Monday, 8 August 2016

ஐந்து கோலங்கள்..! ஐந்து பலன்கள்..!


 சிவபெருமான் கோயில்களில் சிவன் உருவம், அருவுருவம், அருவம் என்னும் மூவகைநிலைகளில் காட்சிதருகிறார் கருவறையில் பெரும்பாலும் அருவுருவத்திருமேனியான சிவலிங்கமாகவே வீற்றிருப்பார். அருவத்திருமேனியாக (உருவமே இல்லாத நிலை) சிதம்பரம், திருப்பெருந்துறை போன்ற கோயில்களில் அருள்புரிகிறார்

🌟 உருவத்திருமேனியை சிவமூர்த்தங்கள் என்று குறிப்பிடுவர் இம்மூர்த்தங்களில் ஐந்து மூர்த்தங்கள் மிகவும் சிறப்புடையவை. இவர் கொண்ட கோலங்களில் ஐந்து திருக்கோலங்கள் சிறப்பு பலனை தரக்கூடியது. காண கண் கோடி வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு சிவனின் உருவ கோலங்கள் அமைகின்றது. அதில் முக்கியமான ஐந்து திருக்கோலத்தை இங்கு பார்ப்போம்.

🌺 நமக்கு என்ன பலன் தேவையோ அதற்கேற்ற வடிவத்தில் சிவபெருமானை வழிபட்டு பலன் பெறலாம். சாந்தமே உருவான தட்சிணாமூர்த்தியாக வழிபடுபவர்கள் மனஅமைதியும் ஞானமும் பெறுவர்

🌺 வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால் முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும்.

🌺 வக்ரமூர்த்தியாக விளங்கும் பைரவராக சிவனை வழிபட்டால் எதிரித்தொல்லை நீங்கி தைரியம் உண்டாகும்.

🌺 ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜராகத் துதித்தால் மனமகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும்.

🌺 அம்மையப்பராக சிவபார்வதி வீற்றிருக்க முருகன் நடுவில் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தமூர்த்தியை தரிசித்தால் வாழ்வில் நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும்.


No comments:

Post a Comment

Rasamani Uses

எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு

கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு

வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்

வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...