Saturday, 3 November 2018

நீர்கட்டி பிரச்சனை குணமாக

நீர்க்கட்டி பிரச்சனை குணமாக மருத்துவம்


பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங்கிலத்தில் பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome) என இந்த குறைபாடு அழைக்கப்படுகிறது. பல சிறிய நீர் நிரம்பிய கட்டிகள்(Cysts) கர்ப்பப்பையில் உருவாகுவதே பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்ரோம் ஆகும். தற்போது குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த நீர்க்கட்டிகள் உள்ளன. பெண்களின் மாதவிடாயும் நீர்க்கட்டி பிரச்சினைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. நீர்க்கட்டிக்கு தீர்வு காண்பதற்கு முன்பு மாதவிடாய் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

மாதவிடாய்
பெண்களுக்கு கர்ப்பப்பையில் சினை முட்டைகள் உருவாகி அவை ஹார்மொன்களினால் (Harmon) சுழற்சிக்கு(cycle) உட்பட்டு உடைவதே மாதவிடாய் ஆகும்.முதல் மாதவிடாய் பதிமூன்று முதல் பதினெட்டு வயதுள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது. ஹார்மோன்களின் வேறுபாடால் மாதவிடாய் சுழற்சி(Menstrual Cycle) ஏற்படுகிறது. இந்த சுழற்சியினால் கருப்பை புறணி திடமாக தொடங்குகிறது. கருப்பை புறணி திடத்தன்மை வயதிற்கேற்பவும் மாதவிடாய் சுழற்சியின் எந்த நிலையில் இருகிறார் என்பதை பொருத்தும் வேறுபடும். மாதவிடாய் சுழற்சியின் ஆரம்பகட்டத்தில் கருப்பை புறணி திடமடைய தொடங்கும் அதே நேரத்தில் கரு முட்டையும் வளர தொடங்கும். மாதவிடாய் சுழற்சியின் பதினான்காம் நாள் முழு வளர்ச்சியடைந்த முட்டை விடுவிக்கப்படுகிறது. இது ஒவுலேஷன் (Ovulation) எனப்படும். அந்த முட்டை ஆணின் விந்தணுவிற்காக காத்திருக்கும். ஆணின் விந்தணு கருமுட்டையை அடைந்தால் கருவுறுதல் நடைபெறுகிறது. அப்போது கருவிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கருப்பை புறணி வழங்குகிறது. ஆணின் விந்தணு கருமுட்டையை அடையாத பட்சத்தில் கருப்பை புறணி இரத்தமாக வெளியேறுவதே மாதவிடாய் ஆகும்.
நீர்க்கட்டியினால் மாதவிடாய் பாதிப்பு
நீர்க்கட்டியினால் மாதவிடாய் சுழற்சியில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பாளி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் உள்ளவர்களுக்கு அன்றோஜென் (Androgen insensitivity syndrome) எனப்படும் ஆண் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. அதனால் அவர்களுக்கு ஒவுலேஷன் எனப்படும் கருமுட்டையை விடுவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில்லை. அதனால் ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை அடைய முடிவதில்லை. அதனால் கருவுறுதல் நடைபெறாது. இந்த காலத்தில் பெரும்பான்மையான குழந்தையின்மை பிரச்சினைக்கு நீர்க் கட்டியே காரணம் ஆகும்.
பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் காரணங்கள்:
பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோமின் முதன்மை காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அசாதாரணமான ஹார்மோன்களின் உற்பத்தியும் பரம்பரை காரணிகளும் முதன்மை காரணிகளாக நம்பப்படுகிறது. மற்றுமொரு காரணியாக ஆன்றோஜென் எனப்படும் ஆண் ஹார்மோன் உற்பத்தி கருதப்படுகிறது. ஆன்றோஜென் ஹார்மோன் பெண் உடலில் உற்பத்தி ஆவது இயல்பு என்றாலும் நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு இது அசாதாரணமாக அதிகமாக உற்பத்தி ஆகிறது. அதிகப்படியான இன்சுலின் ஹார்மோன் ஆன்றோஜென்னின் அளவை அதிகரிக்கிறது. அதனால் மருத்துவர்கள் மேட்போர்மின்(Metformin) எனப்படும் சுகர் மாத்திரைகளை நீர்க்கட்டிக்கு அறிவுறுத்துகிறார்கள்.
நீர்க்கட்டியின் அறிகுறிகள்:
இதன் அறிகுறிகள் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. பெரும்பாலானவர்கள் கூறும் ஒரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி(Irregular Periods). இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண் ஹார்மோனான ஆன்றோஜென் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், மார்பகத்தின் அளவு குறைதல், முடி கொட்டுதல், குரலில் வேறுபாடு, முகப்பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், மலட்டுத்தன்மை போன்றவை ஏற்படுகிறது.
இனி நீர்க்கட்டிக்கான இயற்கை மருத்துவத்தை பார்ப்போம்.
நீர்க்கட்டி பிரச்சனை குணமாக கழற்சிக்காய், மிளகு, மோர் மருந்துக்கள்
நீர்க்கட்டி பிரச்சனைக்கு கழற்சிக்காய் ஓர் அருமையான மருந்து ஆகும். வேறு எந்த மருத்துவத்தையும் எடுக்காமல் இந்த கழற்சிக்காய் மருத்துவத்தை மட்டும் ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் நீர்க்கட்டி பிரச்சனை கண்டிப்பாக குணமாகும். கழற்சிக்காய் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இந்த கழற்சிக்காய் காயாகவும் கிடைக்கும், சில கடைகளில் பொடியாகவும் கிடைக்கும். கழற்சிக்காய் சிறிய கோலிகுண்டு அளவில் பச்சையாகவும் அல்லது வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கழற்சிக்காயின் உள்ளே முந்திரிபருப்பு போன்று ஒரு பருப்பு இருக்கும். கழற்சிக்காயை உடைத்து இந்த பருப்பை எடுப்பது மிக மிக கடினம். கழற்சிக்காயின் வெளி ஓடு அவ்வளவு கடினத்தன்மை உடையதாகும். பெரிய சுத்தியல் வைத்து அடித்து உடைக்கலாம். கழற்சிக்காயை பக்கவாட்டில் அடித்து உடைத்தால் உள்ளிருக்கும் பருப்பு உடையாமல் எடுக்கலாம்.
