Monday, 8 August 2016

திருஷ்டி கழிக்கும் முறைகள்


 கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். பார்க்கும் பார்வை இயல்பாக இருந்து விட்டால் பாதிப்பு ஏதும் கிடையாது. அதே சமயம் பார்வையில் பொறாமை கலந்திருந்தால், அது ஒரு குடும்பத்தைப் பாதிக்கும் என்பது காலம் காலமான நம்பிக்கை. இதைத்தான் திருஷ்டி என்கிறார்கள். திருஷ்டியினை கழிக்கும் வழிகளை பற்றி இங்கு பார்ப்போம்.

கற்பூரம் ஏற்றுதல்:

❉ தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடவும். கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும்.

மிளகாய் சுற்றி போடுதல் :

❉ சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும்.

உப்பு சுற்றி போடுதல் :

❉ கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க அந்த உப்பு கரையும்பொழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும்.

கருப்பு வளையல் :

❉ பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோடுவதால் குழந்தைகளின் மேல் விழும் திருஷ்டி காணாமல் போகும்.

மண் :

❉ சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும்.

எலுமிச்சை குங்குமம் :

❉ சில வியாபார ஸ்தலங்களுக்கும், வண்டி வாகனம், வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை தடவி திருஷ்டி சுற்றி விட்டு வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிந்தால் திருஷ்டி கழிந்து விடும்.

பூசணிக்காய் உடைத்தல் :

❉ பூசணிக்காயில் குங்குமத்தையும் சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.

தேங்காய் உடைத்தல் :

❉ ஒரு தேங்காயின்மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.


ரமலான் சிந்தனை

மனிதன் புனிதம் தேடி அலைகின்ற நேரத்தில், புனிதம் மனிதனை தேடி வந்தது. ரமலான் மாத வருகைதான் இப்படிக் கூறப்படுகிறது. மனம், மொழி மெய்யடக்கித் தன்னை அறிவதன் மூலம் படைத்தவனை அறிந்து வணங்கி வழிபட்டு இம்மை, மறுமைகளில் சுகத்தினை சொத்தாக்கி கொள்ளும் வகையில் நற்காரியங்கள் செய்யும் மாதமே ரமலான் ஆகும்.

அனைவரும் வாரம் இரு முறை திருஷ்டியை கழிக்க வேண்டும். 
இதுவும் பிரபஞ்ச சக்தியை நம்முல் அதிக படுத்தும் ஒரு முறையே.

No comments:

Post a Comment

Rasamani Uses

எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு

கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு

வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்

வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...