतकिरणः
स्मरो हंसः शक्रस्तदनु च परामारहरयः ।
अमी हृल्लेखाभिस्तिसृभिरवसानेषु घटिताः
भजन्ते वर्णास्ते तव जननि नामावयवताम्  ॥३२॥

Sivah saktih kamah kshitir atha ravih sithakiranah
Smaro hamsah sakrastadanu cha para-mara-harayah;
Amee hrllekhabhis tisrbhir avasanesu ghatitha
Bhajante varnaste tava janani nam'avayavatham.

 சிவ , சக்தி , காம ,  ப்ருத்வீ பீஜங்கள் ஒரு  பிரிவும் ,  ரவி, சந்திர ,  மன்மத , ஹம்ச,    இந்திர  பீஜங்கள் ஒரு பிரிவும், பரா , மன்மதா, ஹரி பீஜங்கள் ஒரு பிரிவும் ஆகிய இந்த பீஜங்களின் கடைசியில் சேர்க்கப்பட்ட  ஹ்ரீம் காரங்களும்  சேர்ந்து இந்த 15  அட்ஷரங்களும் உன்னுடைய  மஹா மந்திரப்  பகுதிகளின் அங்கங்களாக விளங்குகின்றன .   

(33)
*स्मरं योनिं लक्ष्मीं त्रितयमिदमादौ तव मनोः
निधायैके नित्ये निरवधिमहाभोगरसिकाः।
भजन्ति त्वां चिन्तामणिगुणनिबद्धाक्षवलयाः
शिवाग्नौ जुह्वन्तस्सुरभिघृतधाराहुतिशतैः॥३३॥

Smaram yonim lakshmim trithayam idam adau tava manor
Nidhay'aike nitye niravadhi-maha-bhoga-rasikah;
Bhajanti tvam chintamani-guna-nibaddh'aksha-valayah
Sivagnau juhvantah surabhi-ghrta-dhara'huti-sataih.

 தாயே ! உன்னை எப்போதும் தொடர்ச்சியாக    இடைவெளி இல்லாமல் தியானம் செய்து அதனால் கிடைக்கும் ஆனந்தத்தை உணர்ந்தவர்களான  சிவ யோகீஸ்வரர்கள் , சிந்தாமணி யாலான அட்ஷ மாலையை   உடையவர்களாய் , உன்னுடைய மந்திரத்தின் முன் ,  காமபீஜ மந்த்ரமான  "க்லீம்", புவனேஸ்வரி மந்த்ரமான " ஹ்ரீம் ", லக்ஷ்மி மந்த்ரமான" ஸ்ரீம் ", இவைகளைச் சேர்த்து,  த்ரீ  கோணமான அக்னி குண்டத்தில் , ஸ்ரீ சக்கரத்தில் இருக்கும் உன்னை எண்ணி பசு நெய்  தாரைகளால் ஹோமம் செய்து உன்னை   மகிழ்விக்கின்றனர் .  
(34)
                            
*शरीरं त्वं शंभोः शशिमिहिरवक्षोरुहयुगं
तवात्मानं मन्ये भगवति! नवात्मानमनघम्
अतः शेषः शेषीत्ययमुभयसाधारणतया
स्थितः संबन्धो वां समरसपरानन्दपरयोः ॥३४॥

Sariram twam sambhoh sasi-mihira-vakshoruha-yugam
Tav'atmanam manye bhagavati nav' atmanam anagham;
Atah seshah seshityayam ubhaya-saadharana taya
Sthitah sambandho vaam samarasa-parananda-parayoh.

 ஈஸ்வரியே ! என்னுடைய மனக் கண்ணால் உன்னைப் பார்க்கும் பொழுது , சூர்ய  சந்திரர்களை ஸ்தனமாகக் கொண்டு , நீ  பரமேஸ்வரனுக்கு உடலாக இருக்கின்றாய் .  உன்னுடைய  உடல் தோஷமற்ற புதிய ஆத்மாவாகவும் ,   நவ  வியூக  ஆத்மாவான சிவனுடைய   உடல்  உன்னுடயதாகவும்  இருக்கிறது . எனவே உனது  கரி நிறம் ஆனந்த பைரவர் உடலாகவும்  , சிவனின் உடல்  உனதாகவும் தோன்றுகிறது . எனவே நீங்கள் இருவரும்  ஒன்றுபட்ட உடலாக , சமமான குணங்களை உடையவராக இருப்பதால் , நான் , எனது என்ற   சம்பந்தமும் ஒன்றாக இருப்பதால் , ஆனந்தபைரவர் , ஆனந்தபைரவி யாக எல்லா வகையிலும் சமமாக இருக்கிறிர்கள்.  
  
(35)
                          
मनस्त्वं व्योमत्वं मरुदसि मरुत्सारथिरसि
त्वमापस्त्वं भूमिस्त्वयि परिणतायां न हि परम् ।
त्वमेव स्वात्मानं परिणमयितुं विश्ववपुषा
चिदानन्दाकारं शिवयुवतिभावेन बिभृषे ॥३५॥

Manas tvam vyoma tvam marud asi marut saarathir asi
Tvam aastvam bhoomis tvayi parinathayam na hi param;
Tvam eva svatmanam parinamayithum visva-vapusha
Chidanand'aakaram Shiva-yuvati-bhaavena bibhrushe.

 தாயே ! நீயே  மனஸ் , ஆகாய , வாயு , அக்னி , நீர் , பூமி   தத்துவம் .  நீயேதான்   இந்த உலகமாக இருக்கிறாய் .  நீயேதான்  பிரம்மஸ்வரூபமான   சிவதத்வம் .  இந்த உலகத்திற்காக நீயேதான் சிவனின் பட்ட  மஹிஷியாகவும்  இருக்கின்றாய் .

(36)

*तवाज्ञाचक्रस्थं तपनशशिकॊटिद्युतिधरं
परं शंभुं वन्दे परिमिलितपार्श्वं परचिता ।
यमाराध्यन् भक्त्या रविशशिशुचीनामविषये
निरालोके लोके निवसति हि भालोकभुवने ॥३६॥

Tavaagna chakrastham thapana shakthi koti dhyudhidharam,
Param shambhum vande parimilitha -paarswa parachitha
Yamaradhyan bhakthya ravi sasi suchinama vishaye
Niraalokeloke nivasathi hi bhalokha bhuvane

 தாயே ! உன்னுடைய  புருவ மத்தியில் உள்ள  ஆஜ்ஞா  சக்கரத்தில் இருப்பவரும் , ஆயிரம்  கோடி சூர்ய சந்திரர்களின் ஒளியை உடையவரும் , சகுண , நிர்குண சக்திகளை இரு  பக்கங்களில்  உடையவருமான , பரமசிவனையும் , உன்னையும் எவன் தியானம் செய்கிறானோ அவன் , ஆயிரம் கோடி சூர்ய சந்திரனைவிட ஒளிமிகுந்த (கண்ணுக்கு புலப்படாத ) ஒரு ஜோதிமயமான உயர்ந்த  உலகத்தை அடைகிறான் .

(37)
 *विशुद्धौ ते शुद्धस्फटिकविशदं व्योमजनकं
शिवं सेवे देवीमपि शिवसमानव्यवसितां ।
ययोः कान्त्या यान्त्याः शशिकिरणसारूप्यसरणे-
र्विधूतान्तर्ध्वान्ताः विलसति चकोरीव जगति ॥३७॥

Vishuddhou the shuddha sphatika visadham vyoma janakam
Shivam seve devimapi siva samana vyavasitham
Yayo kaanthya sasi kirana saaroopya sarane
Vidhoo thantha dwarvantha vilamathi chakoriva jagathi

 தாயே உன்னுடைய  விசுத்திச் சக்கரத்தில் , ஆகாய தத்துவத்தை உண்டுபண்ணுபவரும்,  சுத்த ஸ்படிகமணி  போல் நிர்மலமானவருமான பரமசிவனையும் , உன்னையும்  தியானம் செய்பவன் , உங்களிடமிருந்து  வெளிவருகின்ற  வெண்ணிலாவைப் போன்ற ஒளிமயமான  காந்தியினால் , அறியாமை இருள் அழிக்கப்பட்டு , முழு நிலவைக் கண்ட  சகோரபட்ஷி போல் ,    அமிர்தம் அருந்திய பரமானந்தத்தை அடைகிறான் . 
(38)
*समुन्मीलत्संवित्कमलमकरन्दैकरसिकं
भजे हंसद्वन्द्वं किमपि महतां मानसचरं ।
यदालापादष्टादशगुणितविद्यापरिणति-
र्यदादत्ते दोषात् गुणमखिलमद्भ्यः पय इव ॥३८॥

Samunmeelath samvithkamala makarandhaika rasikam
Bhaje hamsadwandham kimapi mahatham maanasacharam
Yadhalapaa dhashtadasa gunitha vidhyaparinathi
Yadadhathe doshad gunamakhila madhbhaya paya eva

  அன்னையே ! எந்த இரு ஹம்சத்தினுடைய பேச்சானது ( ஒலி ),18 வித்தைகளுக்கு ( தந்திரம்/ கலை )   மூலமாக இருக்கின்றதோ , பாலிலிருந்து தண்ணீரை பிரிப்பது போல் சகல தோஷங்களையும் பிரித்து , குணங்களை மட்டும் ஏற்றுக்கொள்கின்றனவோ ,  மகான்களுடைய மனமாகிய (ஞானம் ) தாமரை மலரிலுள்ள தேனைப்  பருகுகின்றனவோ,  அத்தகைய  வருணனைக்கும்  அப்பாற்பட்ட மகிமையுடன் கூடிய  ஹம்ச தம்பதிகளான உங்களை என்னுடைய   இதயகமலத்தில் தியானம் செய்து  நமஸ்க்கரிக்கிறேன். 

(39)
*तव स्वाधिष्ठाने हुतवहमधिष्ठाय निरतं
तमीडे संवर्तं जननि! महतीं तां च समयाम् ।
यदालोके लोकान् दहति महति क्रोधकलिते
दयार्द्रा या दृष्टिः शिशिरमुपचारं रचयति ॥३९॥

Thava swadhishtane huthavahamadhishtaya niratham
Thameede sarvatha janani mahathim tham cha samayam
Yadhaloke lokan dhahathi mahasi krodha kalithe
Dhayardhra ya drushti sishiramupacharam rachayathi

 தாயே !  காலாக்னி  ருத்ரரையும் , அந்த காலாக்னி ருத்ர  ரூபிணியான உன்னையும் , என்னுடைய சுவாதிஷ்டான  சக்கரத்தில் (   அக்னி ) , தியானம் செய்து வணங்குகிறேன் .  சிவனுடைய  ருத்ராக்னி  பார்வையானது உலகங்களை அழிக்கும் சமயம் , உன்னுடைய  நிலவைப் போன்ற கனிந்த பார்வையானது , (சந்திரகலா சக்தி /சமயா /சந்திரகலா தேவீ )  இந்த உலகை  மீண்டும் குளிரச்  செய்கின்றது . (தகிக்கப்பட்ட மன்மதன் உன்  கருணையால் ரதியின்  கண்களுக்கு  மட்டும் தெரிவது போல் ).