காலையும் மாலையும் ஒரு கழற்சிக்காய் பருப்புடன், 3 அல்லது 4 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர வேண்டும். இது பச்சை பாகற்காயை மெல்வது போன்று அவ்வளவு கசப்பாக இருக்கும். மிகவும் கசப்பாக இருந்தால் நன்றாக மென்று முடித்ததும் மோர் குடிக்கலாம். முன்பே குறிப்பிட்டது போல் வேறு எந்த மருத்துவத்தையும் பார்க்காமல் ஒரு மாதம் ஒரு நாள் கூட கைவிடாமல் இந்த கழற்சிக்காய் மருந்தை உண்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனை முற்றிலும் குணமாகும்.
நீர்க்கட்டி பிரச்சனை குணமாக மோர், பச்சிலை மருந்துக்கள்
வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள் மோர். இதனுடன் பச்சிலை எனப்படும் மூலிகையை கலந்து குடித்து வர நீர்க்கட்டி குணமாகும். பச்சிலை என்பது வீட்டில் எளிதாக வளரக்கூடிய மூலிகை ஆகும். இது துளசியை ஒத்த மனமும் குணமும் கொண்டது. அன்றாடம் இந்த கலவையை அருந்தி வர நல்ல  வித்தியாசத்தை காணலாம்.
நீர்க்கட்டி பிரச்சனை குணமாக கச்சக்காய் மருந்து
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கச்சக்காயை உண்டு வர நீர்க்கட்டிகள் கரையும். இந்த காய்க்கு உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் குணம் உண்டு.
நீர்கட்டி பிரச்சனை சரியாக வெந்தயம் மருந்து
நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு கனையதால் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு உடல் பருமன் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. வெந்தயமும் வெந்தய கீரையும் இன்சுலின் அளவை அளவாக வைக்க உதவுகின்றன. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். பின்பு மதிய உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் இரவு உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தய கீரையை சமைத்தும் உண்ணலாம்.
நீர்க்கட்டி பிரச்சனை சரியாக இலவங்கப்பட்டை மருத்துவம்
இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதனால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இலவங்கப்பட்டையை பொடியாகி கொண்டு தேவையான போது பயன்படுத்தலாம். காலையில் தேனீர் அல்லது காபி குடிக்கும் பொழுது அதில் கொஞ்சம் இலவங்கப்பட்டையை தூவி கொள்ளலாம். இலவங்கப்பட்டை தூளை தயிர் அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம்.
நீர்க்கட்டி பிரச்சனை சரியாக ஆளி விதைகள் மருந்து
இந்த விதைகளில் ஒமேகா சத்து மற்றும் புரத சத்து நிரம்பி உள்ளது. உடலில் உள்ள குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. ஆளி விதிகளை பொடி செய்து கொண்டு நீரிலோ, பழச்சாறிலோ கலந்து குடிக்கலாம். உடல் பருமனுக்கும் இந்த ஆளிவிதைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
நீர்க்கட்டி பிரச்சனை குணமாக துளசி மருந்து
நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆன்றோஜென் எனப்படும் ஆண்களின் ஹார்மோன் அதிகம் சுரக்கும் என்பதை அறிவோம். துளசி ஆன்றோஜென்களின் அளவையும் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் எட்டு துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். அல்லது துளசியுடன் கொதிக்க வைத்த நீரையும் அருந்தலாம்.
நீர்க்கட்டிக்கு தேன் மருத்துவம்
உடற்பருமனும் பாலி சிஸ்டிக் ஓவரியன் ச்ய்ன்றோமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. உடல் எடையை குறைத்தால் நீர்க்கட்டி தானாக குறைந்து விடும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க ஒரு அருமையான மருந்து தேன். தேனை காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் சிறிது எலுமிச்சம்பழ சாறு கலந்து அருந்த உடல் எடை குறையும். உடல் எடை குறைந்தால் நீர்க்கட்டி தானாக மறைந்து விடும்.
நீர்க்கட்டிக்கு நெல்லிக்காய் மருந்து
நெல்லிக்காய் உடலின் இன்சுலின் அளவை கட்டுக்குலள் வைக்க உதவுவதோடு உடல் எடை குறையவும் பயன்படுகிறது. நெல்லிக்காய் சாறை இளஞ்சூடான நீரில் கலந்து அருந்த உடல் எடை குறையும். அதோடு இன்சுலின் அளவும் கட்டுக்குள் வரும்.
நீர்க்கட்டிக்கு பாகற்காய் மருந்து
பாகற்காய் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க பெரும்பங்கு வகிக்கிறது. இன்சுலின் அளவு கட்டுக்குள் இருந்தால் அன்றோஜென் அளவு கட்டுக்குள் கொண்டு வரப்படும். இதனால் நீர்க்கட்டி அறிகுறிகள் குறைய தொடங்கும். பாகற்காயை வாரத்தில் ஐந்து நாட்கள் சமைத்து உண்ண வேண்டும்.

