Monday, 8 August 2016

ஆன்மா:கண்ணுக்கு தெரியாத ஒரு உன்மை...

நம்மில் பலருக்கு இந்த சந்தேகங்கள் மனதில் தோன்றும்.....
பேய்,ஆத்மா இதெல்லாம் உண்மையா..?????-என்னிடமும் பலர் கேட்ட கேள்வி.
இவைகள் நம் கண்களுக்கு தெரியுமா..?????
அவைகள் நம்மிடம் பேசுமா...???
எதற்காக அவைகள் நம்மை சுற்றி திரிய வேண்டும்...???
இறுதியாக அவைகள் எங்கு செல்லும்...?????
இவை அனைத்தும் நமது கேள்விகள்...............
சரி.... இதை சற்று விரிவாக பார்க்கலாம்..
பிரபஞ்சம் என்பது சக்தியால் கட்டப்பட்ட ஒரு அற்புதமான அமைப்பு. இப்பிரபஞ்சத்தின் சக்திகளை உருவாக்கவும் இயலாது அழிக்கவும் இயலாது.மாறாக சக்தியை ஒரு தன்மையிலிருந்து வேறு தன்மைக்கு மாற்றலாம்.இதையே விஞ்ஞானிகள் "Energy neither be created nor be destroyed,it can be converted from one form to another" என்று விளக்கி உள்ளார்கள்.இதையே நம் முன்னோர்கள் "உடலுக்கு மட்டுமே அழிவு,ஆன்மாக்கு(soul) அல்ல" என்று கூறி உள்ளனர்.
°சரி இதற்கும் ஆவி பேய்க்கும் என்ன சம்மந்தம்?   பிரபஞ்சம் தன் சக்திகளை உயிர் சக்தியாகவும், ஒளி ஒலி சக்திகளாகவும்,இருள் சக்தியாகவும்,பஞ்ச பூத சக்தியாகவும் மாற்றி இயக்கி வருகிறது.
  இதில் உயிர் சக்தி என்பதே மனிதனை இயக்கும் உயிர் ஆகும்.நாம் அனைவரும் பிரபஞ்சத்தின் துகள்கள். அப்போது நம் உடலை இயக்கும் சக்திக்கு அழிவில்லை என்பது தெரிகிறது. அதுவே ஆன்மா,பேய்,ஆவி என பல பெயரை கொண்டு அழைக்கப்படுகிறது.அதை அழிக்க முடியாது.
°இது இறுதியாக எங்கு செல்லும்.?
    இது மறுவாழ்வு பெறும். அதாவது ஆதிகாலத்தில் ஆசிய நாடுகளின் ஆன்மா மறுபிறவி எடுப்பதின் ரகசியமாக சில தொகுப்பு கூறுவன:
1. மனித உடலுடன் ஒரு ஆன்மா 7 முறை பிரபஞ்சத்தில் தோன்றும்.இந்த பிறவிகள் எடுக்கும் போதே தன் வினைகளை கழிக்கும்.
2. மிருகமாய் 4 முறை ஆன்மா பிரபஞ்சத்தில் தோன்றி மீதம் உள்ள வினையை கழிக்கும்.
3. மரமாய் பிறந்து பிராண சக்தியை வெளி விட்டு புண்ணியம் சேர்க்கும் பின் இருளுடன் கலக்கும்.
இதுவே ஆன்மாவின் கதி.
     எகிப்த் நாட்டு மாந்திரீக ஆசான்கள் ஆன்மாவின் பிறவி ரகசியத்தை தங்கள் ஓலைச்சுவடிகள் மூலமும் கல்வெட்டு மூலமும் பதிவு செய்து உள்ளனர்,அவற்றின் சிறு தொகுப்பு:
1. குழந்தை கருவில் தோன்றிய போதில் இருந்து தொப்புள் கொடி வெட்டப்படும் வரை அது ஒரே உயிர் தான்.அது உருவம் உருவாகும் செயல் மட்டுமே.
2.தொப்புள் கொடி வெட்டுபடும் அந்த நொடி தன் கர்மாவை கழிக்க அலைந்து கொண்டு இருக்கும் ஆத்மா இச்சிசுவின் முதல் சுவாசத்தின் மூலம் உள்ளே சென்று புது வாழ்க்கை பெறும்.
3.(7 பிறவியில்) -மொத்த ஆயுள் காலத்தில் ஒரு பங்கை விதியாய் பெற்று மனிதனாக வலம் வரும். பின் உடல் பழுதானதும் பிரிந்து வேறு பிறவிக்கு செல்லும்.
