Monday, 8 August 2016

கருட பஞ்சமி...

கருட பஞ்சமி


 உலகில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காக்கும் கடவுளாகிய மகாவிஷ்ணுவின் வாகனமாகவும், கொடியாகவும் இருக்கும் சிறப்பினை பெற்றவர் கருட பகவான். ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும்.

விரதம் இருக்கும் முறை :

🌟 கருட பஞ்சமியன்று வீட்டைத் தூய்மை செய்து, மாவிலைத் தோரணம் கட்டி, அன்னை கௌரியை பூஜிக்க வேண்டும். கௌரி அம்மன் நாகத்தின் உருக்கொண்டு வருவதாக ஐதீகம். நம்முடைய சக்திக்கு தகுந்தாற்போல வெண்கலம், செம்பு அல்லது வெள்ளி உலோகத்தில் சிறு நாக உருவத்தை வைத்து வணங்கலாம்.

🌟 முதலில் முழுமுதற் கடவுள் விநாயகருக்கு பூஜை செய்தபின் ஒரு சிறிய தட்டில் நாக உருவத்தை வைத்து, மஞ்சள், குங்குமம் தரித்து, பூக்களால் அஷ்டோத்திரங்களைக் கூறி பூஜிப்பர். பின்பு பசும் பால் ஊற்றி வணங்க வேண்டும். நைவேத்தியமாக பால் கொழுக்கட்டை, பாயசம் செய்து வைத்து, தூபம், தீபம், கற்பூர ஆரத்தி ஏற்றி வணங்குதல் நல்லது.

🌟 கூடுதலாக கருட பஞ்சமியன்று ‘பணிகௌரி பூஜையும் செய்யலாம். மாலையில் அம்மன் கோயிலில் உள்ள புற்றுகளுக்கு பசும்பாலும், நைவேத்தியமாக பால் கொழுக்கட்டையும், பாயசமும் படைத்து வணங்க வேண்டும்.

🌟 கருட பஞ்சமி பூஜை செய்த பின்பு, நாக உருவத்திற்கு நோன்பு கயிறு சாற்றிவிட்டு, வீட்டில் உள்ள பெண்கள் நோன்புக் கயிறு கட்டிக் கொள்ள வேண்டும்.

கிழமைகளில் தரும் பலன்கள் :

அதிகாலையில் அருணோதய நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனை தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம்.

🐦 ஞாயிறு - பிணி விலகும்.

🐦 திங்கள் - குடும்ப நலம் பெருகும்.

🐦 செவ்வாய் - துணிவு பிறக்கும்.

🐦 புதன் - பகைவர் தொல்லை நீங்கும்.

🐦 வியாழன் - நீண்ட ஆயுள் கிடைக்கும்.

🐦 வெள்ளி - திருமகள் திருவருள் கிட்டும்.

🐦 சனி - முக்தி அடையலாம்.

கருடன் அவதரித்த நாளான கருட பஞ்சமியன்று விரதமிருந்து அனைத்து நலன்களையும் பெறுவோமாக.

No comments:

Post a Comment

Rasamani Uses

எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு

கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு

வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்

வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...