Sri Maha Yohini Herbal Research Centre
Mannargudi

Youtube:

கண் கருவளையம் போக

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல பிரதிபலிக்கும். கண் கருவளையம் என்பது கண்களுக்கு கீழே உள்ள தோல் பகுதி மட்டும் கருத்து காணப்படுவதாகும். பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். சில ஆண்களும் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கருவளையம் வந்து விட்டால் ஏதோ துக்க வீட்டில் விசாரிப்பது போல் பார்ப்பவர்கள் எல்லாம் என்ன கருவளையம் என்ன கருவளையம் என்று கேட்டு கேட்டு அவர்களுக்கு தெரிந்த எல்லா மருத்துவத்தையும் சொல்லி மனதளவில் சோர்வடைய செய்து விடுவர். கண்களுக்குக் கீழ் உள்ள தோலானது 0.5 மி.மீ தடிமனும் மற்ற இடத்தில உள்ள தோல் 2மி. மீ தடிமனும் கொண்டது. அதனால் மற்ற தோலை விட கண்களுக்கு கீழ் உள்ள தோல் மிக விரைவில் பாதிப்படைகிறது. மிக விரைவில் கருவளையத்தை மறைய வைக்கலாம்.

கண் கருவளையம் ஏற்பட காரணங்கள்
அதிக வேலைப்பளு காரணமான உடல் சோர்வு
நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் நமக்கு உணர்த்துகிறது. வார விடுமுறையில் வீட்டில் உள்ள போது கீழே கொடுத்துள்ள இயற்கையான மருந்துகளை கண்ணின் கீழ் உள்ள கருவளையத்தின் மேல் போடலாம். ஆனால் வேலை பார்க்கும் இடத்தில் அவ்வாறு போட முடியாது. ஓய்வுக்காக தூங்கவும் முடியாது. அதற்கு என்ன தான் தீர்வு என்று மண்டையை போட்டு குழப்பிக் கொள்ள தேவையில்லை. வேலையின் நடுவே தூங்க முடியாது தான் ஆனால் ஒரு மணி நேரத்திற்க்கு ஒரு முறை ஒரே ஒரு நிமிடம் கண்களை மூடி கண் விழிகளை அசைக்காமல் கண்களுக்கு ஓய்வு கொடுக்கலாம். கைக்குட்டையில் தண்ணீரை லேசாக நனைத்து கண்களுக்கு வைத்துக் கொண்டு கண்களுக்கு குளிர்ச்சி கொடுத்ததால் இன்னும் வெகு சிறப்பு.
இரவு அதிக நேரம் விழித்திருத்தல்
தூக்கம் நமது உடலுக்கும் கண்களுக்கும் சிறந்த ஓய்வு ஆகும். சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நமது நேரத்தைக் கழித்தால் கண்ணுக்கு கீழ் கருவளையம் கண்டிப்பாக ஏற்படும். ஒரு நாளுக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதிகமாக கண்களை கசக்குதல்
கண்களில் ஏற்படும் தொற்றினால் கண்களில் சில நேரம் அரிப்பு ஏற்படும். இதனால் கண்களை கசக்க நேரிடும். அதிகமாக கண்களை கசக்குவதால் மிகவும் மெல்லிய தோலான கண்களுக்குக் கீழ் உள்ள தோல் கருமையடைகிறது. அதிகமாக கண்ணை கசக்கி அதனால் உண்டாகும் கருவளையம் அதுவாகவே மறைந்து விடும்.
மரபியல் காரணங்கள்
சிலருக்கு மரபியல் காரணங்களால் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு ஏற்படலாம். சத்துக்குறைவினால் சிலருக்கு கண் கருவளையம் தோன்றும். சத்தான உணவு பழக்கவழக்க முறைக்கு மாறுவதே இதற்க்கு தீர்வு.
முகத்தில் பூசப்படும் கிரீம்கள்
பெண்கள் அன்றாடம் முகத்தில் பல கிரீம்களை உபயோகிக்கின்றனர். இது சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. இதனால் மிகவும் மெல்லிய தோலான கண்களுக்கு அடியில் கருமையாக மாறுகிறது. அப்படிப்பட்ட க்ரீம்களை கண்டறிந்து எதிர்காலத்தில் அப்படிப்பட்ட க்ரீம்களை தவிர்த்து கண்ணின் கருவளையம் வருவதை தவிர்க்கலாம்.
இரத்த நரம்புகள்
கண்களுக்கு அடியில் உள்ள இரத்த நரம்புகள் கூட சில நேரம் கருமையாக தோற்றம் அளிக்கலாம். இதனால் எந்த பாதிப்பும் இல்லை.
அதிகம் வெயிலில் அலைவது
அதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலும் மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் உள்ள தோலும் பாதிப்படைகிறது. இதனால் கருவளையம் ஏற்படுகிறது. அதனால் வெயில் காலங்களில் கருவளையம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாரம் ஒருமுறையாவது கண்ணை குளிர்ச்சி படுத்தும் விதமாக கேரட் அல்லது வெள்ளரிபிஞ்சை மெல்லிதாய் நறுக்கி கண்ணின் மேல் வைத்தல் நலம் பயக்கும்.
வயது முதிர்வு
கண் கருவளையத்திற்கு வயது மிகவும் முக்கியமான காரணமாகும். வயது அதிகமானால் தோலில் தொய்வு ஏற்பட்டு கண் கருவளையம் ஏற்படும்.
புகை மற்றும் மதுப்பழக்கம்
புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள் மிக எளிதாக கண் கருவளையதிற்கு ஆளாகிறார்கள்.
ஹார்மோன்
ஹார்மோன் சுரப்பு சரியாக இல்லாத காரணத்தினால் கருவளையம் ஏற்படலாம்.
நீரிழப்பு