(40)
*तटित्वन्तं शक्त्या तिमिरपरिपन्थिस्फुरणया
स्फुरन्नानारत्नाभरणपरिणद्धेन्द्रधनुषं ।
तव श्यामं मेघं किमपि मणिपूरैकशरणम्
निषेवे वर्षन्तं हरमिहिरतप्तं त्रिभुवनम् ॥४०॥

Thatithwantham shakthya thimira paree pandhi sphuranaya
Sphuranna na rathnabharana pareenedwendra dhanusham
Thava syamam megham kamapi manipooraika sharanam
Nisheve varshantham haramihira thaptham thribhuvanam.

 அம்மா !  மணி பூரகச்( நீர் ) சக்கரத்தை மூலமாகக் கொண்டு ,  சிவனை, மழைக் காலத்து   நீண்ட   கருத்த மேகமாகவும்  , உன்னை  மின்னல் கொடியாகவும் நினைத்து வணங்குகிறேன்.  இருளைப் போக்கும் மின்னலாக நீ இருக்கிறாய் . நீ அணிந்திருக்கும் ரத்ன  ஆபரணங் களிலிருந்து வீசும் ஒளியானது , அந்த மேகங்கள் ஒளிமயமாக இந்திர வில்லுடன் கூடியது போல் தோன்றுகிறது . காலாக்னி   ருத்ரனால் தகிக்கப்பட்ட   மூ உலகங்களையும் , தன் அமுத  மழையினால் குளிரச்  செய்கின்ற  உன்னுடைய சதாசிவ தத்துவத்தை வணங்குகின்றேன் .

(41)
*तवाधारे मूलॆ सह समयया लास्यपरया
नवात्मानं मन्ये नवरसमहाताण्डवनटम् ।
उभाभ्यामेताभ्यामुदयविधिमुद्दिश्य दयया
सनाथाभ्यां जज्ञे जनकजननीमज्जगदिदम् ॥४१॥ 

Thavadhare mole saha samayaya lasyaparaya
Navathmanam manye navarasa maha thandava natam
Ubhabhya Methabhyamudaya vidhi muddhisya dhayaya
Sanadhabyam jagne janaka jananimatha jagathidam.

 தாயே ! உன் மூலாதாரத்தில் , நடனத்தில்  பிரியமுள்ள  சமயாதேவியுடன் , ஸ்ருங்கார ரசங்களுடன் மகா தாண்டவ நடனம் செய்யும்  ஆனந்தபைரவருடன் உன்னையும்  தியானம் செய்து வணங்குகிறேன் . பிரளய காலத்தில் அழிந்த உலகத்தை மீண்டும் உண்டாக்க வேண்டுமென்று நீங்கள் இருவரும் ஸ்ருஷ்டி தாண்டவ நடனம் செய்வதால் , பைரவர் , பைரவி ஆகிய உங்களை கருணை வடிவான  தாய் , தந்தையராக  இவ்வுலகம்  அடைந்தது .

(42)
गतैर्माणिक्यत्वं गगनमणिभिः सान्द्रघटितं
किरीटं ते हैमं हिमगिरिसुते कीर्तयति यः
स नीडे यच्छायाच्छुरणशबलं चन्द्रशकलं
धनुश्शौनासीरं किमिति निबध्नाति धिषणां ॥४२॥

Gathair manikyatvam gagana-manibhih-sandraghatitham.
Kiritam te haimam himagiri-suthe kirthayathi yah;
Sa nideyascchaya-cchurana-sabalam chandra-sakalam
Dhanuh saunasiram kim iti na nibadhnati dhishanam.

 அன்னையே !  மலையரசன் பெற்ற மாணிக்கமே !  உன்னுடைய  கிரீடத்தை  எந்த பக்தனாவது வருணிக்க நினைத்தால் ,  பன்னிரண்டு  சூரியர்களே , மாணிக்கங்களாக இழைக்கப்பட்டிருக்கும் உன் கிரீடத்தில், நெருக்கமாகப் பதிக்கப்பட்டிருக்கும் இரத்தினங்களின் ஒளியால்,  மின்னுகின்ற உன்னுடைய  சந்திரக்கலைதனை,  வானவில்லோ அல்லது   இந்திரதனுசோ  என்றே எண்ணுவான் . 

(43)
धुनोतु ध्वान्तं नस्तुलितदलितेन्दीवरवनं
घनस्निग्धश्लक्ष्णं चिकुरनिकुरुंबं तव शिवे ।
यदीयं सौरभ्यं सहजमुपलब्धुं सुमनसो
वसन्त्यस्मिन् मन्ये वलमथनवाटीविटपिनाम् ॥४३॥

Dhunotu dhvaantam nas tulita-dalit'endivara-vanam
Ghana-snigdha-slakshnam chikura-nikurumbham thava sive;
Yadhiyam saurabhyam sahajamupalabdhum sumanaso
Vasanthyasmin manye vala-madhana-vaati-vitapinam.

  தாயே! மலர்ந்த கருங்குவளை ( நீலோத்பலம் ) மலர்க்காடு போன்றதும் , நெருக்கமானதும் , மிருதுவானதும், வழ வழப்பானதுமான உன் கேசத்தின் அழகு,  எங்களின் அறியாமையை நீக்கட்டும் . உன் கேசத்தின் இயற்கை மணத்தைத் தானும் அடைய எண்ணி , இந்திரனுடைய  நந்தவனத்து மலர்கள் உன்  கூந்தலை அலங்கரிக்கின்றனவோ ? 
(44)

तनोतु क्षेमं नस्तव वदनसौन्दर्यलहरी
परीवाहस्रोतस्सरणिरिव सीमन्तसरणिः।
वहन्ती सिन्दूरं प्रबलकबरीभारतिमिर-
द्विषां वृन्दैर्बन्दीकृतमिव नवीनार्ककिरणम् ॥४४॥

Tanothu kshemam nas tava vadhana-saundarya lahari
Parivaha-sthrotah-saraniriva seemantha-saranih
Vahanti sinduram prabala-kabari-bhara-thimira-
Dvisham brindair bandi-krtham iva navin'arka kiranam;

 அம்மா ! உன் கேசத்தின் நடுவில் உள்ள வகிடு , உன் முகத்திற்கு அழகு சேர்க்கின்றது . பால சூர்யா கிரணம் போன்று உன் வகிட்டில் மின்னும் சிந்தூர வர்ண குங்குமமானது , உன் அடர்ந்த இருட்டு போன்ற, கருமையான கேசம் என்ற எதிரிகளின் சிறையில் அடைக்கப்பட்டது போல் உள்ளது . அந்த  முகத்தின்  அழகு வெள்ளத்திற்கு  கால்வாய் போன்ற உனது கேச வகிடு,  எங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளையும் தரட்டும் . 
(45)

अरालैः स्वाभाव्यादलिकलभसश्रीभिरलकैः
परीतं ते वक्त्रं परिहसति पङ्केरुहरुचिं ।
दरस्मेरे यस्मिन् दशनरुचिकिञल्करुचिरे
सुगन्धौ माद्यन्ति स्मरदहनचक्षुर्मधुलिहः ॥४५॥

Aralaih swabhavyadalikalabha-sasribhiralakaih
Paritham the vakhtram parihasati pankheruha-ruchim;
Dara-smere yasmin dasana-ruchi-kinjalka-ruchire
Sugandhau madhyanti Smara-dahana-chaksur-madhu-lihah.

 தாயே ! இயற்கையாகவே சுருண்டதும் , இள வண்டுகள் போல் பளபளப்புடன் தங்கமயமாக ஒளிரும் கேசத்தையுடைய உன்னுடைய அழகான தங்க முகம், தாமரை மலரையும் பரிகாசம் செய்கின்றது . இந்த அழகிய முகத்தில் இதழ்கள் போன்று வரிசையான  பல் வரிசையுடன் கூடிய உன் புன்சிரிப்பைக் கண்ட , காமனையும் வென்ற பரமசிவனின் கண்களாகிய வண்டுகள் , மயங்குகின்றன .  
(46)
ललाटं लावण्यद्युतिविमलमाभाति तव यत्
द्वितीयं तन्मन्ये मकुटघटितं चन्द्रशकलं ।
विपर्यासन्यासादुभयमपि संभूय च मिथः
सुधालेपस्यूतिः परिणमति राकाहिमकरः ॥४६॥

Lalatam lavanya-dyuthi-vimalamaabhati tava yath
Dvithiyam tan manye makuta-ghatitham chandra-sakalam;
Viparyasa-nyasad ubhayam api sambhuya cha mithah
Sudhalepa-syutih pareenamati raka-himakarah.

 தாயே ! உன் நெற்றி   கீழ் நோக்கித் தொங்கவிடப்பட்ட , மற்றொரு சந்திரக்கலை போல் இருக்கிறது . உன் மணி முடியிலுள்ள  சந்திரக்கலையையும் , நெற்றியிலுள்ள சந்திரக்கலையையும் ஒன்றுடன் ஒன்று  திருப்பிவைத்துப் பொறித்தினால் , அது அமிர்தம் நிறைந்த முழு நிலவு போல்  ஆகுமே  !   
(47)
भ्रुवै भुग्ने किञ्चित् भुवनभयभंगव्यसनिनि !
त्वदीये नेत्राभ्यां मधुकररुचिभ्यां धृतगुणम्
धनुर्मन्ये सव्येतरकरगृहीतं रतिपतेः
प्रकोष्ठे मुष्टौ च स्थगयति निगूढान्तरमुमे ॥४७॥

Bhruvau bhugne kinchit bhuvana-bhaya-bhanga-vyasanini
Tvadhiye nethrabhyam madhukara-ruchibhyam dhrita-gunam;
Dhanur manye savye'tara-kara-grhitam rathipateh
Prakoshte mushtau ca sthagayati nigudha'ntharam ume

 சகல உலகங்களுக்கும் அபயமளிக்கும் அன்னையே ! உமையே ! சற்றே வளைந்திருக்கும் உன்  புருவங்கள், உன் கண்களாகிய வண்டுகளை , நாண் கயிறாகக் கொண்ட காமனின் வில் போல்  தோன்றுகிறது . காமனும்  அதனை இடது கரத்தால் பிடித்தது போல், அவனின் முழங்கையும், மணிக்கட்டும் ,கைவிரல்பிடியும் , உன்னுடைய முகத்தின் மத்திய பாகத்தை மறைப்பது போல் உள்ளது . 

