Saturday 4 August 2018

சிவராத்திரி பற்றிய சிறப்பு தகவல்கள்!


சிவனுக்கு உகந்த இரவு என்று சொல்ல கூடிய சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன. சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.
❅ சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி. நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது.
❅ சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும். பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும். இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும்.
❅ சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும் தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.
❅ திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், ஆயுள் பலம் அதிகரிக்கும்.
❅ எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவ பூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.
❅ ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நு}று அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரக்கூடியது.
❅ சிவராத்திரி விரதம் இருந்தால் விஷ்ணு சக்ராதயுத்தத்துடன் லட்சுமியையும், பிரம்மா சரஸ்வதியையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
❅ சிவனின் மூன்று கண்களாக சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் உள்ளனர்.
❅ சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சுரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
❅ சிவராத்திரி விரதமானது வயது, இன, மதவேறுபாடுகளைக் கடந்த யாவரும் அனுஷ்டிக்க கூடியது.
❅ சிவராத்திரியில் விரதம் இருந்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், குழந்தை பாக்கியம், திருமண தடை என அனைத்து துன்பங்கள் நீங்கும். 

No comments:

Post a Comment

Rasamani Uses

எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு

கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு

வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்

வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...