போதுமான அளவு நீர் அருந்தாமல் இருந்தாலும் கருவளையம் ஏற்படும். பெரும்பாலான ஆய்வு முடிவுகள் உடலில் சரியான அளவு நீர் இல்லாததினால் தான் கண் கருவளையம் உண்டாவதாக தெரிவிக்கின்றன. காலையில் எழுந்தவுடன் ஒரு முழு செம்பு நீர் அருந்துவது வாட்டர் தெரபி எனப்படும் நீர் சிகிச்சையின் முக்கியமான ஒரு பகுதி. ஆரம்பத்தில் முழு செம்பு நீர் அருந்த கஷ்டமாகத்தான் இருக்கும். சிறிது சிறிதாக ஒரு டம்ளர் என்று ஆரம்பிக்க வேண்டும். காலையில் கண் விழித்தவுடன் இந்த முறைப்படி குளிர்ந்த நீர் அருந்துவது பல்வேறு நோய்களை அண்ட விடாது.
கண் கருவளையதிற்கு தமிழ் மருத்துவம்
கருவளையம் மறைய பாதாம் எண்ணெய் மருத்துவம்
பாதாம் எண்ணையை கண்ணுக்கு அடியில் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கருவளையம் மறையும். இரவில் பாதாம் எண்ணெய் பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவ வேண்டும்.
கண் கருவளையம் மறைய  வெள்ளரிக்காய் மருத்துவம்
வெள்ளரிக்காயை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையம் மறையத் தொடங்கும்.
கண் கருவளையம் மறைய உருளைக்கிழங்கு மருத்துவம்
உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து பஞ்சில் தொட்டு கண்ணனுக்கு அடியில் தடவ வேண்டும்.15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவ வேண்டும். ஒரு சில வாரங்களில் கண் கீழ் கருவளையம் மறைந்து நல்ல பலனைப் பெறலாம்.
கண் கருவளையம் மறைய தக்காளி மருத்துவம்
ஒரு ஸ்பூன் தக்காளி சாருடன் ஒன்றரை ஸ்பூன் எலுமிச்சை சாறைக் கலந்து கருவளையத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். ஒரு சில வாரங்களில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
கருவளையம் மறைய கற்றாளை மருத்துவம்
சோற்றுகற்றாழையின் தோலையும் முள்ளையும் அகற்றிவிட்டு அதன் ஜெல்லை எடுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்து பிறகு சுத்தமான பஞ்சினால் துடைத்து எடுத்து வந்தால் கருவளையம் மறையும்.
கருவளையம் மறைய தேங்காய் எண்ணெய் மருத்துவம்
சுத்தமான தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும்.
கருவளையம் மறைய டீ பேக் மருத்துவம்
டீ பேக்கை ஒரு டப்பாவில் போட்டு ப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்த பின் அதை வைத்து கண்ணின் கருவளையத்திற்கு ஒத்தடம் கொடுத்து வந்தால் நாளடைவில் கருவளையம் மறைய தொடங்கும்.
கருவளையம் மறைய திராட்சை விதை எண்ணெய் மருத்துவம்
பொதுவாகவே முகத்திற்கு திராட்சை விதை எண்ணெய் மிகவும் நல்லது. கண்ணுக்கு அடியில் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் கருவளையம் மறையும்.
கருவளையம் மறைய ரோஸ் வாட்டர் ஒரு மருந்து
பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களில் 15  நிமிடங்கள் வைத்து எடுத்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.
கருவளையம் மறைய தேன் மருத்துவம்
தேனை கண்ணுக்கு கீழ் தடவி 15  நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால் கருவளையம் மறையும்.
கருவளையம் மறைய எலுமிச்சை சாறு மருத்துவம்
எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து கண்ணுக்கு அடியில் ஒத்தி எடுக்க வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும்.
கருவளையம் நீங்க புதினா சாறு மருத்துவம்
புதினாவை அரைத்து அந்த விழுதை கருவளையத்தில் தடவினால் கருவளையம் மறையும்.
கருவளையம் மறைய பால் ஒரு மருந்து
குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து கண்களில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் மறையும்.
கருவளையம் மறைய ஆலிவ் ஆயில் மருத்துவம்
ஆலிவ் ஆயில் கொண்டு கண்களில் மசாஜ் செய்தால் கண்கள் களைப்பு நீங்கி கருவளையம் மறையும்.
கருவளையம் மறைய குங்குமப்பூ மருத்துவம்
பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து அதில் பஞ்சை நனைத்து கண்களில் வைத்து சிறிது நேரம் கழித்து கண்களைக் கழுவினால் கண் கருவளையம் மறையும்.
கருவளையம் மறைய மஞ்சள் மருத்துவம்
மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.
கண் கருவளையம் மறைய  கேரட் மருத்துவம்
கேரட்டை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையம் மறையத் தொடங்கும்.

Sri Maha Yohini Beedam
Mannargudi
Herbal Research Centre
Youtube: Click Here...!!!