(48)
अहः सूते सव्यं तवनयनमर्कात्मकतया
त्रियामां वामं ते सृजति रजनीनायकतया ।
त्रितीया ते दृष्टिर्दरदलितहेमांबुजरुचिः
समाधत्ते संध्यां दिवसनिशयोरन्तरचरीम् ॥४८॥

Ahah sute savyam tava nayanam ark'athmakathaya
Triyamam vamam the srujati rajani-nayakataya;
Trithiya the drishtir dhara-dhalita-hemambuja-ruchih
Samadhatte sandhyam divasa-nisayor antara-charim

 தாயே ! சூர்யன் போன்ற உன் வலது கண் பகலையும் , சந்திரன் போன்ற இடது கண் இரவையும் உண்டாக்குகின்றது .சற்றே மலர்ந்த தங்கத் தாமரை  போன்ற உனது மூன்றாவது கண் , காலை, மாலை ,என்ற இரண்டு சந்தியா  காலங்களை உண்டாக்குகின்றது .
(49)
विशाला कल्याणी स्फुटरुचिरयोध्या कुवलयैः
कृपाधारा धारा किमपि मधुरा भोगवतिका ।
अवन्ती दृष्टिस्ते बहुनगरविस्तारविजया
ध्रुवं तत्तन्नामव्यवहरणयोग्या विजयते ॥४९॥

Vishala kalyani sphuta-ruchir ayodhya kuvalayaih
Kripa-dhara-dhara kimapi madhur'a bhogavatika;
Avanthi drishtis the bahu-nagara-vistara-vijaya
Dhruvam tattan-nama-vyavaharana-yogya vijayate

 தாயே ! உன் கண்கள் விசாலமானது . அதனால் விசாலா என்றும் , மங்களமானதால் கல்யாணீ என்றும், இந்தீவர புஷ்பம் போன்று (  ப்ளூ லில்லி ) அழகானதால் அயோத்யா என்றும் , கருணை உள்ளவளாதலால்  தாரா என்றும் , மாதுர்யத்தோடு கூடியவளாதலால் மதுரா ( இனிமையானவள் ) என்றும் , ஆழ்ந்து இருப்பதால் போகவதி என்றும் , சகல உலகங்களையும்  காக்கும்   சக்தி  உள்ளவளாதலால்  அவந்தி என்றும் , நகரங்களின் பெயர்களைச் கொண்டு  அழைக்கும்படியான தகுதி கொண்டதே .
(50)
कवीनां सन्दर्भस्तबकमकरन्दैकरसिकं
कटाक्षव्याक्षेपभ्रमरकलभौ कर्णयुगलं ।
अमुञ्चन्तौ दृष्ट्वा तव नवरसास्वादतरला-
वसूया संसर्गादलिकनयनं किञ्चिदरुणम् ॥५०॥

Kavinam sandharbha-sthabaka-makarandh'aika-rasikam
Kataksha-vyakshepa-bhramara-kalabhau-karna-yugalam;
Amunchantau drshtva tava nava-ras'asvada tharalau-
Asuya-samsargadhalika-nayanam kinchid arunam.

 அம்மா ! உன் காதுகள்  கவிகளின்  காவியங்களான மலர்களில் உள்ள தேனைச் சுவைக்கின்றன. உன் கண்கள்   நவரசங்களைப்  பருகும் வண்டுகள் போல் , உன்   காதுகளை விட்டு அகலாமல் இருக்கின்றன . உன் கண்களைக் கண்டு பொறாமைக் கொண்ட  உன் மூன்றாவது நெற்றிக்கண், சிறிது சிவந்தது போல் தோன்றுகிறது . (காது வரை நீண்ட  அழகிய கண்கள்  ) .   
(51)
  
शिवे शृंगारार्द्रा तदितरजने कुत्सनपरा
सरोषा गंगायां गिरिशचरिते विस्मयवती ।
हराहिभ्यो भीता सरसिरुहसौभाग्यजननी
सखीषु स्मेरा ते मयि जननि! दृष्टिः सकरुणा ॥५१॥

Shive sringarardhra tad-ithara-jane kutsana-paraa
Sarosha Gangayam Girisa-charite'vismayavathi;
Har'ahibhyo bhita sarasi-ruha-saubhagya-janani
Sakhishu smera the mayi janani dristih sakaruna

அம்மா ! உன் கண்கள் சதாசிவனிடத்தில் ஸ்ருங்கார ரசமும் , மற்றவர்களிடத்தில் வெறுப்பும் , சிவனின்  மற்றொரு மனைவியான கங்கையிடம் கோபமும் , சிவனின் லீலைகளைக் கேட்டு அதனால் ஆச்சர்யமும்,  அவர் கழுத்தில் உள்ள பாம்பிடம் அச்சமும், நெற்றிக்கண் தாமரை மலர் போல் சிறிது சிவந்து இருப்பதால் வீர ரசத்துடனும், உன் சக தோழிகளிடம் ஹாஸ்யமும் , என்னிடம் மட்டுமே கருணா ரசத்துடனும் , இப்படியாக பல ரசங்களுடன்  கூடியதாக இருக்கிறது .

(52)

गते कर्णाभ्यर्णं गरुत इव पक्ष्माणि दधती
पुरां भेत्तुश्चित्तप्रशमरसविद्रावणफले ।
इमे नेत्रे गोत्राधरपतिकुलोत्तंसकलिके
तवाकर्णाकृष्टस्मरशरविलासं कलयतः ॥५२॥

Gathe karnabhyarnam garutha iva pakshmani dhadhati.
Puraam bhetthus chitta-prasama-rasa-vidhravana-phale;
Ime nethre gothra-dhara-pathi-kulottamsa-kalike
Tav'akarn'akrishta-smara-sara-vilasam kalayathah.

 மலையரசன் பெற்ற மாணிக்கமே ! உன் கண்கள் காதுவரை நீண்டிருக்கிறது . இமை மயிர்கள் அம்பிலிருக்கும் இறகுகள் போல் உள்ளது . இந்தக் கண்களைப் பார்த்தால் காதுவரை இழுத்து விடப்பட்ட மன்மத பாணம் போல் தோன்றுகிறது .  இந்தக் அழகிய கண்கள் ,   மூ உலகத்தையும் எரித்த சிவனுடைய மனதில் சலனத்தை ஏற்ப்படுத்துகிறது . 

(53)

विभक्तत्रैवर्ण्यं व्यतिकरितलीलाञ्जनतया
विभाति त्वन्नेत्रत्रितयमिदमीशानदयिते  ।
पुनः स्रष्टुं देवान् द्रुहिणहरिरुद्रानुपरतान्
रजस्सत्वं बिभ्रत्तम इति गुणानां त्रयमिव ॥५३॥

Vibhaktha-traivarnyam vyatikaritha-lila'njanathaya
Vibhati tvan-netra-trithayam idam Isana-dayite;
Punah strashtum devan Druhina-Hari-Rudran uparatan
Rajah sattvam vibhrat thama ithi gunanam trayam iva

சிவனின் துணைவியே ! அஞ்சனத்துடன் ( கண் மை ) கூடிய உன்  அழகிய  மூன்று கண்களும் வெண்மை , சிவப்பு , கறுப்பு , நிறங்களில் உள்ளது . மகா பிரளய காலத்தில் பிரம்மா , விஷ்ணு , ருத்திரன் ஆகிய மூவரும் அழிந்து , உன்னுள் மறைந்திட , அவர்களை மீண்டும் படைப்பதற்காக உன் கண்கள் முக்குணங்களுடன் (சத்வ,ரஜஸ்,தமோ) விளங்குவதாக தோன்றுகிறது . 
 (54)
पवित्रीकर्तुं नः पशुपतिपराधीनहृदये
दयामित्रैर्नेत्रैररुणधवलश्यामरुचिभिः ।
नदः शोणो गङ्गा तपनतनयेति ध्रुवममुम्
त्रयाणां तीर्थानामुपनयसि संभेदमनघम् ॥५४॥

Pavithrikarthum nah pasupathi-paradheena-hridhaye
Daya-mithrair nethrair aruna-dhavala-syama ruchibhih;
Nadah sono ganga tapana-tanay'eti dhruvamamum
Trayanam tirthanam upanayasi sambhedam anagham.

  சிவனையே எப்போதும் மனதில் நினைத்திருக்கும் அன்னையே !  உலக மக்களை  புனிதமாக்கும் , சிவப்பான சோனா நதி , வெண்மையான கங்கா நதி , கறுப்பான யமுனா நதி , இவைகளின் சங்கமம்  போல் இருக்கும் உனது  கண்களில் உள்ள  சிவப்பு , வெண்மை , கருப்பு , என்ற மூன்று ரேகைகளும்  எங்களை புனிதமாக்கவே உன்னால் கருணையுடன்   படைக்கப்பட்டது  என்பதில் சந்தேகம் இல்லை . 

(55)
  
निमेषोन्मेषाभ्यां प्रलयमुदयं याति जगती
तवेत्याहुः सन्तो धरणिधरराजन्यतनये ।
त्वदुन्मेषाज्जातं जगदिदमशेषं प्रलयतः
परित्रातुं शङ्के परिहृतनिमेषास्तव दृशः॥५५॥

Nimesh'onmeshabhyam pralayam udayam yaati jagati
Tave'ty ahuh santho Dharani-dhara-raajanya-thanaye;
Tvad-unmeshaj jatham jagad idham asesham pralyatah
Pari-trathum sankhe parihruta-nimeshas tava drusah.

 அம்மா ! நீ கண்களைத் திறப்பதால் உலகம் தோன்றுவதாகவும் , கண்களை மூடுவதால் அழிந்துவிடுவதாகவும் கற்றறிந்த ஞானிகள் கூறுகின்றனர் . அப்படி நீ கண் திறந்தபோது உண்டான  இந்த உலகம் , கண்ணை மூடினால்  அழிந்துவிடுமே என்று ( உலக நலத்தை மனதில் எண்ணி ) கருணையுடன் நீ மூடாத கண்களுடன் இருப்பதாக நினைக்கிறேன் .  
 (56)
तवापर्णे कर्णेजपनयनपैशुन्यचकिताः
निलीयन्ते तोये नियतमनिमेषाश्शफरिकाः।
इयं च श्रीर्बद्धछदपुटकवाटं कुवलयं
जहाति प्रत्यूषे निशि च विघटय्य प्रविशति ॥५६॥

Tav'aparne karne-japa-nayana-paisunya-chakita
Niliyante thoye niyatham animeshah sapharikah;
Iyam cha srir baddhasc-chada-puta-kavaiam kuvalayam
Jahati pratyupe nisi cha vighatayya pravisathi.

தாயே ! காதுவரை நீண்ட அழகிய மீன் போன்ற கண்களை உடையவளே ! உன் கண்கள் காதுகளிடம் சென்று தங்களைப் பற்றிக் கோள் சொல்கின்றனவோ என்று பயந்த கறுமையான பெண் மீன்கள் ,  மூடாத கண்களுடன் தண்ணீரில் ஒளிந்து கொண்டு இருக்கின்றன . உன் கண்களில் உள்ள லக்ஷ்மியும் பகலில் கருங்குவளை மலர்களை விட்டு உன் கண்களிடம் வந்தும் , இரவு நேரத்தில்   அம்மலரிடையே சென்று (இரவில்  மலர்வதால்)   அதன் இதழ்களைத் திறந்து கொண்டு  உள்ளே உறைகிறாள் . 
(57)

दृशा द्राघीयस्या दरदलित नीलोत्पलरुचा
दवीयांसं दीनं स्नपय कृपया मामपि शिवे
अनेनायं धन्यो भवति न च ते हानिरियता
वने वा हर्म्ये वा समकरनिपातो हिमकरः ॥५७॥

Drisa draghiyasya dhara-dhalita-nilotpala-rucha
Dhaviyamsam dhinam snapaya kripaya mam api Sive;
Anenayam dhanyo bhavathi na cha the hanir iyata
Vane va harmye va sama-kara-nipaatho himakarah

 சிவனின் துணைவியே ! சற்றே திறந்திருக்கும் உன்னுடைய அழகிய நீண்ட கருங்குவளை போன்ற கண்கள் என்மீதும் பாரபட்ஷமின்றி கருணைப் பார்வையை வீசட்டும் . அதனால் நானும் பயனடைவேன் . சந்திரன் எப்படி பாரபட்ஷமின்றி காடு , அரண்மனை என்று பாராமல் தன கிரணங்களை வீசுகின்றானோ , அதுபோல் என்மீதும் உன் பார்வை படட்டும் . அதனால் உனக்கு ஒன்றும் குறைந்துவிடாது ? 
(58)

अरालं ते पालीयुगलमगराजन्यतनये
न केषामाधत्ते कुसुमशरकोदण्डकुतुकम् ।
तिरश्चीनो यत्र श्रवणपथमुल्लंघ्य विलस-
न्नपांगव्यासंगो दिशति शरसन्धानधिषणाम्  ॥५८॥

Araalam the paali-yugalam aga-rajanya-thanaye
Na kesham adhatte kusuma-shara-kodhanda kuthukam;
Tiraschino yathra sravana-patham ullanghya vilasann-
Apaanga-vyasango disati sara-sandhana-dhisanam

தாயே !  மலையரசன் மகளே ! உன்னுடைய கண்களுக்கும் காதுகளுக்கும் மத்தியில் உள்ள இரு வளைவான கன்னங்களைப் பார்த்தால் மன்மதன் வில் என்று, யார்தான் நினைக்க மாட்டார்கள் ? இந்த கன்னங்களில் உன் கடைக்கண் பார்வை காதுகளைத் தாண்டி ஒளிர்வதால்  உன் கண்களையே பாணங்களாகக் கொண்ட  மன்மதன்  பாணங்களைச் செலுத்துவது போல்  தோன்றுகிறதே ! 

