நவகிரகங்களில் கேதுவை ஞானகாரகன் என்று அழைப்பர;. தௌpவற்ற, நிம்மதியற்ற, எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்பவர்கள், கேதுவின் அருளால் சட்டென்று ஞானப்பாதைக்குத் திரும்புவார்கள். கேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும். எந்த காரியமானாலும் அலைச்சலுடன்தான் முடிப்பார்;. இரு நாகங்கள் பின்னிப் பிணைந்த நிலையில், நடுவில் காளிங்கநர்த்தன கண்ணன் வடிவில் இவர் அருள்பாலிக்கிறார். எமகண்ட நேரம் கேதுவிற்கு உரியது என்பதால் இவர் சந்நிதியில் செய்யப்படும் எமகண்ட நேர பூஜைகள் விசேஷம். செம்மை, சிகி, கதிர்ப்பகை என்ற வேறு பெயர்களும் இவருக்கு உண்டு.
கேது தரும் யோகம் :
காலசர்ப யோகம் :
✡ ஜெனன ஜாதகத்தில் ராகு கேதுவுக்கு இடையில் எல்லா கிரகங்களும் அடைபட்டிருப்பது கால சர்ப யோகமாகும். இந்த யோகம் பெற்றவருக்கு வாழ்க்கையில் தாமதமாகத்தான் முன்னேற்றம் உண்டாகிறது.
கோடீஸ்வர யோகம் :
✡ கேதுவும் குருவும் சேர்க்கை பெற்றிருந்தாலும், கேதுவுக்கு குரு பார்வை இருந்தாலும் கோடீஸ்வர யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத அதிர்ஷ்டம், பெரிய மனிதர்களின் தொடர்பு, ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு போன்ற நற்பலன்கள் உண்டாகின்றன.
மந்திரம் :
பணியென உருவம் ஆகிப் பட்சமாய் அமுதம் உண்டு
தணியென உயிர்கட்கெல்லாம் தகும்படி யோக போகம்
துணிவுடன் அளித்து நாளும் துலங்கிட இன்பம் நல்கும்
மணமுறும் இராகு பொற்றாள் மலரடி சென்னி வைப்பாம்.
✡ ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் கேது பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
திருக்கோயில் :
✡ பஞ்ச லிங்கங்களில் வாயு லிங்கம் உள்ள இடம் திருக்காளத்தி. கண்ணப்பனுக்கு காட்சி தந்த ஸ்தலம். இங்குள்ள காளத்தீஸ்வரருக்கு ருத்ரா பிஷேகம் செய்து அர்ச்சனை செய்ய கேதுவினால் ஏற்படும் தோசம் நீங்கும். கால சர்ப்ப தோச பரிகார ஸ்தலம். கேதுவுக்குரிய ஸ்தலம் ஆகும்.
உத்திராடம் நட்சத்திர தோஷம் நீங்க..!
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விஸ்வதேவதைகளையும், விநாயகரையும் உள்ளன்புடன் வழிபட்டால் வாழ்க்கையில் வளம் பெறலாம். பாண்டிச்சேரி மணக்குள விநாயகர், திருப்பாதிரிப்புலியூர் பாதிரி விநாயகர், திருவண்ணாமலை ஆநிறை கணபதி ஆகியோரின் வழிபாடு மிக உயர்ந்தது.
No comments:
Post a Comment