பித்த வெடிப்புக்கு எளிமையான மருத்துவ குறிப்புகள்

பாத வெடிப்பு

பாத வெடிப்பு என்பது கால் பாதங்கள் உலர்ந்து போய் பாதத்தில் பல பிளவுகள் ஏற்படுவதாகவும். இது ஏற்பட்டால் பெண்கள் நடப்பதற்கே மிகவும் கஷ்டப்படுவார்கள். மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும். பாத வெடிப்பு ஏற்பட்டால் மிகவும் கவனமுடன் கால்களை பராமரிக்க வேண்டும். பாத வெடிப்புகளில் தூசிகள் மண் சேர்ந்து அவை புத்தாக மாறக்கூடிய அபாயம் உண்டு. எனவே பாத வெடிப்புகளை ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறிந்து பாதங்கள் மேலும் பாதிப்படையாமல் பாதுகாக்க வேண்டும். இளம் வயதினருக்கு வரும் பாத வெடிப்புகளை வேறு மருத்துவ முறைகளில் கூட விரைவில் குணபடுத்தி விடலாம்.  ஆனால் வயதானவர்களுக்கு காலம் காலமாக இருக்கும் பாத வெடிப்புகளை தமிழ் மருத்துவ முறையின்  மூலமே முழுவதுமாக குணபடுத்த முடியும்.
பாத வெடிப்பு ஏற்படக் காரணங்கள்
வைட்டமின் குறைபாடு
சிலருக்கு உடலில் உள்ள வைட்டமின் குறைபாடால் பாத வெடிப்புகள் ஏற்படும்.
பூஞ்சை தொற்று
இது பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. ஏனென்றால் பெண்கள் அதிகம் தண்ணீரில் வேலை பார்ப்பார்கள். பூஞ்சை வளர ஏற்ற இடம் ஈரமான இடம் ஆகும். பூஞ்சை தொற்று ஏற்பட்டால் கூட கால்களில் வெடிப்பு ஏற்படும்.
தைராய்டு
தைராய்டு உள்ளவர்களுக்கு கால்களில் அதிகம் வெடிப்புகள் ஏற்படும். இது தைராக்சின் குறைபாடால் ஏற்படுவதாகும்.

சொரியாசிஸ்
சொரியாசிஸ் தோல் நோய் உள்ளவர்களுக்கு கால்களில் பாத வெடிப்பு ஏற்படும்.
உடல் பருமன்
உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு பாத வெடிப்புகள் கண்டிப்பாக ஏற்படும். காரணம் உடலின் மொத்த எடையையும் கால்களே தாங்குகிறது. இதனால் பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுகிறது.
உடலில் நீரிழப்பு
உடலில் வறட்சி ஏற்பட்டால் கால்களில் வெடிப்புகள் ஏற்படும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காததே இதற்கு காரணம். உடலுக்கு தேவையான நீர் கிடைக்காவிட்டால் பாதங்களில் வெடிப்புகள் தோன்றும்.
குளிர் காலம்
சிலருக்கு குளிர் காலங்களில் பாத வெடிப்பு ஏற்படும். பருவ நிலை மாற்றமே இதற்கு காரணம்.
சுடு தண்ணீர்
சிலர் சுடு நீரில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சுடு நீரில் குளிப்பதால் கூட சிலருக்கு பாத வெடிப்புகள் ஏற்படும்.
நீரிழிவு நோய்:
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பாத வெடிப்புகள் ஏற்படும்.
இரசாயன சோப்பு
அதிக இரசாயனம் கலந்த சோப்பை பயன்படுத்துபவர்களுக்கு இரசாயனம் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.
பாத வெடிப்பு நீங்க எளிய தமிழ் மருத்துவ முறைகள்
பாத வெடிப்பு நீங்க ஒலிவ்(ஆலிவ்) எண்ணெய் மருந்து
இரவு தூங்கும் முன்பு கால்பாதங்களில் ஒலிவ் எண்ணையை தடவி விட்டு காலை எழுந்ததும் கால்களை நன்கு கழுவ வேண்டும். பாத வெடிப்பில் இருந்து விடுபடலாம்.
பாத வெடிப்பு நீங்க தேங்காய் எண்ணெய் மருந்து
இரவு தூங்கும் முன்பு கால்பாதங்களில் தேங்காய் எண்ணையை தடவி விட்டு காலை எழுந்ததும் கால்களை நன்கு கழுவ வேண்டும். பாத வெடிப்பில் இருந்து விடுபடலாம்.
பாத வெடிப்பு நீங்க அரிசி மாவு ஒரு அருமையான மருந்து
அரிசி மாவிற்கு பழைய செல்களைப் புதுப்பிக்கும் தன்மை உண்டு. அரிசி மாவுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். கால்களை பத்து நிமிடங்கள் வெது வெதுப்பான நீரில் வைத்து எடுத்த பின் அரிசி மாவு விழுதை பாதங்களில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பாத வெடிப்புகள் மறையும் வரை இதனை தொடர்ந்து தினமும் செய்ய வேண்டும்.
பாத வெடிப்பு நீங்க பால் மற்றும் தேன் கலந்து மருந்து
தேனையும் பாலையும் 1 : 2 என்ற விகிதத்தில் எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பால் சிறிது வெது வெதுப்பாக இருந்தாலே போதுமானது. அதிகமாக சுடக் கூடாது. அது பாத வெடிப்பை இன்னும் அதிகப்படுத்தும். முதலில் கால்களை வெது வெதுப்பான நீரில் ஊற வைத்து பின் தேன் மற்றும் பால் கலந்த கலவையில் கால்களை ஊற வைக்க வேண்டும். பின்பு கால்களை நன்கு மசாஜ் செய்து நன்கு நீரினால் கழுவ வேண்டும்.
பாத வெடிப்பு நீங்க வாழைப்பழம் ஓர் மருந்து
வாழைப்பழத்தை நன்கு குழைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த விழுதை கால் பாதங்களில் நன்கு தேய்த்து ஒரு பற்று போட வேண்டும். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து கால்களை நன்கு கழுவி வெது வெதுப்பான நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின் கால்களை ஒரு சுத்தமான துணியைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். தினந்தோறும் இந்த முறையை பின்பற்றினால் பாத வெடிப்பில் இருந்து விடுபடலாம்.
பாத வெடிப்பு நீங்க தேன் மருந்து
ஒரு கப் தேனை நீரில் கலந்து அந்த கலவையில் கால்களை பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு கால்களை நன்கு கழுவ வேண்டும். தினமும் இந்த முறையை பின்பற்றினால் கால் பாத வெடிப்பு நீங்கி விடும்.
பாத வெடிப்பு நீங்க எலுமிச்சைபழம் மற்றும் வெள்ளை சர்க்கரை மருந்து
எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். அந்த பாதி பழத்தை வெள்ளை சர்க்கரையில் தொட்டு கால் பாத வெடிப்பு உள்ள இடத்தில தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். தினமும் பத்து நிமிடங்கள் இதைச் செய்தால் பாத வெடிப்பு பறந்து விடும்.
பாத வெடிப்பு நீங்க கற்றாளை மருந்து
கால்களை வெது வெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு கற்றாளை ஜெல்லை கால்களில் தடவி பின் கால் உரையை மாட்டிக் கொண்டு இரவில் தூங்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து கால்களை நன்கு கழுவி சுத்தம் செய்து துடைத்து ஈரத்தை போக்க வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலனைக் காணலாம்.