 (59)
स्फुरद्गण्डाभोगप्रतिफलितताटङ्कयुगलं
चतुश्चक्रं मन्ये तव मुखमिदं मन्मथरथम् ।
यमारुह्य द्रुह्यत्यवनिरथमर्केन्दुचरणं
महावीरो मारः प्रमथपतये सज्जितवते ॥५९॥

 Sphurad-ganddabhoga-prathiphalitha-thatanka yugalam
Chatus-chakram manye thava mukham idam manmatha-ratham;
Yam-aruhya druhyaty avani-ratham arkendhu-charanam
Mahaviro marah pramatha-pathaye sajjitavate.

அம்மா ! கண்ணாடி போன்ற உன் இரு கன்னத்தில் , உன்னுடைய காதிலுள்ள தோடுகள் பிரதிபலிக்கிறது . அதனால் உன் முகம் நான்கு சக்கரங்கள் உள்ள மன்மதனுடைய  ரதமாகத்  தோன்றுகிறது . இந்த உன் முகமாகிய  ரதத்தில் ஏறிக்கொண்டு மன்மதனானவன் , சூர்ய , சந்திரர்களை ரதமாகக் கொண்ட , பூமி என்னும் ரதத்தில் ஏறியிருக்கும் சிவனுடனேயே , போர்  புரியத்  தயாராக இருக்கும் வீரனாகிறான் . 
  (60)

सरस्वत्याः सूक्तीरमृतलहरीकौशलहरीः
पिबन्त्या शर्वाणि! श्रवणचुलुकाभ्यामविरलं
चमत्कारश्लाघाचलितशिरसः कुण्डलगणॊ
झणत्कारैस्तारैः प्रतिवचनमाचष्ट इव ते ॥६०॥

Sarasvatyah sukthir amrutha-lahari-kaushala-harih
Pibanthyah Sarvani Sravana-chuluk abhyam aviralam;
Chamathkara-slagha-chalita-sirasah kundala-gano
Jhanatkarais taraih prati-vachanam achashta iva te.

சிவனின் துணைவியே !  அமிர்தம் போன்ற இனிமையான உன்னுடைய  பேச்சுகளை  கல்விக்கு அரசியான சரஸ்வதி , அசையாமல்  , இடைவிடாமல் , ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கிறாள் . உன் பேச்சிலுள்ள ரசங்களை அறிந்து , வியப்பினால் , அங்கும் , இங்கும் தலையை அசைத்த வண்ணமே இருக்கும் சரஸ்வதி தேவியின் காதுகளிலுள்ள குண்டலங்கள் ,  சப்தம் செய்வது , உன்  பேச்சுகளை ஆமோதிப்பது போல் இருக்கிறது .  
(61)

असौ नासावंशस्तुहिनगिरिवंशध्वजपटी!
त्वदीयो नेदीयः फलतु फलमस्माकमुचितम् ।
वहत्यन्तर्मुक्ताः शिशिरकरनिश्वासगलितं
समृद्ध्या यत्तासां बहिरपि च मुक्तामणिधरः ॥६१॥

Asau naasa-vamsas tuhina-girivamsa-dhvajapati
Thvadhiyo nedhiyah phalatu phalam asmakam uchitam;
Vahathy anthar muktah sisira-kara-nisvasa galitham
Samruddhya yat tasam bahir api cha mukta-mani-dharah

 அம்மா ! முத்துக்கள் நிறைந்ததாகக் கூறப்படும் இளமூங்கில் போல் இருக்கும் உன்னுடைய மூக்கிலிருந்து , நீ வெளிவிடும் மூச்சுக்  காற்றிலிருந்து , வெளிவரும் ஒரு முத்து மணியானது , நீ அணிந்திருக்கும் முத்து மூக்குத்தியாக ஆனது போல் தோன்றுகிறது . அந்த   முத்து மூக்குத்தியானது எங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளையும் தரட்டும் .   
(62)
 प्रकृत्या रक्तायास्तव सुदति! दन्तछदरुचेः
प्रवक्ष्ये सादृश्यं जनयतु फलं विद्रुमलता।
न बिंबं तद्बिंबप्रतिफलनरागादरुणितं
तुलामध्यारोढुं कथमिव न विलज्जेत कलया ॥६२॥
Prakrithya'rakthayas thava sudhati dantha-cchada-ruchaih
Pravakshye saadrisyam janayathu phalam vidhruma-latha;
Na bimbam tad-bimba-prathiphalana-raagad arunitham
Thulam adhya'rodhum katham iva bhilajjetha kalaya.
 தாயே ! அழகிய பல் வரிசை  கொண்டவளே ! உன்னுடைய  அழகான சிவந்த உதட்டிற்கு  ஈடாக எதையும் கூற முடியாது . ஒரு சமயம்  பவழக்கொடி பழம் தந்தால் , அது ஈடாகலாம் .  கோவைப் பழம் கூட , உன்னுடைய சிவந்த உதட்டின் நிறத்தைப் பிரதிபலிப்பது போல் இருப்பதால் ,  அது துளி அளவு கூட சமமாக முடியாமல் , வெட்கப்படுகிறது . 
 (63)
स्मितज्योत्स्नाजालं तव वदनचन्द्रस्य पिबतां
चकोराणामासीदतिरसतया चञ्चुजडिमा ।
अतस्ते शीतांशोरमृतलहरीमाम्लरुचयः
पिबन्ति स्वच्छन्दं निशि निशि भृशं काञ्चिकधिया ॥६३॥
Smitha-jyothsna-jalam thava vadana-chandrasya pibatham
Chakoranam asid athi-rasataya chanchu-jadima;
Athas the sithamsor amrtha-laharim amla-ruchayah
Pibanthi svacchhandam nisi nisi bhrusam kaanjika-dhiya.
 தாயே ! உன் நிலவு போன்ற முகத்தில் உள்ள இனிமையான ஒளிமயமான  புன்னகையை  , நிலவு  ஒளி  என்று  நினைத்துக் குடித்த  சகோரபட்சிகள் , உன்  அமிர்தம் போன்ற இனிமை ஒளியால் திகட்டல் கொண்டு , அதை மாற்றிக்கொள்ள நினைத்து , சந்திரனுடைய  அமிர்த  ஒளிக்கிரணங்களை , புளித்த கஞ்சியாக எண்ணி அதை இரவு நேரத்தில் குடிக்கின்றன . 
(64)

अविश्रान्तं पत्युर्गुणगणकथाम्रेडनजपा
जपापुष्पच्छाया तव जननि! जिह्वा जयति सा ।
यदग्रासीनायाः स्फटिकदृषदच्छच्छविमयी
सरस्वत्या मूर्त्तिः परिणमति माणिक्यवपुषा ॥६४॥

Avishrantam pathyur guna-gana-katha'mridana-japa
Japa-pushpasc-chaya thava janani jihva jayathi saa;
Yad-agrasinayah sphatika-drishad-acchac-chavi mayi
Sarasvathya murthih parinamati manikya-vapusha.

அம்மா  ! கற்புக்கரசியான நீ ,  எப்பொழுதும்  உன் கணவனின் பெருமைகளைத் திரும்பத்   திரும்பச்  சொல்வதால் , புனிதமான உன் நாக்கு , செம்பருத்திப்  பூவைப் போல் சிவந்த நிறமாகவே  இருக்கிறது . உன் நாவின் நுனியில் இருக்கும் வாணியின் சுத்த வெண்மை நிறமானது , மாணிக்கம் போல் சிவந்த நிறமாகவே  மாறிவிட்டது . 
 (65)
रणे जित्वा दैत्यानपहृतशिरस्त्रैः कवचिभि-
र्निवृत्तैश्चण्डांशत्रिपुरहरनिर्म्माल्यविमुखैः ।
विशाखेन्द्रोपेन्द्रैः शशिविशदकर्पूरशकला
विलीयन्ते मातस्तव वदनतांबूलकबलाः ॥६५॥

Rane jithva'daithyan apahrutha-sirastraih kavachibhir
Nivrittais Chandamsa-Tripurahara-nirmalva-vimukhaih;
Visakh'endr'opendraih sasi-visadha-karpura-sakala
Viliyanthe maatas tava vadana-tambula-kabalah.

தேவீ ! அசுரர்களுடன் போர் செய்து திரும்புகின்ற முருகன் , விஷ்ணு , இந்திரன் ஆகியோர்  தங்களுடைய வெற்றியை உன்னிடம் தெரிவிக்க  வருகின்றபோது , அவிழ்த்துவைக்கப்பட்ட  தலைப்பாகையை கையிலும் , அவிழ்க்காத கவசங்களுடனும் உன்னை வணங்கி ,   சண்டிகேஸ்வரருக்குச் சொந்தமான சிவ நிர்மால்யத்தை மதிக்காமல் , நீ  வாயில் மென்று தருகின்ற பச்சைக்  கற்பூரத்துடன் கூடிய  தாம்பூலக் கவளங்களை ஆசையுடனும்  , பக்தியுடனும் மென்று சாப்பிடுகிறார்கள் . 
  (66)
विपञ्च्यागायन्ती विविधमपदानं पशुपते-
स्त्वयारब्धे वक्तुं चलितशिरसा साधुवचने ।
तदीयैर्माधुर्यैरपलपिततन्त्रीकलरवां
निजां वीणां वाणी निचुलयति चोलेन निचृतम् ॥६६॥

 Vipanchya gayanthi vividham apadhanam Pasupathea
Thvay'arabdhe vakthum chalita-sirasa sadhuvachane;
Tadhiyair madhuryair apalapitha-tantri-kala-ravam
Nijaam vinam vani nichulayati cholena nibhrutham.

