Saturday, 13 August 2016

அரசாங்க வேலை மற்றும் செய்யும் தொழிலில் வெற்றி பெற....

✍ அரசு வேலை கிடைக்க...
  படித்து முடித்த அனைவருக்கும் அரசாங்கத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். அதற்காக கடுமையாக படிப்பர் இருப்பினும் அவர்களால் தேர்ச்சி பெற முடியாமல் போய்விடும். அரசாங்க வேலை கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?


✍ நல்ல முறையில் ஜாதகம் அமையப் பெற்ற குழந்தைகள் கல்வி பயில தொடங்கும் காலம் முதல் திங்கட்கிழமைதோறும் முருகனுக்கு விரதம் இருந்து வந்தால் கல்வியில் உயர்ந்து படித்து முடித்தவுடன் அரசுப் பணி கிடைக்கும்.

✍ நல்ல முறையில் ஜாதகம் அமையப் பெற்று, சனி பகவான் பதவியை கொடுப்பவராக இருந்தால் சிறைத் துறை, தண்டனை தருதல் போன்ற பதவிகளுக்கு உரியவர்கள் கல்வி பயிலும் காலம் தொட்டு சனிக்கிழமைதோறும் விரதமிருந்து வந்தால் கல்வியில் உயர்ந்து படித்து முடித்தவுடன் அரசுப் பணி கிடைக்கும்.

✍ நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது, ஓம் நமோ நாராயணாய நமக என்று 108 முறை சொல்லிக் கொண்டே போனால், நேர்முகத் தேர்வில் கேட்கும் கேள்விகளுக்கு கிருஷ்ணபகவான் துணைக்கு வந்து, அறிவுப்பூர்வமான பதில்களை சொல்ல வைப்பார். வெற்றி எளிதில் வரும்.

பரிகாரம்:

✍ அனுமன், பைரவரை வழிபடுங்கள். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம்.

✍ பைரவருக்கு 27 மிளகுகளை கருப்பு துணியில் கட்டி நல்லெண்ணை அல்லது இலுப்பெண்ணை விட்டு விளக்கேற்றலாம்.

✍ தினசரி காலை சு+ரியன் உதிக்கும் நேரம் பார்த்து வழிபட்டு வரவும்.

✍ 14 முக ருத்திராட்சம் அணியலாம்.

✍ சனிக்கிழமை அன்று ஊற வைத்த எள்ளை மதியம் 1-2 க்குள் எருமைக்கு வழங்கி வரவும்.

✍ அரச மரத்திற்கு தொடர்ந்து 43 நாட்கள் வேரில் நீர் விட்டு வரவும்.

பூஜை அல்லது பிரயோக முறை:

✍ உத்யோக குரு வசிய பூஜை செய்து கொண்டால் நிரந்தர உத்யோக பாக்கியம் கிடைக்கும்.

✍ மஹா லெக்‌ஷ்மி ஹோமத்துடன் உத்யோக குரு வசியம் செய்ய நமக்கு போதும் போதும் என்ற அளவிற்கு தன வரவு தரும் உத்யோகம் அமையும்.

✍ Building Construction,Government Contracts, போன்ற பெரிய தொழிலில் நிலையாக வெற்றிபெற்று வளர தொழில்ஷேம ஹோமம் செய்ய தடைகள் அகன்று மேலும் மேலும் தனம் பெருகும்.


No comments:

Post a Comment

Rasamani Uses

எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு

கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு

வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்

வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...