Sri Maha Yohini Beedam
Herbal Research Centre


நன்றி

Wednesday, 31 October 2018

வீட்டில் செல்வம் பெருக... நமது வீட்டில் செல்வமும், சந்தோஷமும் எப்பொழுதும் நிலைத்திருக்க...

நமது வீட்டில் செல்வமும், சந்தோஷமும் எப்பொழுதும் நிலைத்திருக்க நாம் செய்ய வேண்டிய மிகச்சிறந்த பூஜை குபேர லக்ஷ்மி பூஜையாகும். இந்த பூஜையை செய்வதன் மூலம் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருளையும்,மகாலட்சுமியின் அருளையும் ஒன்று சேர பெறமுடியும். மிக மிக எளிதான இந்த பூஜையை செய்வதனால் கிடைக்கும் பழங்கள் மிக மிக பெரியதாகும். இந்த குபேர லட்சுமி பூஜையை எப்படி செய்வதென்று பார்ப்போம் வாருங்கள்.
இந்த பூஜையை செய்ய நாம் இரண்டு நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதாவது இந்த பூஜையை ஒன்பது வாரங்களோ, அல்லது ஒன்பது மாதங்களோ ஒரே நாட்களில் செய்யப்பட வேண்டும் எனவே இதை செய்ய நாம் சரியான நாளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது ஒன்பது வாரங்கள் செய்ய போகிறோம் என்றால் வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யலாம், அல்லது ஒன்பது மாதங்கள் செய்ய போகிறோம் என்றால் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி நாட்களிலோ அல்லது அமாவாசை நாட்களிலோ இதை செய்யலாம். இந்த பூஜையை ஒருவரே தான் தொடர்ந்து செய்ய வேண்டும். ஆண், பெண் என எவர் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். ஒருவேளை அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் அந்த குடும்பத்தை சேர்ந்த வேறொருவர் செய்யலாம்.
இரண்டாவது நிபந்தனை இதை செய்ய ஒரே மாதிரியான நாணயங்கள் 81 எடுத்துக்கொள்ள வேண்டும் அந்த நாணயங்கள் ஒரு ரூபாயாகவோ அல்லது வேறு எந்த நாணயமாக இருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் அந்த 81 நாணயங்களும் ஒரே மதிப்பிலானவையாக இருக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினம் என நீங்கள் பூஜை செய்யத் தேர்வு செய்த நாளில், அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்றுங்கள்.
பூஜை எந்தவித தடையும் இல்லாமல் நடைபெறவும், வீட்டில் செல்வம் சேரவும் முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபடுங்கள்.
அந்த நாளில் நல்ல நேரத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு பலகையின் மீது முன்பக்கம் படத்தில் தரப்பட்டிருப்பது போன்று ஒரு கட்டத்தை குங்குமத்தால் வரைந்துக்கொள்ளுங்கள், எண்களை அரிசி மாவால் எழுதுவதும் சிறந்தது. திருமகளைக் குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள “ஸ்ரீ’ எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம்.

இதுவே குபேர யந்திரக் கோலம். அடுத்து, கட்டங்களில் எழுதப்பட்டுள்ளது எழுத்துக்களுக்குப் பக்கத்தில் கட்டத்திற்கு ஒன்று வீதம் ஒன்பது நாணயங்களை வையுங்கள். எழுத்தை அழித்தோ, மறைத்தோ வைக்கக்கூடாது. எனவே யந்திரத்தை வரையும் போதே அதற்கு ஏற்றபடி வரைந்து கொள்ளுங்கள்.
நாணயம் மகாலட்சுமிக்கு அடையாளம் இப்போது குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதிகம்.
இனி, லட்சுமி குபேர் யந்திரத்தை நீங்கள் பூஜிக்க கொஞ்சம் உதிரி பூக்களை யுடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
யந்திரத்தின் முன் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஒன்றினை ஏற்றிவையுங்கள்.
“தாயே மகாலட்சுமி, மனதார உன்னை வணங்கும் எங்கள் மனையில் மங்களங்கள் யாவும் பெருக வேண்டும். மங்காத செல்வம் சேரவேண்டும். என்றென்றும் உன்னரும் நீங்காது இருக்க வேண்டும்!’ என்று மனதார வேண்டுங்கள்.

மகாலட்சுமியே போற்றி!
மங்கள லட்சுமியே போற்றி!
தீபலட்சுமியே போற்றி!
திருமகள் தாயே போற்றி!
அன்னலட்சுமியே போற்றி!
கிருக லட்சுமியே போற்றி!
நாரண லட்சுமியே போற்றி!
நாயகி லட்சுமியே போற்றி!
ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி!

