Saturday 3 November 2018

பித்த வெடிப்புக்கு எளிமையான மருத்துவ குறிப்புகள்

பாத வெடிப்பு

பாத வெடிப்பு என்பது கால் பாதங்கள் உலர்ந்து போய் பாதத்தில் பல பிளவுகள் ஏற்படுவதாகவும். இது ஏற்பட்டால் பெண்கள் நடப்பதற்கே மிகவும் கஷ்டப்படுவார்கள். மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும். பாத வெடிப்பு ஏற்பட்டால் மிகவும் கவனமுடன் கால்களை பராமரிக்க வேண்டும். பாத வெடிப்புகளில் தூசிகள் மண் சேர்ந்து அவை புத்தாக மாறக்கூடிய அபாயம் உண்டு. எனவே பாத வெடிப்புகளை ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறிந்து பாதங்கள் மேலும் பாதிப்படையாமல் பாதுகாக்க வேண்டும். இளம் வயதினருக்கு வரும் பாத வெடிப்புகளை வேறு மருத்துவ முறைகளில் கூட விரைவில் குணபடுத்தி விடலாம்.  ஆனால் வயதானவர்களுக்கு காலம் காலமாக இருக்கும் பாத வெடிப்புகளை தமிழ் மருத்துவ முறையின்  மூலமே முழுவதுமாக குணபடுத்த முடியும்.
பாத வெடிப்பு ஏற்படக் காரணங்கள்
வைட்டமின் குறைபாடு
சிலருக்கு உடலில் உள்ள வைட்டமின் குறைபாடால் பாத வெடிப்புகள் ஏற்படும்.
பூஞ்சை தொற்று
இது பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. ஏனென்றால் பெண்கள் அதிகம் தண்ணீரில் வேலை பார்ப்பார்கள். பூஞ்சை வளர ஏற்ற இடம் ஈரமான இடம் ஆகும். பூஞ்சை தொற்று ஏற்பட்டால் கூட கால்களில் வெடிப்பு ஏற்படும்.
தைராய்டு
தைராய்டு உள்ளவர்களுக்கு கால்களில் அதிகம் வெடிப்புகள் ஏற்படும். இது தைராக்சின் குறைபாடால் ஏற்படுவதாகும்.

சொரியாசிஸ்
சொரியாசிஸ் தோல் நோய் உள்ளவர்களுக்கு கால்களில் பாத வெடிப்பு ஏற்படும்.
உடல் பருமன்
உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு பாத வெடிப்புகள் கண்டிப்பாக ஏற்படும். காரணம் உடலின் மொத்த எடையையும் கால்களே தாங்குகிறது. இதனால் பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுகிறது.
உடலில் நீரிழப்பு
உடலில் வறட்சி ஏற்பட்டால் கால்களில் வெடிப்புகள் ஏற்படும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காததே இதற்கு காரணம். உடலுக்கு தேவையான நீர் கிடைக்காவிட்டால் பாதங்களில் வெடிப்புகள் தோன்றும்.
குளிர் காலம்
சிலருக்கு குளிர் காலங்களில் பாத வெடிப்பு ஏற்படும். பருவ நிலை மாற்றமே இதற்கு காரணம்.
சுடு தண்ணீர்
சிலர் சுடு நீரில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சுடு நீரில் குளிப்பதால் கூட சிலருக்கு பாத வெடிப்புகள் ஏற்படும்.
நீரிழிவு நோய்:
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பாத வெடிப்புகள் ஏற்படும்.
இரசாயன சோப்பு
அதிக இரசாயனம் கலந்த சோப்பை பயன்படுத்துபவர்களுக்கு இரசாயனம் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.
பாத வெடிப்பு நீங்க எளிய தமிழ் மருத்துவ முறைகள்
பாத வெடிப்பு நீங்க ஒலிவ்(ஆலிவ்) எண்ணெய் மருந்து
இரவு தூங்கும் முன்பு கால்பாதங்களில் ஒலிவ் எண்ணையை தடவி விட்டு காலை எழுந்ததும் கால்களை நன்கு கழுவ வேண்டும். பாத வெடிப்பில் இருந்து விடுபடலாம்.
பாத வெடிப்பு நீங்க தேங்காய் எண்ணெய் மருந்து
இரவு தூங்கும் முன்பு கால்பாதங்களில் தேங்காய் எண்ணையை தடவி விட்டு காலை எழுந்ததும் கால்களை நன்கு கழுவ வேண்டும். பாத வெடிப்பில் இருந்து விடுபடலாம்.
பாத வெடிப்பு நீங்க அரிசி மாவு ஒரு அருமையான மருந்து
அரிசி மாவிற்கு பழைய செல்களைப் புதுப்பிக்கும் தன்மை உண்டு. அரிசி மாவுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். கால்களை பத்து நிமிடங்கள் வெது வெதுப்பான நீரில் வைத்து எடுத்த பின் அரிசி மாவு விழுதை பாதங்களில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பாத வெடிப்புகள் மறையும் வரை இதனை தொடர்ந்து தினமும் செய்ய வேண்டும்.
பாத வெடிப்பு நீங்க பால் மற்றும் தேன் கலந்து மருந்து
தேனையும் பாலையும் 1 : 2 என்ற விகிதத்தில் எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பால் சிறிது வெது வெதுப்பாக இருந்தாலே போதுமானது. அதிகமாக சுடக் கூடாது. அது பாத வெடிப்பை இன்னும் அதிகப்படுத்தும். முதலில் கால்களை வெது வெதுப்பான நீரில் ஊற வைத்து பின் தேன் மற்றும் பால் கலந்த கலவையில் கால்களை ஊற வைக்க வேண்டும். பின்பு கால்களை நன்கு மசாஜ் செய்து நன்கு நீரினால் கழுவ வேண்டும்.
பாத வெடிப்பு நீங்க வாழைப்பழம் ஓர் மருந்து
வாழைப்பழத்தை நன்கு குழைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த விழுதை கால் பாதங்களில் நன்கு தேய்த்து ஒரு பற்று போட வேண்டும். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து கால்களை நன்கு கழுவி வெது வெதுப்பான நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின் கால்களை ஒரு சுத்தமான துணியைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். தினந்தோறும் இந்த முறையை பின்பற்றினால் பாத வெடிப்பில் இருந்து விடுபடலாம்.
பாத வெடிப்பு நீங்க தேன் மருந்து
ஒரு கப் தேனை நீரில் கலந்து அந்த கலவையில் கால்களை பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு கால்களை நன்கு கழுவ வேண்டும். தினமும் இந்த முறையை பின்பற்றினால் கால் பாத வெடிப்பு நீங்கி விடும்.
பாத வெடிப்பு நீங்க எலுமிச்சைபழம் மற்றும் வெள்ளை சர்க்கரை மருந்து
எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். அந்த பாதி பழத்தை வெள்ளை சர்க்கரையில் தொட்டு கால் பாத வெடிப்பு உள்ள இடத்தில தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். தினமும் பத்து நிமிடங்கள் இதைச் செய்தால் பாத வெடிப்பு பறந்து விடும்.
பாத வெடிப்பு நீங்க கற்றாளை மருந்து
கால்களை வெது வெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு கற்றாளை ஜெல்லை கால்களில் தடவி பின் கால் உரையை மாட்டிக் கொண்டு இரவில் தூங்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து கால்களை நன்கு கழுவி சுத்தம் செய்து துடைத்து ஈரத்தை போக்க வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலனைக் காணலாம்.

Sri Maha Yohini Beedam
Herbal Research Centre


நன்றி

No comments:

Post a Comment

Rasamani Uses

எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு

கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு

வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்

வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...