Friday 1 October 2021

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால்
என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர்
போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும் நல்ல தொடர்பு உள்ளது. இது வேறொன்றுமில்லை. சிவபெருமானால் ஆசீர்வதிக்கப்பட்ட அரிய முத்தாகக்கருதப்படும் ருத்ராக்ஷத்தை விளைவிக்கும் மரவகைகள்தாம் அந்த இலியோ கார்பஸ் கானிடிராஸ்.
அற்புத சக்திகளைக் கொண்டுள்ள ருத்ராக்ஷத்தை தரும் ருத்ராக்ஷ மரங்கள் இமயமலைப் பகுதி, நேபாளம், இந்தோனேஷியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே உள்ளனவாம். அரிய வகைத் தாவரமான
இவற்றிலிருந்து ருத்ராக்ஷத்தைச் சேகரிப்பதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது. 45 ரூபாயிலிருந்து 90,000 ரூபாய் வரை மதிப்புள்ள விதவிதமான ருத்ராக்ஷ மாலைகள் விற்பனையில் இருக்
கின்றன. ருத்ராக்ஷ மாலைகளில் பல சிறப்புகள் உள்ளன. இந்த ருத்ராக்ஷ மாலைகள் ஆன்மிக பலத்தைத் தருவதோடு பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும்
சக்தியைப் பெற்றவை. பொதுவாக ஒவ்வொரு ருத்ராக்க்ஷக் கொட்டைக்கும்
ஒவ்வொரு வகை குணம் உண்டு. இதை வகை பிரிப்பது கொட்டைகளில் உள்ள கோடுகளின் எண்ணிக்கையை
அடிப்படையாகக் கொண்டு தான். ஒரு கோடு இருந்தால் அதை ஒரு முகம் என்பர். இப்படி முகங்கள் அதிகமாக
அதிகமாக அந்தக் கொட்டைகளும் கிடைப்பது அரிதாகின்றன. உலகிலேயே மிக அரிதான ருத்ராக்க்ஷ கொட்டை
தான் இருபத்தொரு முகம் கொண்டது. 45 ரூபாயில் ஆரம்பித்து இலட்சம் வரை ருத்ராக்க்ஷத்தின் விலை இருக்கிறது. அவற்றில் இருபத்தொரு முகம் கொண்டது
கிடைப்பதற்கரியதாகும். அதனால் அதன் விலைதான் அதிகம். அதாவது இரண்டரை இலட்ச ரூபாய் வரை போகிறது.
ருத்ராக்க்ஷப் பழங்களைப் பக்குவப்படுத்திக் கிடைக்கப் பெறும் ருத்ராக்க்ஷக் கொட்டைகள் 250 ஆண்டுவரை நிலைத்திருக்குமாம்.
இப்போது பலரும் ருத்ராக்ஷத்தின் மதிப்பு மற்றும் மகிமை தெரிந்து வாங்க முனைவதால் போலிகளும்
சந்தையில் குவிந்துவிட்டன என்பது மறுக்க முடியாத உண்மை. போலி ருத்ராக்க்ஷ கொட்டைகள் பாக்கு மற்றும் மரத்தக்கையால் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இந்தப் போலிகளால் நமக்கு நிஜ ருத்ராக்ஷத்தின் பலன் கிடைக்காது. அது சரி, போலிகளை எப்படிக் கண்டு பிடிப்பது?
போலிகளைக் கண்டுபிடிக்க
ருத்ராக்க்ஷ கொட்டைகளில் இப்போது ஏகப்பட்ட போலிகள் வர ஆரம்பித்து விட்டன. உண்மையா?

போலியா? என்பதைக் கண்டு பிடிக்க இதோ சில வழிகள் - நீங்கள் ருத்ராக்ஷ மாலையை வாங்குகிறீர்கள் ! அதில்
உள்ள கொட்டைகள் உண்மையானதா? போலியானதா? என்று தெரிய, அதைத் தண்ணீரில் போடுங்கள்.
கொட்டைகள் அவ்வளவும் தண்ணீரில் மூழ்க வேண்டும். மிதந்தால், அது வெறும் கட்டையால் செய்யப்பட்டது அல்லது பூச்சிகளால் அரிக்கப்பட்டது என்பது அர்த்தம். ருத்ராக்க்ஷ கொட்டையில் உள்ள முகம் என்று அழைக்கப்படும் வரிகள் எல்லாம் ஒரே சீராக இருக்காது.
போலிகளில் எல்லா வரிகளும் சீராக இருக்கும். இரு தாமிர உலோகத்துக்கு இடையே வைத்தால், ருத்ராக்க்ஷ கொட்டை சட்டென திசை மாறும். தொட்டால்
நகரும். இது உண்மையான ருத்ராக்க்ஷ கொட்டை. தொடர்ந்து பயன்படுத்தினால் பளபளப்பாகும் ருத்ராக்க்ஷ கொட்டைகள் உண்மையான கொட்டைகள். போலியாக இருந்தால் காலப்போக்கில் சொரசொரப்பாகி விடும்.
கொட்டையின் மேற்பகுதி, வழுவழுப்பாக இருந்தால் போலி. ஆரம்பத்தில் சொரசொரப்பாகத்தான் இருக்க
வேண்டும். அதுதான் உண்மையானது.

ஸ்ரீ மஹா யோகினி பீடம், மன்னார்குடி.

#ஆன்மீகம் #பக்தி #ஆன்மீக_சிந்தனை

No comments:

Post a Comment

Rasamani Uses

எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு

கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு

வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்

வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...