என்று சொன்னவாறே சிறிய பூவை நீங்கள் வரைந்திருக்கும் குபேர யந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் போடுங்கள்.
வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி!
குலம் செழிக்கச் செய்திடுவாய் குபேரனே போற்றி!
செல்வங்கள் தந்திடுவாய் சிவன் தோழா போற்றி!
உளமாரத் துதிக்கின்றோம் உத்தமனே போற்றி போற்றி!
இந்தத் துதியைச் சொல்லி குபேரனைக் கும்பிடுங்கள்.தூப, தீபம் காட்டுங்கள். சர்க்கரை கலந்த பால் அல்லது பால் பாயசம் நிவேதனம் செய்யுங்கள்.அவ்வளவுதான். பூஜை செய்தாயிற்று. அன்று மாலை உங்களால் இயன்ற அளவுக்கு மங்களப் பொருள்களை பிறருக்கு வைத்துக் கொடுங்கள். வசதி குறைவாக இருப்பின் இதனை ஒன்பதாவது வார முடிவில் தந்தாலும் போதும்.
பூஜை செய்த அன்று மாலை ஏதாவதொரு பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரை தரிசியுங்கள். மறுநாள், குபேர யந்திரத்தில் வைத்து பூஜித்த காசுகளை எடுத்து பத்திரப்படுத்தி வையுங்கள். ஒரு துணியை நனைத்து அதனால் குபேர யந்திரக் கோலத்தைத் துடைத்து விடுங்கள்.
அடுத்த வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாளில் முன்புபோலவே குபேர யந்திரம் வரைந்து வேறு காசுகளை வைத்து பூஜித்து, மாலையில் கோயிலுக்குச் செல்வதுவரை எல்லாவற்றையும் செய்யுங்கள்.
இப்படி ஒன்பது வெள்ளிக்கிழமைகள் அல்லது ஒன்பது பௌர்ணமிகள் பூஜை செய்து முடித்ததும், அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று, சேர்ந்திருக்கும் எண்பத்தொரு காசுகளையும் எடுத்துக் கொண்டு சென்று ஏதாவது ஒரு சிவன் கோயில் உண்டியலிலோ அல்லது பெருமாள் கோயிலில் தாயார் சன்னதியில் உள்ள உண்டியலிலோ செலுத்துங்கள். சிவபெருமானே குபேரனுக்கு எல்லா செல்வஙகளையும் அளித்தவர். அதோடு அவரை நண்பனாகவும் ஏற்றவர். எனவே சிவன் கோயிலில் செலுத்துவது சிறந்ததாகும்.
அன்றையதினம் உங்களால் இயன்ற அளவு மங்களப் பொருட்களை பெண்களுக் வைத்துக் கொடுங்கள். அன்றைய தினம் மகாலட்சுமியே ஏதாவது ஒரு உருவில் அதனை பெற வருவாள் என்பது நம்பிக்கை. எனவே, குறைவாகக் கொடுத்தாலும் மனதாரக் கொடுங்கள்.ஒன்பதாவது வார (மாத) பூஜை முடிந்த நாள் முதல் உங்கள் வீட்டில் நிச்சயம் செல்வவளம் சேரும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறையும். வருடத்துக்கு ஒருமுறை இந்த லட்சுமி குபேர யந்திர பூஜையைச் செய்யுங்கள். குறையாத செல்வதும், நிறைவான நிம்மதியான வாழ்வும் நிச்சயம் கிட்டும்.


Sri Maha Yohini Sathru Samkara Beedam
SRI LA SRI ARULMOZHI AMMA
Mannargudi.


To Contact Asramam: +91-7845458791
Watsapp: +91-9688876966

*Appointments only on Saturday and Sunday

Thursday, 4 October 2018

முதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம்.


ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு:-



வல்லூறு

அஷ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்    
        
ஆந்தை

திருவாதிரை,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்   
             
காகம்

உத்தரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்   
                          
கோழி

அனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்ராடம்    
                       
மயில்

திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதி

இதுதான் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.

வளர்பிறை

அ, ஆ - வல்லூறு (ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.)

இ, ஈ - ஆந்தை

உ, ஊ - காகம்

எ, ஏ - கோழி

ஒ, ஓ - மயில்

தேய்பிறை

அ, ஆ - கோழி

இ, ஈ - வல்லூறு

உ, ஊ - ஆந்தை

எ, ஏ - மயில்

ஒ, ஓ - காகம்

         ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்

அரசு  - 100% பலம்
ஊண் - 80%      “
நடை -   50%    “
துயில் - 25%    “
சாவு     - 0%     “

         ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.

       இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை,  புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், மிகவும் Riskஆன ஆப்பரேஷன், மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.

வளர்பிறை - படுபட்சி நாட்கள்

வல்லூறு - வியாழன், சனி

ஆந்தை - ஞாயிறு, வெள்ளி

காகம் - திங்கள்

கோழி - செவ்வாய்

மயில் - புதன்

தேய்பிறை படுபட்சி நாட்கள்

வல்லூறு -செவ்வாய்

ஆந்தை -திங்கள்

காகம் -ஞாயிறு

கோழி -வியாழன், சனி

மயில் -புதன், வெள்ளி

       அடுத்து இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும். அவை கீழ்கண்டவாறு:-

வளர்பிறை

பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு - ஞாயிறு, செவ்வாய்

ஆந்தை - புதன், திங்கள்

காகம் - வியாழன்

கோழி - வெள்ளி

மயில் - சனி

இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு - வெள்ளி

ஆந்தை -ஞாயிறு

காகம் -ஞாயிறு, செவ்வாய்

கோழி - திங்கள், புதன்

மயில் -வியாழன்

தேய்பிறை

பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு -வெள்ளி

ஆந்தை - வியாழன்

காகம் -புதன்

கோழி - ஞாயிறு, செவ்வாய்

மயில் - திங், சனி

இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு -ஞாயிறு, செவ்வாய்

ஆந்தை - புதன்

காகம் - வியாழன்

கோழி - திங்கள், சனி

மயில் -வெள்ளி

      இந்த படு பட்சி நாட்களில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என்ற நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜமும் இல்லை. அதே நேரத்தில் ஊண் பட்சி நாட்களில் சாவு என்ற நிலையில் இருந்தாலும் அது பலமிழந்ததாக ஆகாது.