தாயே ! சரஸ்வதியானவள் , சிவனுடைய  புகழைத் தன்னுடைய வீணையில் இசைக்க ,  நீயும்  மனமகிழ்ந்து ,  ஆகா ! என்று , அதனைப் புகழ , உன் இனிமையான குரல் வீணையின்   ஒலிதனைப் பழிப்பதுபோல் இருப்பதைக் கேட்டு,வெட்கமடைந்த கலைவாணி , வீணையை  உறைத்துணியால் நன்றாக  மறைகின்றாளே !   
(67)

कराग्रेणस्पृष्टं तुहिनगिरिणा वत्सलतया
गिरीशेनोदस्तं मुहुरधरपानाकुलतया ।
करग्राह्यं शंभोर्मुखमुकुरवृन्तं गिरिसुते
कथंकारं ब्रूमस्तव चिबुकमौपम्यरहितम्  ॥६७॥

Karagrena sprustam thuhina-girina vatsalathaya
Girisen'odasthama muhur adhara-pan'akulataya;
Kara-grahyam sambhor mukha-mukura-vrintham Giri-sute
Kadham-karam bramas thava chubukam aupamya-rahitham.

தாயே ! மலையரசன் குலவிளக்கே ! உன்  தந்தையால் உனது முகவாயும்  அளவற்ற பாசத்தினால் கைவிரல்  நுனியால் தொடப்பட்டதும் , உன் கணவனாகிய சிவனின் கைகளால் அதர பானம் செய்யும் நினைவுடன் அடிக்கடி உயரத்தூக்கப் பட்டதுமான , உன் ஈடு இணையற்ற  முகவாயானது , உன்னுடைய  முகமாகிய கண்ணாடிக்கு பிடி போல் இருக்கிறது . இந்த அழகான முகவாயை நான் எப்படி வருணிப்பேன் ? 
(68)

भुजाश्लेषान्नित्यं पुरदमयितुः कण्टकवती
तव ग्रीवा धत्ते मुखकमलनालश्रियमियम् ।
स्वतः श्वेता कालागरुबहुलजंबालमलिना
मृणालीलालित्यं वहति यदधो हारलतिका ॥६८॥

Bhujasleshan nithyam Pura-damayituh kantaka-vathi
Tava griva dhatte mukha-kamalanaala-sriyam iyam;
Svatah swetha kaalaagaru-bahula-jambala-malina
Mrinali-lalithyam vahati yadadho hara-lathika.

  அம்மா ! சிவன் உன்னை எப்போதும் தழுவுவதால் ஏற்படும் மயிர்க்கூச்சலினால்  முள்ளு முள்ளாகத் தோன்றும் உன் கழுத்து , உன் முகமான தாமரைக்கு , முள் கூடிய தாமரைத் தண்டு போல் தோன்றுகிறது . உன் கழுத்திலுள்ள வெண்முத்து மாலையானது ,    உன்  கழுத்தில் பூசப்பட்ட  அகருவினால்  , கறுமை நிறம் அடைந்து , சேற்றில் உள்ள தாமரைக் கொடிபோல் தோன்றுகிறதே ! 
(69)

गले रेखास्तिस्रो गतिगमकगीतैकनिपुणे
विवाहव्यानद्धप्रगुणगुणसंख्याप्रतिभुवः
विराजन्ते नानाविध मधुररागाकरभुवां
त्रयाणां ग्रामाणां स्थितिनियमसीमान इव ते ॥६९॥

Gale rekhas thisro gathi-gamaka-gith'aika nipune
Vivaha-vyanaddha-praguna-guna-samkhya-prahibhuvah;
Virajanthe nana-vidha-madhura-ragakara-bhuvam
Thrayanam gramanam sthithi-niyama-seemana iva the.

அம்மா ! கதி ,கமகம் ,கீதம் என்ற இசையில் வல்லவளே ! உன் கழுத்திலுள்ள முன்று ரேகைகளும், சிவன் உனக்கு திருமணநாள் அன்று அணிவித்த மங்கள சூத்திரத்தின் அடையாளம் போலும் .  இனிமையான சங்கீதத்திற்கு ஆதாரமான சட்ஜம் ,மத்யமம் ,காந்தாரம் என்ற   இவைகளின்  அடிப்படைகளைக்   காட்டும் எல்லைகள் போல் விளங்குகிறது .  
(70)

 मृणालीमृद्वीनां तव भुजलतानां चतसृणां
चतुर्भिस्सौन्दर्यं सरसिजभवः स्तौति वदनैः।
नखेभ्यस्संत्रस्यन् प्रथममथनादन्तकरिपो-
श्चतुर्णां शीर्षाणां सममभयहस्तार्पणधिया॥।७०॥

 Mrinali-mridhvinam thava bhuja-lathanam chatasrinam
Chaturbhih saundaryam Sarasija-bhavah stauthi vadanaih;
Nakhebhyah samtrasyan prathama-madhanadandhaka-ripo
Chaturnam sirshanam samam abhaya-hasth'arapana-dhiya.

தாயே ! அபயாம்பிகா ! ஒரு சமயம் பிரம்மாவினுடைய ஐந்தாவது தலையை சிவனும் கிள்ளியதால், அவருடைய விரல் நகங்களுக்கு பயந்து நடுங்கிய  பிரம்மா , உன்னிடம் சரண் அடைந்து , தன்னுடைய  நான்கு தலைகளுக்கும் ஒரே நேரத்தில் உன் நான்கு கைகளால் அபயம் கிடைக்கும் என்று எண்ணி , உன்னுடைய மென்மையான தாமரைக் கோடி போன்ற நான்கு கைகளின்  அழகினைத் தன் நான்கு முகங்களினாலும் புகழ்கிறார்  .   
(71)
नखानामुद्योतैर्नवनलिनरागं विहसतां
कराणां ते कान्तिं कथय कथयामो कथमुमे ।
कयाचिद्वा साम्यं भजतु कलया हन्त कमलं
यदि क्रीडल्लक्ष्मी चरणतललाक्षारसचणम् ॥७१॥

Nakhanam uddyotai nava-nalina-ragam vihasatham
Karanam te kantim kathaya kathayamah katham Ume;
Kayachid va samyam bhajatu kalaya hanta kamalam
Yadi kridal-lakshmi-charana-tala-laksha-rasa-chanam.

 அம்மா !  உமா தேவீ ! புதிதாக மலர்ந்த தாமரைப் பூவின் ஒளியைவிட பிரகாசமான உன் கைவிரல் நகப் பொலிவை நாங்கள் எப்படி வருணிக்கமுடியும் ? செந்தாமரைப்பூவிற்கு , அதில் வாழ்கின்ற  லக்ஷ்மி தேவியின் சரணங்களில் இருக்கும் மருதாணியால் தானே அந்த ஒளி கிடைத்தது . அந்த  பிரகாசமானது உன் கரங்களின் அழகில் ஏதோ ஒரு சாயல் போல் ஆகுமே !    
 (72)
समं देवि स्कन्दद्विपवदनपीतं स्तनयुगं
तवेदं नः खेदं हरतु सततं प्रस्नुतमुखम्
यदालोक्याशंकाकलितहृदयो हासजनकः
स्वकुंभौ हेरम्बः परिमृशति हस्तेन झटिति ॥७२॥

Samam devi skanda dwipa vadana peetham sthanayugam
Thavedham na khedham harathu sathatham prasnutha mukham
Yada loakakhya sankha kulitha hridayo hasa janaka
Swa kumbhou herambha parisrusathi hasthena jhhaddithi

 தேவீ ! உன்னுடைய பிள்ளைகளான கணபதி , கந்தன் இருவராலும் ஒரே நேரத்தில் பருகப்பட்ட உன் ஸ்தனங்களின் பருமனைக் கண்ட கணபதி , தன் தலையிலுள்ள கும்பங்களை நீ அபகரித்து , உன்  ஸ்தனங்களாக வைத்துக் கொண்டாயோ என்று , குழந்தைத் தனமாக  நினைத்து தன் தலையில் கும்பம் இருக்கிறதா , என்று தலையைத்  தடவிப் பார்க்கிறார் . அதைப் பார்த்த தாய் , தந்தையாரான நீங்கள் ,  சிரித்தீர்களே  ! அந்த பெருமையுடைய உன் ஸ்தனங்கள் எங்களுடைய துன்பத்தைப் போக்கட்டுமே !    
(73)
  
अमू तेवक्षोजावमृतरसमाणिक्यकुतुपौ
न सन्देहस्पन्दो नगपतिपताके मनसि नः।
पिबन्तौ तौ यस्मादविदितवधूसंगरसिकौ
कुमारावद्यापि द्विरदवदनक्रौञ्चदलनौ ॥७३॥

Amuu theey vakshoja vamrutharasa manikhya kuthupou
Na sadhehaspatho nagapathi pathake manasi na
Pibhanthou thow yasma dhavadhitha bhadusangha rasikou
Kumara vadhyapi dwiradhavadhana krouncha dhalanou

அம்மா ! உன் ஸ்தனங்கள் அமிர்தம் நிரம்பிய மாணிக்ய குடுவைகள் . பாலுள்ள ஸ்தானமாக இருந்திருந்தால் கணபதியும்  , கந்தனும்  குழந்தை வயதினைத் தாண்டி பருவத்தின் முதிர்ச்சியை அடைந்திருப்பார்களே !  அந்த  ஸ்தனங்களில் இருந்து   அமிர்தத்தைப் பருகியதால் தான்  கணபதியும் கந்தனும் பால்ய வயதினைத் தாண்டாமல்  மங்கையர் சம்பந்தம் இல்லாத  குழந்தைகளாகவே இருக்கின்றனர் . 
(74)

वहत्यंब स्तंबेरमदनुजकुंभप्रकृतिभिः
समारब्धां मुक्तामणिभिरमलां  हारलतिकाम् ।
कुचाभोगो बिंबाधररुचिभिरन्तश्शबलितां
प्रतापव्यामिश्रां पुरदमयितुः कीर्तिमिव ते ॥७४॥

Bahathyambha sthamberam dhanuja kumbha prakrithibhi
Samaarabhdham muktha mamibhi ramalam haara lathikam
Kuchabhogo bhimbhadara ruchibhi rathna saabhalitham
Prathapa vyamishram puradamayithu keerthimiva thee

தாயே  ! பரமேஸ்வரி ! நீ கஜாசுரனை வதம் செய்து அவன் கும்பத்திலிருந்து உண்டான பல நிறங்கள் உள்ள  முத்து மாலையை உன்  ஸ்தனங்களின் மத்தியில் அணிந்திருக்கிறாய் . அந்த பல நிறமுடைய முத்தானது , உன் சிவந்த உதட்டின் ஒளி வீசி , வெளிப்புறம் சிவப்பாகவும் , உட்புறம்  பலவர்ணங்களோடும்  விளங்குகிறது . இந்த முத்து மாலையானது மூ உலகையும் எரித்த பரமசிவனது வெற்றி மாலையாகத் தோன்றுகிறது . 

(75)

तव स्तन्यं मन्ये धरणिधरकन्ये हृदयतः
पयः पारावार: परिवहति सारस्वतमिव ।
दयावत्या दत्तं द्रविडशिशुरास्वाद्य तव यत्
कवीनां प्रौढानामजनि कमनीयः कवयिता ॥७५॥

Twa stanyam manye dharanidhara kanye hridhayatha
Paya paraabhaara parivahathi saaraswathamiva
Dhayavathya dhattham dravida sisu raaswadhya thava yat
Kaveenam proudana majani kamaniya kavayitha

 அம்மா ! உன்  ஸ்தனங்களிலிருந்து பெருகும் பால் இதயத்திலிருந்து பெருகும் பாற்கடல் . கலைவாணியே அந்தப் பாலாக உருவெடுத்தது போல் தோன்றுகிறது . உன்னால் கருணையுடன்  தரப்பட்ட , பாலைக் குடித்த  திராவிட  நாட்டுக் குழந்தை ஒருவன்  கற்றறிந்தோர்  போற்றும்  பெருங்கவிஞ்சனாக ஆகிவிட்டான் அன்றோ ?  
    