இவ்வாறு அலையும் ஆன்மாக்கள் வாழும் போது நமக்கு நடந்த கொடுமைகள் தீங்குகளை எண்ணி பலிவாங்க நினைப்பவை மறுபிறவி எடுப்பதில்லை. ஒருசில ஆன்மாக்கள் தங்களின் ஆயுட்காலம் முடியும் வரை(துர்மரணம் அடைந்தவை)மறுபிறவி எடுக்காது. 
   பொதுவாக இறந்து போனவர்களிடம் பேச முடியுமா என்றால் எல்லாரும் செய்துவிட முடியாது. 
உலகில் இரண்டு வகை மனிதர்கள் மட்டுமே இதை செய்ய முடியும்.அதுவும் ஆவியை தனக்குள் இறக்கி பேச வைப்பது,வெறும் இடத்தை பாத்து பேசுவது போல் செய்தல் எல்லாம் கட்டு கதை.ஆன்மாவின் தன்மை, அதன் கர்ம நிலை, பிறவி உண்டா என மட்டுமே கணிக்க முடியும்.
1. இராஜ வம்சத்தில் வந்த மாந்திரீகர்கள்.. இவர்கள் முறையாக மந்திர உச்சாடனம் செய்பவர்கள். 6 முதல் 7 தலை முறையாக செய்து வருபவர் என்றால் கண்டிப்பாக அவரால் ஆன்மாவின் நிலையை கணிக்க முடியும். 
2. ESP என்று சொல்ல கூடிய ஒரு அரிய வகை மூளை சக்தி (இவர்களின் மூளையில் சிறு ரசாயண வேறுபாட்டால் முக்காலத்தையும் அப்படியே சொல்வார்கள்) கொண்டவர்கள் ஆன்மாவின் தன்மையை உணர்வார்கள்.
இதன் பயன்தான் என்ன..? எதற்காக நாம் ஆவிகளுடன் பேச வேண்டும்.? 
அவர்கள் ஏதேனும் தவறுகள் செய்து அது பரம்பரை மேல் வந்து சாபமாய் விடிந்து இருக்கிறதா என்று அறியலாம்.பிறவி எடுக்காமல் ஏன் ஆவியாய் அழைகிறார்கள் என தெரிந்து கொள்ள உதவியாய் இருக்கும்.
(நம் முன்னோர்கள் மறுபிறவி எடுக்கவில்லை என்றால் அதும் நமக்கும் பாவமாய் சேரும்).
பரம்பரயாய் வந்த மாந்திரீகர்கள் மந்திரங்கள் சொல்லி சொல்லி தங்களை சுற்றி ஒரு அதிர்வலைகள் ஏற்படுத்தி வைத்திருப்பார்கள். அவர்களால் துர்சக்திகள் ஆன்மாக்கள் என அனைத்தையும் உணர முடிகிறது. 
°பேய் பிடிப்பது உன்மையா? ஏன் பேய் பிடித்தவர்கள் ஆடுகின்றார்கள்?
மறுபிறவி எடுக்காமல் அலையும் ஆன்மா வேறு உயிர் சக்தி இருக்கும் உடலில் புகும் போது நம் உடலில் உள்ள ஆன்மா அதை ஏற்காது.அப்போது எதிற்கும் போது உடல் தாங்காமல் ஆடிபோகும்.அதுவே காரணம்.
அவ்வாறு இறங்கும் ஆன்மாக்கள் பேச நினைப்பதில்லை. மறுவாழ்க்கை பெறவும், விட்டுசென்ற சொந்தங்கள், தீராத ஆசைகள் ஆகியவற்றை அனுபவிக்கவே நினைக்கின்றன.ஆன்மா சக்தியிடம் அதன் நோக்கத்தை தெரிந்து கொள்ள மாந்திரீகரீதியான பூஜை முறைகள் உள்ளன. இதை சூரியன் அஸ்தமனம் ஆகும்போது அல்லது ஆகியபின் செய்ய வேண்டும். அப்போது நாம் இறந்தவர் யாரைபற்றி தெரிந்துகொள்ள நினைக்கிறோமோ அவர்கள் மறுபிறவி எடுத்து இருந்தால் தெரிந்துவிடும்.அல்லது நாம் தெரிந்துகொள்ள வேண்டியதை தெரிவிக்க முன்வரும்.

No comments:

Post a Comment

Rasamani Uses

எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு

கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு

வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்

வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...