    அடுத்து பட்சிகளின் பொதுவான பல நிர்னயங்களைப் பார்ப்போம். பட்சிகளின் பலம் இறங்குமுகமாக கீழ் கண்டவாறு:
1) காகம்
2) ஆந்தை
3) வல்லூறு
4) கோழி
5) மயில்
அதாவது காகம் எல்லாவற்றிலும் பலமிக்கது என்றும் மயில் மிகவும் பலவீனமானது என்று இதன் மூலம் முடிவுக்கு வரலாம்.

        இது எதற்கு என்றால் உங்களது பட்சி மயில் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங்களது பட்சியாகக் கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம். ஆனால் பலவீனமான உங்கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு பட்சியாக இருந்தால் உங்களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன் படுத்தலாம் என்பதற்காகச் சொல்கிறேன். பிறருக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.

           அந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள்,  அல்லது ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய்ய நினைப்பவர்கள், பஞ்ச பட்சி தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும், எதிராளிக்கு படு பட்சி வரும்படி பார்த்துக் கொள்வார்கள். அல்லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள். தீமைக்கு மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.

                  தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள், (வீண், வம்பு, வழக்கு என்று மாட்டிக் கொண்டவர்கள்,  அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க நினைப்பவர்கள்) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன்மை அடையலாம். ஊண் பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய்தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.

படு பட்சி நாட்கள் என்பது மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கக் கூடியது என்று பார்த்தோம். இதனுடைய கொடிய பலன்களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள். ஓம் நமசிவய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து விட்டு சென்றால் அதன் கடுமை குறையும் என்று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம  என்று 125 வகையில் மாற்றி சொல்லலாம். பலன் ஒன்றுதான்.) ஆயினும் முழுமையாக படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என்பது என் கருத்து.

நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கோளறு திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த  திருஞானசம்பந்தரே அதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்.

பறவைகள் ஐந்து. அதன் தொழில்கள் ஐந்து என்று ஏற்கனவே பார்த்தோம். எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம். ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.

உண்மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும். இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும். எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும்.

அதிகம் குழப்ப விரும்பவில்லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

வல்லூறு - வளர்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், கோழி

வல்லூறு - தேய் பிறை

நட்பு : மயில், காகம்
பகை : ஆந்தை, கோழி

ஆந்தை - வளர்பிறை

நட்பு : வல்லூறு, காகம்
பகை : மயில், கோழி

ஆந்தை - தேய்பிறை

நட்பு : கோழி, காகம்
பகை : வல்லூறு, மயில்

காகம் - வளர்பிறை

நட்பு : ஆந்தை,கோழி
பகை : வல்லூறு, மயில்

காகம் - தேய்பிறை

நட்பு : ஆந்தை, வல்லூறு
பகை : மயில், கோழி

கோழி - வளர்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு

கோழி - தேய்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு

மயில் - வளர்பிறை

நட்பு : வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்

மயில் - தேய்பிறை

நட்பு :  வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்

ஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும், படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும் இரண்டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய்து உள்ளேன்.

நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.

“அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது போல் மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோக்காரகன் என்று பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள்.மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.

உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.

உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும்,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி  நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள். “சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள்.

பஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும்.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், ஜென்ம நட்சத்திரம்தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழ் எழுத்துக்களை சித்திர எழுத்துக்கள் என தமிழறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் வடிவமுடைய “அ,இ,உ,எ,ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்கள் என்ன வடிவத்தில் அமைந்துள்ளனவோ,அதே வடிவத்தையொத்த பறவைகள் பஞ்ச பட்சிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

அ - வல்லூறு
இ - ஆந்தை
உ - காகம்
எ - கோழி
ஒ - மயில்.

மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது,அந்த பஞ்ச பூதங்களின் செயல் பாட்டையே,பஞ்ச பட்சி சாஸ்திரம் விளக்குகிறது.

நிலம் - வல்லூறு
நீர் - ஆந்தை
நெருப்பு - காகம்
காற்று - கோழி
ஆகாயம் - மயில்.

         பஞ்ச பூதங்களைக்கட்டுப்படுத்தும் ஆற்றல் பஞ்சாக்ஷரம் என்னும் சிவ மந்திரத்திரத்திற்கு உண்டு. எனவே பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவனை யாராலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை இந்த சாஸ்திரம் ரகசியமாக வெளிப்படுத்துகிறது.

ந - வல்லூறு
ம - ஆந்தை
சி - காகம்
வ - கோழி
ய - மயில்.

பஞ்சாக்ஷர மந்திரத்திற்குரிய தேவதையான சிவபெருமானே,இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும்,முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும்,அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.

1)   உடலிலிருந்து நோய் நீக்குதல்
2)   பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்
3)   மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்
4)   பிறர் மனதை கட்டுப்படுத்துதல்
5)   எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்
6)   பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்
7)   போட்டிகளில் வெற்றியடைதல்
8)   எதிரிகளை வெல்லுதல்
9)   தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்
10) ஆருட பலன் கூறுதல்
11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்
12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்
13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்..

Rasamani Uses

எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு

கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு

வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்

வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...