 (76)
हरक्रोधज्वालावलिभिरवलीढेन वपुषा
गभीरे ते नाभीसरसि कृतसंगो मनसिजः।
समुत्तस्थौ तस्मादचलतनये धूमलतिका
जनस्तां जानीते तव जननि रोमावलिरिति ॥७६॥

Hara krodha jwalaavalibhir avaleedena vapusha
Gabhire thee nabhisarasi kruthasangho manasija
Samuthasthou thasmath achalathanaye dhoomalathika
Janastham janithe thava janani romaavalirithi

  அன்னையே ! பரமசிவனுடைய கோபத்தினால் அவரது நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதன் , அந்த நெருப்பின் வெப்பம்  தாளமுடியாமல் , அதிலிருந்து  விடுபடுவதற்காக ,  குளுமையான தடாகம் போன்ற , ஆழமான உன்னுடைய தொப்புள் குழியில் குதித்தான் . தடாகத்தில் , நெருப்புடன் குதித்ததால் உண்டான புகையை , உன் நாபியைச் சுற்றிய ரோமங்களாக நினைக்கின்றனர்.  

(77)

यदेतत् कालिन्दीतनुतरतरङ्गाकृति शिवे
कृशे मध्ये किञ्चिज्जननि!यत् भाति सुधियां।
विमर्द्दादन्योन्यं कुचकलशयोरन्तरगतं
तनूभूतं व्योम प्रविशदिव नाभिं कुहरिणीं ॥७७॥

Yadhethath kalindhi thanu thara ngaa kruthi shive
Krushe mahye kinchid janani thawa yadbhathi sudheeyam
Vimardha -dhanyonyam kuchakalasayo -ranthara gatham
Thanu bhootham vyoma pravishadhiva nabhim kuharinim

 அம்மா ! தியானிகளுக்கு மட்டுமே  புலப்படக்கூடிய உன் சிறு இடுப்பில் , யமுனை நதியின் கறுமையான மெல்லிய அலை போன்ற , உன்னுடைய ரோமவரிசை , தொப்புள் குழியில் முடிவடைகிறது . அதைப் பார்த்தால் நீல வானமானது உன் பருத்த கலசங்கள் போன்ற இரு ஸ்தனங்களுக்கு இடையே அகப்பட்டு அதனுடைய அழுத்தத்தினால் , எங்கே தான் அழிந்து விடுவோமோ என்று பயந்து , மெல்லியதாக ஆகி ,தொப்புள் குழியினுள் செல்வது போல் தோன்றுகிறது . 
(78)

स्थिरोगङ्गावर्तः स्तनमुकुलरोमावलिलता-
कलावालं कुण्डं कुसुमशरतेजोहुतभुजः।
रतेर्लीलागारं किमपि तव नाभिर्गिरिसुते
बिलद्वारं सिद्धेर्गिरिशनयनानां विजयते ॥७८॥

Sthiro gangavartha sthana mukula romaa vali latha
Kalaabhalam kundam kusuma sara thejo hutha bhuja
Rathe leelamgaram kimapi thava nabhir giri suthe
Bhila dwaram siddhe rgirisa nayananam vijayathe 

  தாயே ! உன் தொப்புள் இருக்கும் இடமானது , அமைதியான கங்கை நதியின் சுழல் போன்றது. உன் ஸ்தனமாகிய தாமரை மொட்டுக்களைச் சுமக்கின்ற உனது  ரோமங்களாகிய கொடியின்  வேர்களுக்கு  , பாத்தி போன்றது .  மன்மதனின் ஒளியான நெருப்பிற்கு ஹோமகுண்டம் போன்றது . மன்மதனின் மனைவியான ரதிக்கு விளையாடும் இடமானது. பரமசிவனின் தவ உயர்விற்கு சித்தி அடையும் குகை வழி போன்றது. இது போன்று ஆழம் தெரியாத உன் தொப்புளின் அழகு , வருணனைக்கு  அப்பாற்ப்பட்டதன்றோ ? 
  (79)
निसर्गक्षीणस्य स्तनतटभरेण क्लमजुषो
नमन्मूर्तेर्नारीतिलक! शनकैस्त्रुट्यत इव ।
चिरं ते मध्यस्य त्रुटिततटिनीतीरतरुणा
समावस्थास्थेम्नो भवतु कुशलं शैलतनये ॥७९॥

Nisargha ksheenasya sthana thata bharena klamajusho
Namanmurthe narree thilaka sanakaii -sthrutayatha eva
Chiram thee Madhyasya thruthitha thatini theera tharuna
Samavasthaa sthemno bhavathu kusalam sailathanaye

 அம்மா !   இயற்கையில் மெல்லியதான உன் இடுப்பு  , உன் இரு பருத்த ஸ்தனங்களின் பாரத்தைத்  தாங்க முடியாமல் , கொஞ்சம்  முன்புறம் சாய்ந்து இருப்பதைப் பார்த்தால் , ஒடிந்து விழுந்து விடுமோ , என்று தோன்றுகிறது .  தண்ணீருள்ள ஆற்றின் கரையிலுள்ள மரமானது , கீழே விழுந்துவிடும்  போல்  சாய்வாக இருந்தாலும் , எவ்வளவு உறுதியாக இருக்குமோ , அதுபோல்  உன்  இடுப்பிற்கு எந்த ஆபத்தும் வராமல்         ( ஓடிந்துவிடாமல்  ) , நீண்டகாலம் நன்றாக  இருக்கப் பிரார்த்திக்கிறேன் .
 (80)
कुचौ सद्यःस्विद्यत्तटघटितकूर्पासभिदुरौ
कषन्तौ दोर्मूले कनककलशाभौ कलयता ।
तव त्रातुं भंगादलमिति वलग्नं तनुभुवा
त्रिधानद्धं देवि! त्रिवलिलवलीवल्लिभिरिव ॥८०॥

Kuchou sadhya swidhya-sthata-ghatitha koorpasabhidurou
Kasnthou dhormule kanaka kalasabhou kalayatha
Thava thrathum bhangadhalamithi valagnam thanubhava
Thridha naddham devi trivali lavalovallibhiriva

  தேவீ ! உன் பதியான பரமேஸ்வரனின் பெருமைகளை , நீ, நினைத்து , நினைத்து மகிழ்வதால் , உன் தங்கக்கலசம் போன்ற  ஸ்தனங்கள் , அடிக்கடி வியர்த்து ,  பூரிப்பதால் , மன்மதன் , இந்த ஸ்தன சுமையினால் உன் இடுப்பு ஒடிந்து விழுந்துவிடப் போகிறதே  என்று , உன் இடுப்பை வள்ளிக் கொடிகளால்  மூன்று சுற்றாக சுற்றி இருப்பது போல் தோன்றுகிறது  (இடுப்பிலுள்ள மூன்று சதை  மடிப்புகளின் அழகு  ).    
 (81)
गुरुत्वं विस्तारं क्षितिधरपति पार्वति निजा-
न्नितंबादाच्छिद्य त्वयि हरणरूपेण निदधे ।
अतस्ते विस्तीर्णो गुरुरयमशेषां वसुमतीं
नितंबप्राग्भारः स्थगयति लघुत्वं नयति च ॥८१॥

Guruthvam vistharam ksithidharapathi paravathy nijaath
Nithambha Dhhachhidhya twayi harana roopena nidhadhe
Athasthe vistheerno guruyamasesham vasumathim
Nithambha-praabhara sthagayathi lagutwam nayathi cha

 தேவீ ! பார்வதி ! உன்னுடைய பின்பாகமானது ( நிதம்பம் ) பருத்து , அகலமாக இருப்பதால், இந்த பூமியையே மறைத்து , அதை லேசாக இருப்பது போல் செய்கிறது . இதைப் பார்த்தால் இந்த பருமனும் , அகலமும் உன்  தந்தையான பர்வதராஜன் தன்னுடைய அடிவாரத்திலிருந்து உனக்கு அளித்த  ஸ்ரீதன சீர்வரிசை போல் தோன்றுகிறது .  

 (82)
करीन्द्राणां शुण्डान् कनककदलीकाण्डपटली-
मुभाभ्यामूरुभ्यामुभयमपि निर्जित्य भवति
सुवृत्ताभ्यां पत्युः प्रणतिकठिनाभ्यां गिरिसुते !
विधिज्ञे! जानुभ्यां विबुधकरिकुंभद्वयमपि ॥८२॥

Karrendranam sundan kanaka kadhali kaadapatali
Umabhamurubhyam - mubhayamapi nirjithya bhavathi
Savrithabhyam pathyu pranathikatinabham giri suthe
Vidhigne janubhysm vibhudha karikumbha dwayamasi

 அம்மா !  வேதநாயகியே ! உன்தொடைகள் இரண்டும் , யானைகளின்  துதிக்கைகளையும்  , தங்கமயமான வாழைமரத் தண்டுகளையும் விட , மிக அழகாக இருக்கின்றன . உன்  முழங்கால்கள்   உருண்டையாகவும் , உன்  கணவனாகிய பரமசிவனை , அடிக்கடி வணங்குவதால்  சற்று   கடினமாகவும் உள்ள  அந்த முழங்கால்களால் ,  ஐராவதத்தின் தலையில் உள்ள கும்பங்களை நீ வெற்றி கொண்டாயே !  
 (83)
पराजेतुं रुद्रं द्विगुण्शरगर्भौ गिरिसुते !
निषंगौ जंघे ते विषमविशिखो बाढमकृत॥
यदग्रे दृश्यन्ते दशशरफलाः पादयुगली
नखाग्रच्छद्मानस्सुरमकुटशाणैकनिशिताः ॥८३॥

Paraa jenu rudhram dwigunasara garbhoy girisuthe
Nishanghou Unghe thee vishamavishikho bhada -maakrutha
Yadagre drishyanthe dasa satra phalaa paadayugali
Nakhagrachadhyan sura makuta sanayika nishitha

  தாயே !   உன்னுடைய கனுக்கால்கள், பரமசிவனை வெற்றி கொள்வதற்காக , மன்மதனால் தயாரிக்கப்பட்ட  அம்பராத்துணிபோல் தோன்றுகிறது . தன்னுடைய  ஐந்து பாணங்கள் போதாமல் ,  உன் கால் பத்து விரல்களையும் , பத்து  பாணங்களாகப் படைத்தான் . அந்த அம்பராத்துணிகளின் முன்பாகத்தில் தெரிகின்ற உன் கால் விரல்களின் நகங்கள் , உன்னை வணங்க வருகின்ற வானவர்களின் மணிமுடிகளிலுள்ள (மாணிக்கம் , ரத்தினம்  போன்றவை )  சாணைக்கற்களால் தீட்டப்பட்டு இரும்பு கூர் போல் இருக்கிறது .  
 (84)
श्रुतीनं मूर्द्धानो दधति तव यौ शेखरतया
ममाप्येतौ मातः शिरसि दयया धेहि चरणौ ।
ययोः पाद्यं पाथः पशुपतिजटाजूटतटिनी
ययोर्लाक्षालक्ष्मीररुणहरिचूडामणिरुचिः ॥८४॥

Sruthinam murdhano dadhati thava yau sekharathaya
Mama'py etau Matah sirasi dayaya dhehi charanau;
Yayoh paadhyam paathah Pasupathi-jata-juta-thatini
Yayor larksha-lakshmir aruna-Hari-chudamani-ruchih

  தாயே ! எந்த சரணங்களை  வேதங்களின் சிகரமான உபநிடதங்கள் , தன் தலையில் மலராக  சூடிக்கொள்கின்றனவோ , எந்த சரணங்கள்  பரமசிவனது சடைமுடியிலுள்ள புனித கங்கை நீரால் நீராட்டப்படுகிறதோ ,  எந்த சரணங்களில் பூசியிருக்கும் மருதாணியின் பொலிவானது  , வணங்க வரும் விஷ்ணுவின் சூடாமணியின் பொலிவினால் ஏற்படுகிறதோ , அந்தப் புனித  மலரடியை என்  தலைமீதும் வைப்பாயாக !  
  
