Friday, 26 January 2018

தான்றிக்காய்-மருத்துவ​ குறிப்புகள்

தாவர இயல் பெயர்: Terminalia bellerica
இதன் மறு பெயர்கள்: அமுதம், அக்காத்தான், அம்பலத்தி, ஆராமம்,எரிகட்பலம், கந்துகன், அக்ஷம், அக்கந்தம்,கலித்துருமம், சதகம், தாபமாரி, வாந்தியம், வித்தியம், விபீதகம், கந்தகட்பலம், தானிக்காய்
வளரும் இடங்கள்: இவ்வகை தாவரம் இந்தியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சார்ந்தது. பொதுவாக காடுகளில் இயல்பாக வளரும் இந்த மரம் இதனுடைய கனிகளுக்காகவும் பயிரிடப்படுகிறது.
பயன் தரும் பகுதிகள்: காய், கனி, இலை, விதை என இதன் அனைத்துப் பாகங்களும் பயன் தரும்.
பொதுவான தகவல்கள் : தான்றி (Terminalia bellerica) ஓர் இன மரமாகும். இது தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இதன் பட்டையும் பழமும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன. மார்ச் முதல் மே வரையான காலத்தில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் மலரும். பின்னர் உருண்டை வடிவிலான ஐந்து பள்ளங்களைக் கொண்ட காய்கள் தோன்றிப் பின் சாம்பல் நிறப் பழங்களாகும். இப்பழங்கள் கசப்பும் துவர்ப்புமான சுவையுடையன. இப்பழம் மூலத்தைக் குணமாக்கும். சளி, வயிற்றுப்போக்கு என்பவற்றைக் கட்டுப்படுத்தும்.
பொதுவாக தான்றிக்காய் துவர்ப்பும், இனிப்புமான சுவைகளைக் கொண்டது. செரிமானமாகும் போது இனிப்பாக மாறும். உஷ்ண வீர்யம் உள்ளது. குளிர்ச்சியான தொடு உணர்ச்சி கொண்டது. கப பித்தங்களை தணிக்கும் வல்லமை கொண்டது. மலத்தை வெளியேற்றும் திறனைக் கொண்டது. கண்களுக்கு இதம் தரும். தலை முடியை வளர்க்கும். இதன் விதைகளில் உள்ள பருப்பு மயக்கத்தை தோற்றுவிக்கும். இதன் காயில் 17% டேனின் உள்ளது. இதில் 25 % இலேசான மஞ்சள் நிறமுள்ள எண்ணெய், மேலும் மாவுப் பண்டம், சைபோனின் முதலியவை உள்ளன.
தான்றிக்காயின் இதர மருத்துவப் பயன்கள்:
* தொண்டை கரகரப்பு, தொண்டைப் புண் மற்றும் இருமலுக்கு தான்றிக்காய் சிறந்த மருந்தாக அமைகிறது.
* வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணம் ஆகியவற்றை போக்க தான்றிக்காயின் கனிந்த கனிகள் உதவுகிறது.
* பல்வலி, சிலந்தி நஞ்சு, இரைப்பு நீங்கி உடல் வன்மை பெற உதவுகிறது தான்றிக்காய் பொடி.
* தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட மாரடைப்பு நோய் விரைவில் குணமாகும்.
* தான்றிக்காய், நிலப்பனை, பூனைக்காலி – மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, ஐந்து கிராம் அளவு எடுத்து காலை மாலை இருவேளையும் பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரும்பைப் போல் உடல் உறுதியாகும்.
* தான்றிக் காயை தினம் உணவில் சேர்த்து வர கண் பார்வை தெளிவடையும், தோளுக்குப் பளபளப்பை ஊட்டும்.
* தான்றிக் காயில் இருந்து பிரித்தெடுக்கப் படும் எண்ணெய் கூந்தல் தைலமாகவும், மூட்டு வலித் தைலமாகவும் பயன்படுகிறது.
* தான்றிக் காயின் சதைப் பகுதி மூல நோய், கை கால் வீக்கம், கண் நோய்கள் மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு கண்கண்ட மருந்தாகும். தான்றித் தூளைத் தேனுடன் கலந்து உட்கொள்ளச் செய்தால் இருமல் தணியும்.
* தான்றிப் பொடியைத் தேனில் கலந்து சாப்பிட அம்மை நோய் குணமாகும்.
* தான்றிக்காயின் பருப்பைத் தூள் செய்து தண்ணீரில் அதனை குழப்பிப் பூச புண், ரணங்கள் ஆறும்.
* தான்றிக்காயை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இரைப்பைக்கு அது பலத்தைக் கொடுக்கும்.

ஸ்ரீ மஹா யோகினி பீடம்

No comments:

Post a Comment

Rasamani Uses

எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு

கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு

வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்

வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...