மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…! நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும். ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே. அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.
இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை. வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள். ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.
மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது. இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர். ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர்.
செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர். ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு. பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான். சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை. தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன. அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார். அதன் பின்னரே சக்தி பண்டாசூரனை வதம் செய்தாள்.
இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட நமது பீடத்தில் பரிகார முறைகள் நடத்தப்படும். அம்மாவாசை பெளர்ணமி அன்று நடத்தப்படும் இந்த பரிகார பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்து கொண்டால் நிலை மாறி நல்வாழ்வு அமையும்.
பூஜையில் கலந்துகொள்ள முன் அனுமதி பெற்று வரவும்.
செல் +91 9688876966
Herabal Research Centre & Charitable Trust. Location:Mannargudi. Contact:+919688876966
Sunday, 31 July 2016
செய்வினை அகல.... தீய சக்திகள் தீண்டாமல் இருக்க....
Subscribe to:
Post Comments (Atom)
Rasamani Uses
எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு
கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு
வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்
வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்
ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை
இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...

-
வணக்கம், மலேசியா,சிங்கப்பூர், லண்டன் மற்றும் பல நாடுகளில் Lotto,Lottery, Casino,4 நம்பர், போன்ற பல விளையாட்டுகள் உள்ளன. இவை அனைத்தும் பணத்த...
-
(சௌந்தர்ய லகரி) என்னும் நூல் வீரை கவிராச பண்டிதர் இயற்றிய நூல்களில் ஒன்று. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் அம்பிகையைப் புகழ்ந...
No comments:
Post a Comment