(85)
नमोवाकं ब्रूमो नयनरमणीयाय पदयो-
स्तवास्मै द्वन्द्वाय स्फुटरुचिरसालक्तकवते ।
असूयत्यत्यन्तं यदभिहननाय स्पृहयते
पशूनामीशानः प्रमदवनकङ्केलितरवे ॥८५॥

Namo vakam broomo nayana ramaneeyaya padayo
Thavasmai dwandhaya sphuta ruchi rasalaktha kavathe
Asooyathyantham yadhamihananaaya spruhyathe
Passonamisana pramadhavana kamkhelitharave

 தாயே  ! மருதாணியுடன் கூடிய உன்  பாதங்கள் எங்களுக்கு இனிமையானவை , மேன்மைகளைத் தருபவை . இந்த பாதங்களினால்  உதைபட வேண்டும் என்று  ஆசைப்படும் நந்தவனத்து அசோக மரத்தைக் கண்டு , சிவனும் பொறாமை  அடைகிறார் . அந்த புனித பாத கமலங்களை  நான்  வணங்குகிறேன் .
(86)

मृषा कृत्वा गोत्रस्खलनमथ वैलक्ष्यनमितं
ल्लाटे भर्तारं चरणकमले ताडयति ते ।
चिरादन्तः शल्यं दहनकृतमुन्मूलितवता
तुलाकोटिक्वाणैः किलिकिलितमीशानरिपुणा ॥८६॥

Mrisha krithva gothra skhalana matha vailakshya namitham
Lalate bhartharam charana kamala thadayathi thee
Chiradantha salyam dhahanakritha -munmilee thavatha
Thula koti kkana kilikilith -meesana ripuna

  தாயே ! உன் தங்கத் திருவடிகள் தன்மீது படவேண்டும் என்று , உன் கணவனாகிய சிவன் , உன்னை வேறு ஒரு பெண்ணின் பெயரைச்  சொல்லி அழைக்க , அதனால் உனக்கு ஏற்பட்ட    கோபத்தைத் தணிக்க , என்னசெய்வது என்று தெரியாமல் , அவர் உன்னை வணங்கும் போது , உன் பாதகமலமானது அவர் தலைமீது பட , அப்பொழுது எழுந்த  உன் கால் தண்டை  ஒலி  ஒசைதனைக் கேட்ட மன்மதன் , தன்னை எரித்த சிவனிடம் உண்டான  பகைதனையும் மறந்து தானே வெற்றி பெற்றதாக முரசு கொட்டுவது போல் தோன்றுகிறது .  

 (87)
हिमानीहन्तव्यं हिमगिरिनिवासैककचतुरौ
निशायां निद्राणं निशि चरमभागे च विशदौ ।
वरं लक्ष्मीपात्रं श्रियमतिसृजन्तौ समयिनां
सरोजं त्वत्पादौ जननि! जयतश्चित्रमिह किं  ॥८७ ॥

Himani-hanthavyam hima-giri-nivas'aika-chaturau
Nisayam nidranam nisi charama-bhaghe cha visadau;
Varam laksmi-pathram sriyam ati srijanthau samayinam
Sarojam thvad-padau janani jayatas chitram iha kim.

  அம்மா ! பனிமலையில் இருக்கும் உன் பாத கமலம் , இரவு , பகல் , சந்தியா காலம் ஆகிய எந்நேரமும் மலர்ந்து  இருக்கக் கூடியவை . உன்னையே நினைத்து தியானிக்கும் அடியவர்க்கு அழியாத செல்வம் தரக்கூடியது . திருமகளான லக்ஷ்மி வாழ்கின்ற தாமரையானது , பனியால் உதிர்கின்றது , இரவில்  மூடிக்கொள்கிறது .  இந்தத் தாமரையை விட உன் பாத தாமரை மிகவும் உயர்வுடையது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ? 
  
(88)
पदं ते कीर्तीनां प्रपदमपदं देवि विपदां
क्थं नीतं सद्भिः कठिनकमठीकर्परतुलाम् ।
कथं वा बाहुभ्यामुपयमनकाले पुरभिदा
यदादाय न्यस्तं दृषदि दयमानेन मनसा ॥८८॥

 Padham the kirhtinam prapadham apadham Devi vipadham
Katham nitham sadbhih kutina-kamati-karpara-thulam;
Katham vaa bahubhyam upayamana-kaale purabhida
Yad adhaya nyastham drshadi daya-manena manasa.

  தாயே ! பக்தர்களுக்கு உயர்வை கொடுக்கக் கூடியதும் , அவர்களது துன்பங்களைப் போக்கக்கூடியதுமான , பெருமையுடைய உன் மென்மையான பாத நுனியைப் பிடித்து , சிவனும்  அளவற்ற ஆசையுடன் திருமணநாளன்று , எப்படித்தான் கடினமான கருங்கல் அம்மி மீது வைத்தாரோ ? கவிகளும் இந்த மென்மையான பாதங்களின் மேல்பாகத்தை ,  ஆமை முதுகு  ஓட்டிற்கு  உவமையாகக்  எப்படித்தான்  கூறினாரோ ? 

(89)

नखैर्नाकस्त्रीणां करकमलसंकोचशशिभि
स्तरूणां दिव्यानां हसत इव ते चण्डि चरणौ।
फलानि स्वस्थेभ्यः किसलयकराग्रेण ददतां
दरिद्रेभ्यो भद्रां श्रियमनिशमन्हाय ददतौ ॥८९॥

Nakhair naka-sthrinam kara-kamala-samkocha sasibhi
Tarunam dhivyanam hasata iva te chandi charanau;
Phalani svah-sthebhyah kisalaya-karagrena dhadhatam
Daridhrebhyo bhadraam sriyam anisam ahnaya dhadhatau.

 தாயே ! தேவலோகத்தில் உள்ள கற்பகமரங்கள் இலைகளாகிய தன கரங்களால் , வானவர்களுக்கு அவர்கள் விரும்பியதைத் தருகின்றன .  ஆனால் நீயோ உன்பாதங்களால் வானவர்களுக்கும் , ஏழை  தரித்திரர்களுக்கும் எப்பொழுதும் சீக்கிரத்தில் செல்வத்தை வாரி , வாரி வழங்குகின்றாய் . வானுலக கற்பகமரங்கள் கைகளால் தருவதை, நீயோ கால்களால் தந்து, அவைகளை ஏளனம் செய்கிறாய் . தேலோகத்துப் பெண்களின்  தாமரை போன்ற கைகளை மூடி  வணங்கச் செய்கின்ற , சந்திரனைப்போல் ஒளி உடைய உன் பாத அழகினைச் சொல்ல வார்த்தைகள் ஏது ?
  (90)
ददाने दीनेभ्यः श्रियमनिशमाशानुसदृशी-
ममन्दं सौन्दर्यप्रकरमकरन्दं विकिरति ।
तवास्मिन् मन्दारस्तबकसुभगे यातु चरणे
निमज्जन् मज्जीवः करणचरणः षट्चरणताम् ॥९०॥

Dhadhane dinebhyah sriyam anisam asaanusadhrusim
Amandham saundharya-prakara-makarandham vikirathi;
Tav'asmin mandhara-sthabhaka-subhage yatu charane
Nimajjan majjivah karana-charanah sat-charanathaam.

  தேவீ ! உன் பாதங்கள் ஏழைகளுக்கு அவர்கள் விரும்பும் அளவிற்கு செல்வத்தைக் கொடுக்கிறது .வெள்ளம் போன்று தேனைப் பெருகச் செய்கின்றது . கற்பகமரப்  பூங்கொத்து போல் அழகானவை . இந்த அழகிய உன் பாத கமலத்தில் ஆறு கால்களைக் கொண்ட , தேனைப் பருகும் வண்டாக இருக்கும் பாக்யத்தை என் ஆன்மாவானது அடையட்டும் .  

  (91)
पदन्यासक्रीडा परिचयमिवारब्धु मनसः
स्खलन्तस्ते खेलं भवनकलहंसा न जहति ।
अतस्तेषां शिक्षां सुभगमणिमन्ञ्जीररणित-
च्छलादाचक्षाणं चरणकमलं चारुचरिते ॥९१॥

Pada-nyasa-kreeda-parichayam iv'arabdhu-manasah
Skhalanthas the khelam bhavana-kala-hamsa na jahati;
Atas tesham siksham subhaga-mani-manjira-ranitha-
Chchalad achakshanam charana-kamalam charu-charite.

  தாயே ! உன்னுடைய அழகான நடையினைப் பார்த்து , தானும் அதைக்  கற்றுக்கொள்ள நினைத்து , உன்  வீட்டிலுள்ள அன்னப்பட்சிகள்  , துள்ளித் துள்ளி நடந்து , உன் அழகு நடையைப் பின்பற்றி , உன்னைப்போல் தானும் நடக்க பழக்கப்படுத்திக்  கொள்கின்றன . நீ நடக்கும்பொழுது உன் தண்டையிலுள்ள பத்மராகக் கற்கள் எழுப்பும்  ஓசையானது , அந்த  அன்னப்பட்சிகளுக்கு  மறைமுகமாக  நடப்பதற்குப் பாடம் சொல்லித்தருவது போல் உள்ளது .  
 (92)
गतास्ते मञ्चत्वं द्रुहिणहरिरुद्रेश्वरभृतः
शिवः स्वच्छच्छायाघटितकपटप्रच्छदपटः
त्वदीयानां भासां प्रतिफलन रागारुणतया
शरीरी शृंगारो रस इव दृशां दोग्द्धि कुतुकम् ॥९२॥

Gataas the mancathvam Druhina-Hari-Rudr'eshavara-bhrutah
Sivah svacchac-chaya-ghatita-kapata-pracchada-pata;
Tvadhiyanam bhasaam prati-phalana-rag'arunathaya
Sariri srungaro rasa iva dhrisam dhogdhi kuthukam.

 அம்மா ! உலகாளும்  பிரம்மா ,விஷ்ணு , ருத்ரன் , ஈசன் இந்நால்வரும் உனக்கு எப்போதும் பணிபுரிவதற்காக , உன் கட்டிலின் நான்கு கால்களாக ஆகி , உன்னை எப்போதும் வணங்குகின்றனர் . உன் கட்டிலின் மேல் விரிப்பாக இருக்கும் சதாசிவன்  வெண்மையான ஆடைதனைக் கூடியவராக இருந்தாலும் , உன்னுடைய சிவந்த ஒளியின்  பிரதிபலிப்பால்  அவரும் சிவப்பாகமாரி ஸ்ருங்காரரசம்  உருவெடுத்தாற்போல்  ஆகி , உன் கண்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றார்.  
  
(93)
अराला केशेषु प्रकृतिसरला मन्दहसिते
शिरीषाभा चित्ते दृषदुपलशोभा कुचतटे ।
भृशं तन्वी मध्ये पृथुरुरसिजारोहविषये
जगत्त्रातुं शंभोर्जयति करुणा काचिदरुणा ॥९३॥

Araala kesheshu prakruthi-saralaa manda-hasithe
Sireeshabha chite drushad upala-sobha kucha-thate;
Bhrusam thanvi madhye pruthur urasijh'aroha-vishaye
Jagat trathum sambhor jayahti karuna kaachid aruna.

  தாயே ! மனம் , வாக்குக்கு  எட்டாதவளே  ! இயற்கையில் சுருண்டமுடியும் , இனிமையான புன்னகையும் ,  வாகைமலரைப் போல்  மிருதுவான மனமும் , ரத்தினக்கற்கள் போல் கடினமான  ஸ்தனமும் ,  மெலிந்த இடையும் ,  பருத்த பின்பாகமும் ,  மயக்கம்  தரும் அழகிய  உதடும் , உடல் முழுவதும் சிவந்த  அழகுடனும் கூடிய நீயே , சிவனின் கனிவு சக்தியான  அருணாதேவியாக இந்த உலகம் முழுவதையும் காக்கின்றாய் . 
 (94)
कलङ्कः कस्तूरी रजनिकरबिंबं जलमयं
कलाभिः कर्पूरैः मरकतकरण्डं निबिडितं ।
अतस्तद्भोगेन प्रतिदिनमिदं रिक्तकुहरं
विधिर्भूयो भूयो निबिडयति नूनं तवकृते ॥९४॥

Kalankah kasthuri rajani-kara-bimbham jalamayam
Kalabhih karpurair marakatha-karandam nibiditam;
Athas thvad-bhogena prahti-dinam idam riktha-kuharam
Vidhir bhuyo bhuyo nibidayathi nunam thava krithe.

 அம்மா ! மரகதத்தினால் செய்யப்பட்ட பெரிய பாத்திரமான  சந்திரமண்டலத்தில் நீராடுபவளே ! சந்திரனின்  நடுவில் உள்ள களங்கமே கஸ்தூரி பொடியாகவும் , சந்திரனே   பன்னீராகவும்  ,  சந்திரகிரணங்களே பச்சைக்  கற்பூரப்பொடியாகவும் ,  உனக்கு நீராடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது . தினமும் நீ நீராடியபின் காலியான  இவைகளை , பிரம்மாவானவர் மீண்டும், மீண்டும் இவைகளை வாசனைப் பொருள்களால் நிரப்பி வைக்கிறார் .  

 (95)
पुरारातेरन्तःपुरमसि ततस्त्वच्चरणयोः
सपर्यामर्यादातरलकरलानामसुलभा ।
तथा ह्येते नीताः शतमखमुखाः सिद्धिमतुलां
तव द्वारोपान्तस्थितिभिरणिमाद्याभिरमराः ॥९५॥

Pur'arather antah-puram asi thathas thvach-charanayoh
Saparya-maryadha tharala-karananam asulabha;
Thatha hy'ethe neetah sathamukha-mukhah siddhim athulam
Thava dvar'opantha-sthithibhir anim'adyabhir amarah.

 அம்மா !  மூ உலகமும் எரித்த பரமசிவனின் 
பட்டத்துராணியே ! புலன்களை  அடக்கமுடியாத 
சபலபுத்தி  உடையவர்களுக்கு , உன் பாதம் அருகில்
 வரவோ , பூஜை செய்யவோ  தகுதி கிடையாது  . 
அதனால்தான் இந்திரன் போன்ற தேவர்களுக்கு , அந்த 
பாக்கியம் கிடைக்காமல் , உன் வாசலில் காவல் புரியும் 
அணிமாதி  சித்திகளுக்குச் சமமான நிலையை உடையவர்
களாய் உன் வாசலிலேயே இருக்கும்படி  நேரிடுகிறது . 

  (96)
कलत्रं वैधात्रं कति कति न भजन्ते कवयः
श्रियो देव्याः को वा भवति न पतिः कैरपिधनैः।
महादेवं हित्वा तव सति सतीनामचरमे
कुचाभ्यामासंगः कुरवकतरोरप्यसुलभः॥।१६॥

Kalathram vaidhathram kathi kathi bhajante na kavayah
Sriyo devyah ko va na bhavati pathih kairapi dhanaih;
Mahadevam hithva thava sathi sathinam acharame
Kuchabhyam aasangah kuravaka-tharor apyasulabhah.

 தாயே ! கற்புக்கரிசியே !  பிரும்மாவின் மனைவியான
 சரஸ்வதியை எத்தனை கவிகள்தான் அடையவில்லை ? 
அதுபோல் கொஞ்சம் செல்வம் பெற்றவன் கூட 
 லக்ஷ்மிபதியாக ஆகவில்லையோ ? ஆனால் உன்னை 
அப்படிச் சொல்லமுடியுமோ ? உன் ஆலிங்கனமானது , 
உன் கணவனான சிவனைத் தவிர குரவக  மரத்திற்கும் 
கிடையாதே ? அப்படியானால்   நீதானே பதிவ்ருதா
 மங்கையர் திலகம் ?  

 (97)
गिरामाहुर्द्देवीं द्रुहिणगृहिणीमागमविदो
हरेः पत्नीं पद्मां हरसहचरीमद्रितनयाम् ।
तुरीया कापि त्वं दुरधिगमनिस्सीममहिमा
महामाया विश्वं भ्रमयसि परब्रह्ममहिषी ॥९७॥

Giram aahur devim Druhina-gruhinim agaamavidho
Hareh pathnim padhmam Hara-sahacharim adhri-thanayam;
Thuriya kapi thvam dhuradhigama-niseema-mahima
Maha-maya visvam bhramayasi parabhrahma mahishi.

  தாயே !  வேத இரகசியங்கள் அறிந்தவர்கள் ,  
நீயே  பிரம்மாவின் மனைவி   சரஸ்வதி என்றும் ,  
 விஷ்ணுவின்    மனைவி லக்ஷ்மி என்றும் , சிவனின் 
துணைவி பார்வதி என்றும்   கூறுகின்றனர் . அனால்
 நீயோ இன்னதென்று வருணிக்க முடியாததும் ,  அடைய 
முடியாததும் , எல்லையற்ற மகிமையுடன் கூடிய 
மஹாமாயா உருவினளாகி இந்த உலகம்  முழுவதையும்  
திகைக்கவைக்கின்றாய்  !   

  (98 )
कदा काले मातः कथय कलितालक्तकरसं
पिबेयं विद्यार्थी तव चरणनिर्णेजनजलम् ।
प्रकृत्या मूकानामपि कविताकारणतया
कदा धत्ते वाणीमुखकमलतांबूलरसताम्  ॥९८॥

Kadha kaale mathah kathaya kalith'alakthaka-rasam
Pibheyam vidyarthi thava charana-nirnejana-jalam;
Prakrithya mukhanam api cha kavitha-karanathaya
Kadha dhathe vani-mukha-kamala-thambula-rasatham.

 அம்மா ! பிறவியிலேயே  ஊமையாய்   இருப்பவனுக்கும் 
கூட , கவிதைகள்  பாடும்  திறமையைக் கொடுக்கக்  
கூடிய சரஸ்வதியின் சக்தியுடைய தாம்பூலரசத்திற்குச் 
சமமானதான , மருதாணி பூசிய உன் பாதங்களை 
அலம்பிய ( தாம்பூலரசம் போல் சிவந்த ) நீரானது , 
ஞானத்தை அடைய விரும்பும் எனக்கு எப்போது  
கிடைக்குமோ ?

  (99)
सरस्वत्या लक्ष्म्या विधिहरिसपत्नो विहरते
रतेः पातिव्रत्यं शिथिलयति रम्येणवपुषा ।
चिरंजीवन्नेव क्षपितपशुपाशव्यतिकरः
परानन्दाभिख्यं रसयति रसं त्वद्भजनवान् ॥९९॥

Saraswathya lakshmya vidhi hari sapathno viharathe
Rathe pathivrithyam sidhilayathi ramyena vapusha
Chiram jivannehva kshapathi pasu pasa vyathikara
Paranandabhikhyam rasayathi rasam twadjanavaan.
 தாயே ! உன்னை வணங்கி துதிப்பவனிடத்தில் 
சரஸ்வதி இருப்பதால் அவன் பிரம்மாவிற்கு எதிரியாகவும்
 , லக்ஷ்மிகடாக்ஷம்  இருப்பதால் அவன்  விஷ்ணுவிற்கு 
எதிரியாகவும் , மன்மதனின்  மனைவி  ரதி தேவியின்  
கற்ப்பிற்கு தளர்ச்சி ஏற்ப்படுத்துவனாகவும் , அறிவு ,அழகு ,
 செல்வம் ஆகிய இவைகள் உடையவனாய்,உயிர் , உடல் , 
மாயை என்ற பந்தங்களிலிருந்து விடுபட்டு , என்றும் நிலையான
 பரமானந்த சுகத்தை அடைகிறான் .  

 (100)
प्रदीपज्वालाभिर्दिवसकरनीराजनविधिः
सुधासूतेश्चन्द्रोपलजललवैरर्घ्यरचना ।
स्वकीयैरंभोभिः सलिलनिधिसौहित्यकरणं
त्वदीयाभिर्वाग्भिस्तवजननि वाचां स्तुतिरियम् ॥१००॥

Pradhipa-jvalabhir dhivasa-kara-neerajana-vidhih
Sudha-suthes chandropala-jala-lavair arghya-rachana;
Svakiyair ambhobhih salila-nidhi-sauhitya karanam
Tvadiyabhir vagbhis thava janani vacham stutir iyam.

  தேவீ ! லோகநாயகி ! கைத்தீவட்டி ஒளியினால் 
கதிரவனுக்கு ஆரத்தி செய்வது போலவும் , 
சந்திரகாந்தக் கல்லிலிருந்து பெருகுகின்ற நீராலேயே , 
அமிர்தத்தை  வாரி  , வாரிப் பொழியும் சந்திரனுக்கு
 அர்க்கியம்  தருவது போலவும் , கடல் நீராலேயே கடல் 
அரசனுக்கு தர்ப்பணம் முதலியன செய்வது போலவும் ,
 உன்னுடைய வாய்மொழியால் இயற்றப்பட்ட 
 இந்த துதி மொழியினாலேயே உன்னை நான்  
 துதிக்கிறேன் . 

இந்த சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை முழு மனதுடன்  படிப்பவர்களுக்கும் , கேட்பவர்களுக்கும்  எல்லா வித நன்மைகளும் உண்டாக வேண்டும் என்று அன்னையை வேண்டுகிறேன் .

Rasamani Uses

எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு

கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு

வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்

வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...